மண்ணில் புதைந்த வாகனங்களை காட்டும் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதா? 

Misleading இலங்கை | Sri Lanka

இலங்கையில் கடந்த நாட்களின் இயற்கையின் கோரத் தாண்டவத்தினால் பாரிய அனர்த்தங்கள் ஏற்பட்டதனைத் தொடர்ந்து, இந்த அனர்த்தங்களின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் காணொளியொன்று பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அதன் உண்மை தன்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்பொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

ஶ்ரீலங்கா அங்க மண்ணுக்குள்ள இருக்கு. இங்க லங்கனுங்க தவெகவுக்கு முட்டுக்கொடுத்துட்டு இருக்கானுங்க… என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி கடந்த 2025.11.30 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட காணொளியானது இலங்கையில் எந்த பிரதேசங்களிலாவது இடம்பெற்றுள்ளதா என நாம் பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகளில் ஆராய்ந்த போது அவ்வாறான எந்தவித செய்திகளும் வெளியாகியிருக்கவில்லை.

கடந்த அக்டோபர் மாதத்தில் ஹெய்டியில் பதிவான காட்சிகள்!

எனவே நாம் மேற்குறிப்பிட்ட காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி Reverse Image தேடலுக்கு உட்படுத்தினோம். அதன்போது இதில் காணப்படும் காட்சிகள் கடந்த அக்டோபர் மாதத்தின் இறுதியில், மெலிசா புயலின் தாக்கத்தில் ஹெய்டியில் கடற்கரை நகரமான Petit-Goave-வில் ஏற்பட்ட சேதங்கங்களின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பதனை அறியமுடிந்தது.

அதன்படி அக்டோபர் மாதம் பகிரப்பட்ட குறித்த காணொளிகளை இங்கே காணவும். Link | Link 

வாகனங்கள் நீரில் மூழ்கிய காட்சிகள் புகைப்படங்களாகவும் அக்டோபர் மாதம் சமூக ஊடகங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையையும் காணமுடிந்தது.

AFP / Getty Images மூலம் குறித்தசம்பவத்தைப் பற்றிய புகைப்படமும் வெளியிடப்பட்டது. அதன் விளக்கத்தில் 2025 அக்டோபர் 30 அன்று மெலிசா புயலின் பின்னர் ஹெய்டியில் உள்ள Petit-Goave நகரில் மோட்டார் வாகனங்கள் மழை நீரில் மூழ்கியுள்ள விதம் என குறிப்பிடப்பட்டிருந்தது.

AFP | Getty

2025 அக்டோபர் மாத இறுதியில் தாக்கிய மிகக் கடுமையான புயலான மெலிசா புயல் ஹெய்டி, ஜமைக்கா மற்றும் கியூபா உள்ளிட்ட நாடுகளில் பாரிய சேதங்களை ஏற்படுத்தியது. ஹெய்டி மற்றும் ஜமைக்காவில் குறைந்தபட்சம் 75 பேர் உயிரிழந்தனர். ஹெய்டியின் Petit-Goave நகரில் ஆறுகள் பெருக்கெடுத்ததன் காரணமாக வீடுகள் மண்ணில் புதையுண்டு, பாதைகள் உடைந்து ஏற்பட்ட பாரிய அழிவினால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.Link | Link 

இலங்கையில் இயற்கையின் கோரத்தாண்டவத்தினால் உயிர் மற்றும் உடமைகள் பாரியளவில் அழிந்துபோயின!

தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இலங்கையில் ஏற்பட்ட பாரிய இயற்கை அனர்த்தம் காரணமாக மண்ணில் புதைந்து கிடக்கும் வாகனங்கள் என பகிரப்பட்ட காணொளியானது இலங்கையில் எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பது கண்டறியப்பட்டது.

இலங்கையின் சில பகுதிகளில் இதற்கு ஒத்த நிலைகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியிடப்பட்டிருந்தாலும், மேலே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட காணொளியானது, 2025 அக்டோபர் மாதத்தின் இறுதியில் “மெலிசா” புயலால் கரிபியன் தீவுகளில் அமைந்துள்ள ஹெய்டியில் கடற்கரை நகரமான Petit-Goave-வில் ஏற்பட்ட துயரான நிலையைக் காண்பிக்கும் காணொளியாகும்.  இதற்காக அதில் பின்னணி உரை மற்றும் தவறான விளக்கங்கள் சேர்க்கப்பட்டு, அது நமது நாட்டின் பேரிடர் நிலை சம்பவத்துடன் தொடர்புடையதாகத் தவறாகக் காட்டப்பட்டுள்ளது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 


இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:மண்ணில் புதைந்த வாகனங்களை காட்டும் காணொளி இலங்கையில் எடுக்கப்பட்டதா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *