
கடந்த 4 ஆம் திகதி பதுளை – எல்ல பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்களிள் உயிரை காப்பாற்றுவதற்காக தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் செயற்பட்ட வைத்தியர் பாலித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தப்படுவதாக தெரிவித்து பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):


இந்த செய்தி சமூக ஊடகங்களில் பெரும் பேசுபொருளாக மாறியதுடன், எல்ல விபத்தில் காயமடைந்தவர்களுக்காக உதவிய வைத்தியருக்கு எதிராக இந்த அரசாங்கத்தின் நடவடிக்கைகள் என்ற ரீதியில் பலரும் கமென்ட் செய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.


Fact Check (உண்மை அறிவோம்)
இந்த தகவல் தொடர்பில் பிரதான ஊடகங்களில் வெளியான செய்திகளை நாம் ஆராய்தோம்.
இதன்போது, பதுளை போதனா வைத்தியசாலையின் வைத்தியர் பாலித ராஜபக்ஷ, ஒழுக்காற்று விசாரணைக்காக அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் எனவும் கடந்த காலத்தில் நிலவிய மருந்து பற்றாக்குறை தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காகவே அவர் அழைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
சுகாதார அமைச்சின் அழைப்புக்கு அமைய தாம் அரச சேவை ஆணைக்குழுவுக்கு வந்ததாக வைத்தியர் குறிப்பிட்டதாகவும் அந்த செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது. Link | Link
மேலும் 2022 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் தெரிவித்த விடயம் தொடர்பாக தற்போது அவர் ஒழுக்காற்று விசாரணைக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளதாகவும் வைத்தியர் குறிப்பிட்டிருந்தார்.
வைத்தியர் பாலித ராகபக்ஷ குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த விடயங்கள் பின்வருமாறு.
மருத்துவ சங்கத்தின் ஊவா மாகாணத் தலைவர் வைத்தியர் பாலித ராஜபக்ஷ சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஊடகவியலாளர் சந்திப்பில் பதுளை பொது மருத்துவமனை மற்றும் இலங்கை முழுவதுமுள்ள கொவிட்-19 நோயாளிகளுக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கும் தேவையான மயக்க மருந்துகள் பற்றாக்குறையாக இருப்பதாகக் தெரிவித்திருந்தார்.
மேலும் இந்த அத்தியாவசிய உயிர்காக்கும் மருந்துகளின் பற்றாக்குறை குறித்து சுகாதார அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த மருந்துகளை விரைவில் இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அவசர நிலைமைகளில் பயன்படுத்துவதற்கு கூட மருந்துகள் இல்லாததனால் கொவிட் நோயாளர்கள் மேலும் அபாய கட்டத்தை நோக்கி செல்கின்றார்கள் என்றும் அவர் அந்த ஊடகவியலாளர் சந்திப்பின்போது குறிப்பிட்டிருந்தார்.
அதேபோன்று வைத்தியர் பாலித ராஜபக்ஷவிற்கு எதிராக ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படுவதாக தெரிவித்து 2024 ஆம் ஆண்டிலும் சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. Link

இது குறித்து வைத்தியர் தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் நாம் வைத்தியர் பாலித ராஜபக்ஷவை தொலைபேசியில் தொடர்புகொண்டு வினவியிருந்தோம.
இதன்போது எல்ல விபத்து தொடர்பில் தான் ஒழுக்காற்று விசாரணைக்காக அழைக்கப்படவில்லை எனவும் மாறாக கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் மருந்து பற்றாக்குறை தொடர்பில் தெரிவித்த விடயத்திற்காகவே ஒழுக்காற்று விசாரணைக்காக தான் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
பதுளை போதனா வைத்தியசாலையில் மருந்துப் பற்றாக்குறை இருப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவித்ததாகவும், அப்போது சுகாதார அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து ஒழுக்காற்று விசாரணை நடத்த நடவடிக்கை எடுத்ததாகவும், அதற்காகவே இம்முறை ஒழுக்காற்று விசாரணைக் குழுவின் முன் ஆஜராகவே தான் கொழும்பு வந்ததாகவும் வைத்தியர் பாலித ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
அதன்படி, கடந்த சில வருடங்களாக விசாரணைகளை நடத்துவதற்காக அரச சேவை ஆணைக்குழுவுக்கு பல முறை தான் அழைக்கப்பட்டதாகவும் வைத்தியர் பாலித இதன்போது சுட்டிக்காட்டினார்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் எல்ல விபத்தில் காயமடைந்தவர்களை காப்பாற்ற தன்னுயிரையும் பொருட்படுத்தாமல் செயற்பட்டமைக்காக அவர் மீது ஒழுக்காற்று விசாரணைகள் நடத்தப்படுவதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் மருந்து பற்றாக்குறை தொடர்பில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து தெரிவித்தமை தொடர்பிலேயே ஒழுக்காற்று விசாரணைகளுக்காக அவர் அரச சேவை ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளார் என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:வைத்தியர் பாலித ராஜபக்ஷவை ஒழுக்காற்று விசாரணைக்கு அழைத்தமைக்கான காரணம் என்ன?
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading
