INTRO
பல்வேறு நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை முன்னிட்டு பரிசுகள் மற்றும் இலவச டேட்டா வழங்குவதாக அவ்வப்போது சமூக ஊடகங்களில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றமையை நாம் காண்கின்றோம். இருப்பினும், பெரும்பாலான சந்தர்ப்பங்களில் இந்த தகவல்கள் போலியானவையாகவே காணப்படுகின்றன.
இதுபோன்ற மோசடிகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு செய்திகள் வந்தாலும், மக்களை கவரும் விதத்தில் பகிரப்பட்டு வரும் விளம்பரங்களினால் பொதுமக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றனர்.
இதன் காரணமாக இவ்வாறான போலி தகவல்கள் தொடர்பில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
D͏i͏a͏l͏o͏g͏ நிறுவனத்தினால் நடத்தப்படும் சிறப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்களால் வழங்கப்படும் சிறிய கணக்கெடுப்பிற்கான படிவத்தை பூர்த்தி செய்வதன் மூலம் i͏P͏h͏o͏n͏e͏ 1͏5͏ P͏R͏O͏ ஒன்றை பெறலாம் என்று சமூக ஊடகங்களில் பதிவொன்று பகிரப்பட்டு வருகின்றது.
Fact Check (உண்மை அறிவோம்)
இது தொடர்பில் Dialog உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் ஆராய்ந்த போது, கணெக்கெடுப்பு படிவம் ஒன்றை பூர்த்தி செய்து அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு i͏P͏h͏o͏n͏e͏ 1͏5͏ P͏R͏O͏ கையடக்கதொலைபேசி வழங்கப்படுவதாக எந்தவொரு பதிவும் வெளியிடப்படவில்லை என்பதனை நாம் உறுதிப்படுத்தினோம்.
மேலும் இது குறித்து நாம் Dialog நிறுவனத்திடம் வினவியபோது அது அவர்களின் வர்த்தக நாமத்தை பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்ட பதிவு என தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், இந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள சிங்கள மொழியின் பாவனை முறை வேறுபட்டதாக காணப்படுவதோடு பெரும்பாலும் ஆங்கில மொழியில் உள்ள பதிவு Translator ஐ பயன்படுத்தி நேரடியாக மொழிபெயர்க்கப்பட்டு மோசடிக்காரர்களால் போலியாக பதிவேற்றம் செய்யப்பட்ட ஒரு பதிவு என்பதுடன், இவ்வாறானவர்கள் பெரும்பாலும் வெளிநாட்டவர்களாகவே காணப்படுகின்றனர்.
இவேளை புதுவருடம், கிறிஸ்மஸ், தீபாவளி போன்ற பண்டிகை நாட்கள் மற்றும் பிரபலமான வர்த்தக நிறுவனங்களின் ஆண்டு விழாக்களை பயன்படுத்தி மோசடிக்காரர்களினால் மக்களை ஏமாற்றும் பல பதிவுகள் தொடர்ந்தும் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிகின்றது.
மேலும் Dialog சிம் மூலம் இலவச டேட்டா வழங்கப்படுவதாக தெரிவக்கப்பட்ட மற்றுமொரு பேஸ்புக் பதிவு பின்வருமாறு
மேற்குறிப்பிட்ட பதிவின் உண்மையை கண்டறியுமாறு பலர் விடுத்த கோரிக்கைகளுக்கு அமைய நாம் இது தொடர்பில் ஆராய்ந்தோம்.
Fact Check (உண்மை அறிவோம்)
மேலே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பைக் கிளிக் செய்த பிறகு, அது உண்மை என மக்களை நம்ப வைக்கும் விதத்தில் இலவச டேட்டாவைப் பெற்றதாகக் கூறும் போலியான பதில்களைக் காணலாம். Archived Link
Free Data, Free Gifts வழங்குவதாக தெரிவித்து அவ்வப்போது பகிரப்படும் இதுபோன்ற பதிவுகள் அனைத்தும் குறிப்பிட்ட உத்தியோகபூர்வ நிறுவனங்களால் விளம்பரப்படுத்தப்படாதவை எனவும் அவை அனைத்தும் போலியான தகவல்கள் என்பதும் உறுதிசெய்யப்பட்டது.
இவ்வாறான பதிவுகளில் வழங்கப்படும் பரிசுகள் அல்லது விபரங்கள் பற்றிய தகவல்களைக் அறிந்துகொள்வதற்காக வழங்கப்பட்ட இணைப்புகளை (Web links) கிளிக் செய்வதன் மூலம், உங்களுக்கு தெரியாமலேயே சில சேவைகள் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் தானாக செயல்படுத்தப்படும்.
இதன்மூலம் உங்கள் கையடக்கத் தொலைபேசியில் உள்ள பணத்தை கூட நீங்கள் இழக்க நேரிடும் (உ.ம் மொபைல் Games போன்ற பல்வேறு Apps).
மேலும், அவ்வாறான பரிசுகளைப் பெற உங்கள் மதிப்புமிக்க தரவு கோரப்படுவதுடன், மேலும் அந்த இணைப்புகளுக்கு உட்சென்று விண்ணப்பங்களை நிரப்புவதன் மூலம், உங்கள் மின்னஞ்சல் முகவரிகள், தொலைபேசி எண்கள், உங்கள் விருப்பு வெறுப்புகள் போன்ற பல்வேறு தகவல்கள் பெறப்பட்டு Digital Marketing போன்ற தரவு திரட்டும் நிறுவனங்களுக்கு விற்கப்படுகின்றன. இதை விட மேலும் ஆபத்தான விடயங்களும் அவ்வாறான செயற்பாடுகள் மூலம் இடம்பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
அதேபோன்று குறிப்பிட்ட இணையதளங்களுக்குள் நுழையும் பயனர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், பணம் சம்பாதிப்பது (Click Baits) போன்றவையும் மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான Links மூலம் பல்வேறு இணையதளங்களை அணுகும் போது கணினி வைரஸ்கள் மூலம் உங்கள் சாதனங்களில் உள்ள தரவுகள் திருடப்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் அதிகமாகவே காணப்படுகின்றது.
எனவே, பரீட்சையமற்ற, சரிபார்க்கப்படாத Links மூலம் பரிசுகளை வழங்குவதாகக் கூறும் இவ்வாறான இணையதளங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பதே மிகவும் சிறந்த விடயம்.
பிரபலமான வர்த்தக நிறுவனங்கள் இவ்வாறான இலவச பரிசுப்பொருட்களை வழங்குவதாக இருந்தால் அவர்கள் அது தொடர்பில் அவர்களின் உத்தியோகபூர்வ இணையத்தளம், சமூக ஊடக பக்கங்களில் அறிவிப்பார்கள் அல்லது பிரதான ஊடகங்களில் அது குறித்த விளம்பரங்கள் வெளியிடப்படும் என்பதனை மறவாதீர்கள்.
அது தவிர பிரபல வர்த்தக நாமங்களை பயன்படுத்தி போலியாக பகிரப்படும் விளம்பரங்கள் மக்களை ஏமாற்றும் நோக்கத்திற்காக மாத்திரமே மேற்கொள்ளப்படும் ஒன்றாகும்.
அத்துடன் phishing scam மூலமும் மக்கள் ஏமாற்றப்படுகின்றமை தற்போது அதிகரித்து வருகின்றது.
Phishing Attack என்றால் என்ன?
Phishing Attack என்பது ஒருவரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்கான முயற்சியாகும் அல்லது ஏமாற்றும் நோக்கமுடைய மின்னஞ்சல்கள், மெசேஜ்கள், விளம்பரங்கள் அல்லது நீங்கள் ஏற்கெனவே உபயோகித்த தளங்களின் போலி இணைப்புகளைப் பயன்படுத்தி ஆன்லைன் கணக்குகளில் உள்நுழைவதாகும்.
உதாரணத்திற்கு, Phishing மின்னஞ்சல் உங்கள் வங்கியில் இருந்து வருபவை போன்று இருக்கக்கூடும். அத்துடன் இதன்மூலம் உங்கள் வங்கி கணக்கு தொடர்பான தனிப்பட்ட தகவல்களையும் கேட்கக்கூடும்.
அண்மையில் இது தொடர்பில் நாம் வெளியிட்ட அறிக்கையிடலை பார்வையிடவும்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
பொதுவாக நாம் இவற்றை SCAM என்றே அழைக்கிறோம், மேலும் இதுபோன்ற தகவல்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவதானத்துடன் இருக்குமாறும், இதுபோன்ற போலி தகவல்களால் ஏமாற வேண்டாம் எனவும் கேட்டுக்கொள்கிறோம்.
<iframe src=”https://www.facebook.com/plugins/video.php?height=476&href=https%3A%2F%2Fweb.facebook.com%2Ffactcrescendosl%2Fvideos%2F937476194284657%2F&show_text=false&width=267&t=0″ width=”267″ height=”476″ style=”border:none;overflow:hidden” scrolling=”no” frameborder=”0″ allowfullscreen=”true” allow=”autoplay; clipboard-write; encrypted-media; picture-in-picture; web-share” allowFullScreen=”true”></iframe>
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.