வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்திய 2024 பாராளுமன்றத் தேர்தல்

General Election

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 2024 பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று வெற்றியை தன்வசப்படுத்தியுள்ளது.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 10 ஆவது பாராளுமன்றத்திற்கான பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் தேர்தலின் வாக்களிப்பு நேற்று (14) இடம்பெற்றது.

1981 ஆம் ஆண்டின் 01 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் கீழ், பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் நவம்பர் 14 திகதி  தேர்தல் தினம் அறிவிக்கப்பட்டு  வர்த்தமானி வௌியிடப்பட்டது.

பாராளுமன்றத்திற்கு 225 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக மொத்தமாக 8,821 வேட்பாளர்கள் இம்முறை போட்டியிட்டதாக, தேர்தல் ஆணைக்குழு 2024 ஒக்டோபர் 12 ஆம் திகதி வெளியிட்ட ஊடக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த ஊடக அறிக்கையை காண்க

இதில் 5,464 வேட்பாளர்கள் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளாகவும், 3,357 பேர் சுயேட்சை குழுக்களின் பிரதிநிதிகளாகவும்  போட்டியிட்டனர்.

தேர்தல் ஊடாக 196 உறுப்பினர்களும், தேசியப் பட்டியல் ஊடாக 29 உறுப்பினர்களும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் 171,40,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை 22 தேர்தல் மாவட்டங்களில் 13,000 இற்கும் அதிக வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இம்முறை தேர்தலில் பிரதான கட்சிகளை தவிர்த்து பல சுயேட்சை குழுக்கள் போட்டியிட்டமையையும் எம்மால் காண முடிந்தது.

இதற்கு முந்தைய பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகளின் அடிப்படையில் வெளியிடப்பட்ட மாதிரி வரைபுப்படம் பின்வருமாறு

2024 பாராளுமன்றத் தேர்தலில் 22 தேர்தல் மாவட்டங்களில் பெற்றுக்கொண்ட மொத்த வாக்குகள் மற்றும் ஆசன ஒதுக்கீடு

1.கண்டி மாவட்டத்தின் –  இறுதி தேர்தல் முடிவுகளின் படி

தேசிய மக்கள் சக்தி 500,596 வாக்குகளுடன் 9 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 145,939 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களையும்,

புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

2.மட்டக்களப்பு மாவட்டத்தின் –  இறுதி தேர்தல் முடிவுகளின் படி இலங்கை தமிழ் அரசுக் கட்சி 96,975 வாக்குகளை பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், தேசிய மக்கள் சக்தி 55,498 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

3.கொழும்பு மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 788,636 வாக்குகளைப் பெற்று 14 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 208 249 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது

4.கம்பஹா மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 898,759 வாக்குகளைப் பெற்று 16 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன் ஐக்கிய மக்கள் சக்தி 150,445 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

5.புத்தளம் மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 239,576 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,ஐக்கிய மக்கள் சக்தி 65,679 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

6.யாழ்ப்பாண மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 80,830 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,இலங்கை தமிழரசுக் கட்சி 63,327 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளதுடன்,

அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 27,986 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும் சுயேட்சை குழு17 1 ஆசனத்தையும் கைப்பற்றியுள்ளது.

7.இரத்தினபுரி மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 368,229 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,ஐக்கிய மக்கள் சக்தி 133, 041 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

8.குருநாகல் மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 651,476 வாக்குகளைப் பெற்று 12 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 189,394 வாக்குகளைப் பெற்று 3 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

9.கோகாலை மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 312,441 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 109,691 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

10.அநுராதபுரம் மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 331,692 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,ஐக்கிய மக்கள் சக்தி 98,176 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது.

11.வன்னி  மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 39,894 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,தேசிய மக்கள் சக்தி 32,232 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது, இலங்கை தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

12.களுத்துறை மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 452, 398 வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 128, 932 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது, புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

13.நுவரெலியா மாவட்டத்தில் –  தேசிய மக்கள் சக்தி 161,167 வாக்குகளைப்பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 101, 589 வாக்குகளைப்பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளது, ஐக்கிய தேசியக் கட்சி 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

14.மாத்தளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 181, 678 ஆசனங்களைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 53,200 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

15.திருகோணமலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 87,031 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 53,058 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளதுடன், இலங்கை தமிழரசுக் கட்சியும் 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

16.பதுளை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 275,180 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 102,958 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களையும், புதிய ஜனநாயக முன்னணி 1 ஆசனத்தையும்  கைப்பற்றியுள்ளது.

17.மொனராகலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 174,730 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 62,014 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

18.மாத்தறை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 317,541 வாக்குகளைப் பெற்று 6 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 74,475 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

19.பொலன்னறுவை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 159,010 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,தேசிய மக்கள் சக்தி 43,822 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளது.

20.ஹம்பந்தோட்டை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 234,083 வாக்குகளைப் பெற்று 5 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 52,170 வாக்குகளைப்பெற்று 1 ஆசனத்தையும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

21.காலி மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 406,428 வாக்குகளைப் பெற்று 7 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன், ஐக்கிய மக்கள் சக்தி 93,486 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தை கைப்பற்றியுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 1 ஆசனத்தை பெற்றுக்கொண்டுள்ளது.

22.திகாமடுல்ல மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி 146,313 வாக்குகளைப் பெற்று 4 ஆசனங்களை கைப்பற்றியுள்ளதுடன்,

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 46,899 வாக்குகளைப் பெற்று 1 ஆசனத்தையும், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 1 ஆசனத்தையும், இலங்கை தமிழரசுக் கட்சி 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.

பாராளுமன்றத் தேர்தலில் கட்சிகள் பெற்றுக்கொண்ட வாக்குகள் மற்றும் ஆசனங்கள் ஒதுக்கப்பட்டடுள்ள விபரம் தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு

அதனடிப்படையில்,

  • தேசிய மக்கள் சக்தி – 6,863,186 வாக்குகள் – 159 ஆசனங்கள்
  • ஐக்கிய மக்கள் சக்தி – 1,968,716 வாக்குகள் – 40 ஆசனங்கள்
  • புதிய ஜனநாயக முன்னணி – 500,835 வாக்குகள் – 05 ஆசனங்கள்
  • ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 350,429 வாக்குகள் – 03 ஆசனங்கள்
  • இலங்கை தமிழரசுக் கட்சி – 257,813 வாக்குகள் – 08 ஆசனங்கள்
  • ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் – 87,038 வாக்குகள் – 03 ஆசனங்கள்

கடந்த  செப்டெம்பர் 21 ஆம் திகதி (2024. 09.21) நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்  முடிவுகளுடன் நேற்றைய தினம் (2024.11.14) இடம்பெற்ற பாராளுமன்றத் தேர்தலை ஒப்பிட்டு நோக்கும் போது இம்முறை மக்கள் பாரிய மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்துள்ளனர் என்பதனை தெளிவாக புரிந்துக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

அந்த வகையில் தமிழ் மக்கள் அதிகளவில் வாழும் மாவட்டங்களின் வாக்கு வீதங்களை பார்க்கும் போது இம்முறை தேர்தல் ஊடாக பாரியளவிலான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்றே கூறவேண்டும்.

அந்த வகையில் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற ஆகிய இரு தேர்தல்களிலும் தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகியனவே பிரதான போட்டிக் கட்சிகளாக பார்க்கப்பட்டன.

அதனடிப்படையில் இந்த இரு கட்சிகளும் இவ்விரு தேர்தல்களிலும் தமிழர்கள் அதிகளவில் வாழும் மாவட்டங்களில் பெற்றுக்கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை வேறுபாட்டை இவ்வாறு அவதானிக்க முடிகின்றது.

நுவரெலியா தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதி தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி105,057 வாக்குகள்161,167 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி201,814 வாக்குகள்101, 589 வாக்குகள்

கண்டி தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதி தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி394,534 வாக்குகள்500,596 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி323,998 வாக்குகள்145,939 வாக்குகள்

யாழ். தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதி தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி27,086 வாக்குகள்80,830 வாக்குகள்  
ஐக்கிய மக்கள் சக்தி121,127 வாக்குகள்15,276 வாக்குகள்

வன்னி தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதி தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி21,412 வாக்குகள்39,894 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி95,422 வாக்குகள்32,232 வாக்குகள்

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதித் தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி38,832 வாக்குகள்55,498
ஐக்கிய மக்கள் சக்தி139,110 வாக்குகள்22,570 வாக்குகள்

பதுளை தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதித் தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி197,283 வாக்குகள்275,180 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி219,674 வாக்குகள்102,958 வாக்குகள்

திருகோணமலை தேர்தல் மாவட்டம்

கட்சி2024 ஜனாதிபதித் தேர்தல்2024 பாராளுமன்றத் தேர்தல்
தேசிய மக்கள் சக்தி49,886 வாக்குகள்87,031 வாக்குகள்
ஐக்கிய மக்கள் சக்தி120,588 வாக்குகள்53,058 வாக்குகள்

மேற்குறிப்பிட்ட தரவுகள் தொடர்பில் அவதானிக்கும் போது  வடக்கு, கிழக்கு, மத்திய மாகாணங்களின் வாக்குபதிவில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதனையும், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குறித்த மாகாணங்களில் இம்முறை  முன்னிலை வகிப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *