INTRO
சமீபத்தில் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி ரஷ்யாவால் உருவாக்கப்பட்டமை தொடர்பில் பல தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.
இது குறித்த உண்மைத் தகவலை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விபரம் (what is the claim)
குறித்த பதவில் ஒரு ஊசி போட்டா புற்றுநோய் மாறுமா? ரஷ்யாவின் புதிய கண்டுபிடிப்பு என தெரிவிக்கப்பட்டு கடந்த 2024.12.22 ஆம் திகதி பதிவேற்றப் செய்யப்பட்டுள்ளது.
மேலும் இது குறித்த பல பதிவுகளை சமூக ஊடகங்கங்களில் காணக்கூடியதாக இருந்தது.
இது குறித்து நாம் ஆய்வில் ஈடுபட்ட போது இது தொடர்பான பல செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது. Link | Link | Link
புற்றுநோய் என்பது ஒரு உயிர்கொல்லி நோயாகவே மக்களால் பார்க்கப்படுவதோடு அந்த நோய்க்கான நிரந்தர தீர்வை கொடுக்கக்கூடிய மருந்துகள் இதுவரை காலமும் கண்டுபிடிக்கப்படாத நிலையில் தற்போது ரஷ்யா அதற்கான தடுப்பூசியை கண்டுப்பிடித்துள்ளதாகவும் அதனை 2025 ஆம் ஆண்டு முதல் நோயாளர்களுக்கு இலவசமாக வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளதாக குறித்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
புற்றுநோய்க்கு எதிராக ரஷ்யா mRNA தடுப்பூசியை உருவாக்கியுள்ளது, இது நோயாளிகளுக்கு இலவசமாக விநியோகிக்கப்படும் என்று ரஷ்ய சுகாதார அமைச்சகத்தின் கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குனர் ஆண்ட்ரே கப்ரின் தெரிவித்துள்ளார்
இந்த தடுப்பு மருந்தானது மனித உடலிலுள்ள நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை வெளியேற்றும் ஆற்றலை வழங்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மருத்துவ பரிசோதனை ஆராய்ச்சிகளின் போது இந்த தடுப்பு மருந்தானது புற்றுநோய் செல்கள் வளர்ச்சியடையாமல் தடுப்பதை வெளிக்காட்டுகின்றன என நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக்கான கேமேலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கிண்டர்ஸ்பெர்க் தெரிவித்துள்ளார்.
இதேவேளை AI தொழிநுட்பம் மூலம் இந்த மருந்தை மிகவும் குறைந்தளவான காலத்தில் ( சுமார் ஒரு மணித்தியாலத்தில்) தயாரிக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
mRNA தடுப்பூசி என்றால் என்ன?
மனித உடலில் உள்ள அணுவில் நியூக்ளியஸ், சைட்டோபிளாசம் உள்ளது. நியூக்ளியஸ் மரப்பணுக்களை சரிபார்க்கும் DNA அமைப்பு இருக்கிறது.DNAவில் இருந்து தான் குறிப்பிட்ட புரதங்களை உருவாக்கும் RNA என்ற புரதமும் இருக்கிறது.
அது DNAவில் இருந்து குறிப்பிட்ட சில புரதங்களை எடுத்து RNAயை உருவாக்கும். அதுவே உடலில் புற்றுநோயை உருவாக்குகிறது. புற்றுநோய் எடுத்துக் கொண்டு செல்லும் RNA தான் mRNA என கூறுகிறோம். சமீபத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கும் இந்த தடுப்பூசி தயார் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
MGM Cancer Institute இன் சிரேஷ்ட ஆலோசகரும் பணிப்பாளருமான வைத்தியர் எம்.ஏ. ராஜா இது குறித்து தெரிவித்த காணொளி
இதேவேளை ரஷ்யாவில் கண்டுப்பிடிக்கப்பட்ட இந்த தடுப்பூசியானது புற்றுநோய் வளர்ச்சியை தடுப்பதற்கான எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஆற்றல் உள்ளதனை முன்கூட்டிய மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் நுண்ணுயிரியல் ஆராய்ச்சிக்கான கேமேலேயா தேசிய ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குனர் அலெக்ஸாண்டர் கிண்டர்ஸ்பெர்க் தெரிவித்துள்ளார்.
mRNA தடுப்பூசியின் செயற்பாடு என்ன?
ஏனைய தடுப்பூசிகள் பலவீனமான அல்லது செயலிழந்த வைரஸை (அல்லது பிற நோய்க்கிருமி) உடலில் அறிமுகப்படுத்துவதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டும்.
மாறாக, mRNA தடுப்பூசிகள் மரபணு வழிமுறைகளை வழங்குவதன் மூலம் செயல்படுகின்றன, இது உடலிலுள்ள செல்கள் ஒரு குறிப்பிட்ட புற்றுநோய் புரதத்தை உற்பத்தி செய்ய உதவுகிறது. இந்த செயல்முறை எதிர் புரதத்தை உருவாக்குவதற்கும் அடையாளம் காணபதற்கும் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பயிற்றுவிக்கிறது
உடம்பிலுள்ள கட்டிகளில் இந்த ஆன்டிஜென்கள் கண்டறியப்பட்டால், நோயெதிர்ப்பு அமைப்பு புற்றுநோயை குறிவைத்து அவற்றுக்கு எதிராக செய்றபட ஆரம்பிக்கும்
புற்றுநோய் mRNA தடுப்பூசிகள் உயிரணுக்களின் மேற்பரப்பில் காணப்படும் பல ஆன்டிஜென்களில் கவனம் செலுத்துகின்றன.
இந்த mRNA புற்றுநோய் தடுப்பூசிகள் தனிப்பயனாக்கப்பட்ட விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதனால் , ஒவ்வொரு நோயாளியின் நோய் எதிர்ப்பு மண்டலமும் அவர்களின் தனித்துவமான புற்றுநோயை எதிர்த்துப் போராட கற்றுக்கொடுக்கிறது.
புற்றுநோய்க்கு எதிராக இதற்கு முன்னர் கண்டுப்பிடிக்கப்பட்ட மருந்துகள்
இதேவேளை கடந்த ஆண்டு அமெரிக்காவில் புற்றுநோய்க்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட மருந்து, சோதனைகளின் போது புற்றுநோயாளிகளை குணப்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரைஸ் பல்கலைக்கழகம், டெக்சாஸ் A & M பல்கலைக்கழகம் ஆகியவற்றின் நிபுணர்களைக் கொண்ட கூட்டு ஆராய்ச்சிக் குழு புற்றுநோய்க்கு எதிரான கண்டுபிடிப்பை செய்துள்ளது. புற்றுநோய் செல்களை அகற்றும் முறையை கண்டுபிடித்துள்ளனர். சில மூலக்கூறுகளை ஒளியால் தூண்டி அதிர்வுறும் மருந்தை கண்டுபிடித்து, அந்த அதிர்வை பயன்படுத்தி புற்றுநோய் செல்களை அழிக்க முடியும் என தெரிவித்துள்ளனர். Link
ரஷ்யாவின் புற்றுநோய் தடுப்பூசி தொடர்பில் ஜனாதிபதி விளாடிமிர் புடினின் கருத்து
கடந்த சில மாதங்களுக்கு முன்பே ரஷ்ய ஜனாதிபதி புடின்(Vladimir Putin) இது தொடர்பாக ஊடகங்களில் பேசுகையில், புற்றுநோய் தடுப்பூசிகள் மற்றும் இம்யூனோமோடூலேட்டரி மருந்துகளை உருவாக்கியுள்ளதாகவும், இதன் கடைசி கட்ட ஆய்வுகளை செய்து வருகிறோம். விரைவில் இது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும் இவை மக்களுக்கு நேரடி சிகிச்சை கொடுக்கும் பலனை விட அதிக பலனை கொடுக்கும், எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார். Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
தெளிவுபடுத்தல்
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ரஷ்யாவினால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கான mRNA தடுப்பூசியானது மனித உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து, புற்றுநோய் செல்களை கண்டறிந்து அவற்றை வெளியேற்றும் ஆற்றலை கொண்டுள்ளது என்பது தெளிவாகின்றது
மேலும் இவ்வாறான புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசிகள் இதற்கு முன்னர் உருவாக்கப்பட்டிருந்த போதிலும், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட இந்த mRNA தடுப்பூசி இதுவரை புற்றுநோயாளர்களுக்கு பரிசோதித்து பார்க்கவில்லை எனவும் எதிர்காலத்தில் அதன் செய்றபாடுகள் எவ்வாறு இருக்கும் என்ற அடிப்படையிலேயே இது புற்றுநோய்க்கு நிரந்தர தீர்வை வழங்கக்கூடிய கூடிய மருந்தா என்பது தொடர்பில் கூற முடியும் என்பது மருத்துவர்களின் கூற்றின் அடிப்படையில் புலனாகின்றது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி உண்மையில் செய்வது என்ன?
Written By: Suji ShabeedhranResult: Insight
