முல்லைத்தீவு பழைய செம்மலை நீராவியடி பிள்ளையார் ஆலய வளாகத்தினுள் அடாத்தாக குருகந்த புராண ரஜமகா பௌத்த விகாரை எனும் பெயரில் விகாரை அமைத்து அங்கு தங்கியிருந்த சர்ச்சைக்குரிய பௌத்த பிக்குவான மேதாலங்கார கீர்த்தி புற்று நோய் காரணமாக கொழும்பில் 21 ஆம் திகதி (21.09.2019) காலை காலமானார்.

அவருடைய பூதவுடலை முல்லைத்தீவுக்கு கொண்டு வந்து நீராவியடி பிள்ளையார் ஆலயத்தை அண்மித்த பகுதியில் இறுதி கிரியைகளை முன்னெடுத்து உடலை தகனம் செய்ய ஏற்பாடுகள் நடைபெற்றன.

இதனால் குறித்த பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டிருந்தது.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link | News Link | Archive Link

Samayam Tamil பேஸ்புக் பக்கத்தில், “ இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதல்- ஐ.நா. நடவடிக்கை எடுக்குமா? ” என்று குறிப்பிட்டுள்ளது. புகைப்படத்தில் நீராவியடிப்பிள்ளையார் ஆலயத்தின் புகைப்படம் உபயோகித்துள்ளனர். இதனுடன் தமிழ் சமயம் செய்தி லிங்கை இதனுடன் வெளியிட்டிருந்தனர். குறித்த பதிவு கடந்த செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி (26.09.2019) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

Fact Check (உண்மை அறிவோம்)

முதலில் அவர்கள் வெளியிட்டிருந்த குறித்த செய்தியை முழுமையாக படித்தோம்.

அதில் தலைப்பில் சொன்னது போல் செய்தியில் எதுவும் குறிப்பிடப்படவில்லை.

தலைப்பில் இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதல்- ஐ.நா. நடவடிக்கை எடுக்குமா? என்பதற்கும். குறிப்பிட்ட செய்தியில் அவர் தெரிவித்திருப்பதற்கும் எந்த தொடர்பும் இல்லை. ‘’ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் அமைக்கவும், அதுவரை இலங்கையில் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகவும், கண்ணியமாகவும் வாழ்வதை உறுதி செய்யவும் ஐக்கிய நாடுகள் அமைப்பும், உலக நாடுகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும்," என ராமதாஸ் தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளதாக, செய்தியின் உள்ளே குறிப்பிட்டுள்ளனர்.

நீராவியடிப்பிள்ளையார் கோயில் ஏற்பட்ட பிரச்னைக்கு ஐ.நா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்பது அவர்களின் செய்தியை முழுமையாக வாசிக்கும் பொழுதே விளங்கிக்கொள்ள முடிகின்றது.நீராவியடிப்பிள்ளையார் சம்பவம் குறித்து ராமதாஸ் அறிக்கை தொடர்பாக பிற ஊடகங்களில் வெளிவந்த செய்தியை ஆய்வு செய்தோம்.

இணையத்தளத்தில் வெளியாகி இருந்த செய்திகளின் தலைப்பில் யாரும் ஐ.நா நடவடிக்கை குறித்து தலைப்பில் தெரிவிக்கவில்லை.

ராமதாஸ் அறிக்கையில் ஈழத்தமிழர்களுக்கு தமிழீழம் அமைப்பது குறித்தே தனது அறிக்கையில் தெரிவித்துள்ளதோடு, போர் குற்றங்கள் தொடர்பாகவே ஐக்கிய நாடுகள் சபை பற்றி அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதலா

குறித்த தலைப்பில் உள்ளவாறு முல்லைதீவில் அமைந்துள்ள நீராவியடி பிள்ளையார் கோயில் மீது தாக்குதல் மேற்கொள்ளப்படவில்லை. குறித்த சம்பவம் தொடர்பாக இலங்கை பத்திரிகையில் வெளிவந்த செய்திகள்.

இலங்கை இணையத்தளங்களில் வெளியான செய்திகள்

மேற்கொண்ட தேடுதல் ஆலயத்தின் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, ஆலயத்தின் தீர்த்த கேணியிற்கு அருகில் இறந்த பௌத்த பிக்குவின் உடலை தகணம் செய்தமையே நீராவியடி பிள்ளையார் ஆலய அருகில் பதற்றநிலை ஏற்படக் காரணமாக அமைந்துள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

முடிவு

மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில், மேற்கண்ட பேஸ்புக் பதிவு மற்றும் செய்தியின் தலைப்பில் தவறு உள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

Avatar

Title:இலங்கை தமிழர் கோயிலில் சிங்கள இனவெறித் தாக்குதலா?

Fact Check By: Nelson Mani

Result: False Headline