ஒவ்வொரு வாக்காளருக்கும் தபால்மூலம் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றை அனுப்பி வைக்கின்றபோது வெளிநாடு சென்றுள்ள வாக்காளர்கள் என அறிக்கையிடப்பட்டிருப்பின் “வெளிநாடு சென்ற வாக்காளர் ஒருவர் என அறிவிக்கப்பட்டுள்ளது” என்ற குறிப்பு இடப்பட்டிருக்கும்.
இத்தகைய குறிப்புக்களில் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையில் இடப்பட்டுள்ள வாக்காளர்கள் வெளிநாட்டில் இருந்து வருகை தந்திருப்பின் வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்கின்ற போது தனது செல்லுபடியான வெளிநாட்டுக் கடவுச்சீட்டினை எடுத்துச் செல்லல் அவசியமாகும். ஏனெனில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்ததாக நிரூபிப்பதற்கு அது பயனுள்ள ஒன்றாதலால் ஆகும்.
வெளிநாட்டிலிருந்து வருகை தந்துள்ள போதிலும் கடவுச்சீட்டு உங்கள் வசம் இல்லாத சந்தர்ப்பத்திலும் தேசிய அடையாள அட்டையொன்றை அல்லது வேறு செல்லுபடியான அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையொன்றைப் பயன்படுத்தி உங்களது ஆளடையாளத்தை அத்தாட்சிப்படுத்த முடியுமெனின் உங்களுக்கு சாதாரண வாக்குச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்வதற்கான உரித்துண்டு. வெளிநாடு சென்றிருந்து வருகை தந்துள்ள வாக்காளர்களுக்கு கடவுச்சீட்டு இல்லையெனில் அதுபற்றி கிராமஅலுவலர் முன்கூட்டியே அறிவித்து உடனடியாக வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லுதல் பொருத்தமாகும். வாக்களிப்பு நிலையத்தில் சிரேட்ட தலைமை தாங்கும் அலுவலருக்கு உரிய விடயங்களை அறிவித்து அவரின் விசாரணைகளுக்குப் பதிலளித்து தேவைப்படின் வெளிப்படுத்துகைகளையும் நிரப்பியதன் பின்னர் உங்களுக்கு வாக்குச்சீட்டொன்றைப் பெற்றுக் கொள்ளலாம். ஏதேனும் ஒரு காரணத்தில் வாக்குச்சீட்டொன்றை வழங்குதல் நிராகரிக்கப்படின் அது தொடர்பாக கிராம அலுவலருக்கு பிரதேச செயலகத்தின் இணைப்பு அலுவலருக்கு / தேர்தலின் மேற்பார்வை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலருக்கு / மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்திற்கு அது தொடர்பாக துரிதமாக முறைப்பாடு செய்தல் வேண்டும். இதனை செய்ய முடிவது நேரக்காலத்தோடு வாக்களிப்பு நிலையத்திற்குச் சென்றால் மாத்திரமே.
எக்காலத்திலும் வெளிநாடு சென்றிராத வாக்காளர் ஒருவருக்கும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டையொன்றில் “வெளிநாடு சென்றிருப்பதாக” குறிப்பீடு இடப்பட்டிருப்பின் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்கப்பெற்றிருந்தால் கிராம அலுவலருக்கு / தேர்தல்கள் அலுவலகத்திற்கு அறிவித்தல் அவசியமாகும்.
முன்கூட்டியே அவ்வறிவித்தலை மேற்கொள்ள முடியாதெனில் தேர்தல் தினத்தன்று வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்வதற்கு முன்னர் கிராம அலுவலருக்கு தகவல்களை அறிவித்து வாக்களிப்பு நிலையத்திற்குச் செல்லுதல் வேண்டும்.
வாக்களிப்பு நிலையத்தில் வாக்குச்சீட்டொன்றை விநியோகிக்க முன்னர் வெளிப்படுத்துகைப் பத்திரமொன்றை நிரப்பிக் கொடுக்குமாறு அறிவித்தால் அதனை நிரப்புதல் வேண்டும்.
இத்தகைய வாக்காளர் ஒருவருக்கு வாக்கினைப் பிரயோகிப்பதில் பிரச்சினை ஏதும் இருப்பின் உடனடியாக கிராம அலுவலர் / பிரதேச செயலகத்தின் இணைப்பு / அலுவலர் வாக்களிப்பு நிலைய மேற்பார்வை உதவி தெரிவத்தாட்சி அலுவலர் / மாவட்ட தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவுறுத்தல் வேண்டும்.
ஆதாரம் – https://elections.gov.lk/ta/elections/faq_elections_T.html
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.