
ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் பலத்த போர் சூழல் நிலவி வரும் நிலையில் பல்வேறு காணொளிகள், புகைப்படங்கள் என்பன இந்த போர் நிலையுடன் தொடர்புபடுத்தி தவறாக வழிநடுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது.
அந்தவகையில் தற்போது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இறந்துவிட்டதகவும் அவர் கடந்த தினத்தில் நேரலையில் பேசிய காணொளி செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என்றும் அதில் அவரது கையில் ஆறுவிரல்கள் காணப்பட்டதாகவும் தெரிவித்து ஒரு தகவல் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்து உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் இன்று 13/3/2026 நெதன்யாகு பேசிய காணொளி ஒன்றை வெளியிட்டது இஸ்ரேல், அவை ஒரு #AI தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்பட்டவை என தற்பொழுது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அவர் இரண்டு கைகளிலும் 6 விரல்கள் காணப்படுகிறது..
உண்மையில் அவர் பேசியது இல்லை என வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
மேலும் அவர் உயிருடன் இருக்கிறாரா? என கடந்த 10 நாட்களாக சந்தேகம் இருந்து வரும் நிலையில் இந்த #AI காணொளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. என தெரிவித்து இந்த பதிவானது 2026.03.13 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாகவும் தற்போது ஆற்றிய உரை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது எனவும் அதில் அவரின் கையில் ஆறு விரல்கள் இருக்கின்றன என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வருகின்றது.
எனவே அவருக்கு ஆறு விரல்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட screenshot அவர் பேசிய ஒரு காணொளியில் இருந்தே எடுக்கப்பட்டுள்ளது. அதனால் நாம் அந்த காணொளியை முதலில் ஆராய்ந்தோம்.
இதன்போது அந்த காணொளி 2026 மார்ச் 12 ஆம் திகதி இஸ்ரேலின் Government Press Office (GPO) இன் YouTube தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருப்பதனை அறியமுடிந்தது.
மேலும் நெதன்யாகுவின் உரையிலிருந்து எடுத்ததாகக் கூறப்படும் இந்த screenshot உண்மையான காணொளியில் இருந்து எடுக்கப்பட்டது அல்ல. இதில் பல செய்தி சேனல்களின் லோகோக்களும் கீழே ஓடும் செய்தி வரியும் பல அடுக்குகளாக சேர்க்கப்பட்டுள்ளன. மேல் இடது மூலையில் இருந்த இஸ்ரேல் Government Press Office (GPO) இன் உண்மையான லோகோ மறைக்கப்பட்டிருப்பதனையும் காணமுடிகின்றது.
அத்துடன் காணொளியின் 34 ஆவது விநாடியில், நெதன்யாகு இரு கைகளையும் பயன்படுத்தி தனது சுட்டுவிரல்களை காட்டி ஒரு பேசுகிறார் அப்போது அவரது ஒவ்வொரு கையிலும் ஐந்து விரல்கள் உள்ளன.
அந்த சந்தரப்பத்தில் காணொளியில் ஒரு குறுகிய தருணத்தில் அவரது வலது கையின் பக்கத்தில் உள்ள ஒரு மடிப்பின் அருகில் சிறிது நேரம் ஒரு நிழல் தோன்றுகிறது. அந்த தருணத்தையே சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட screenshot இல் காணமுடிகின்றது.

ஆறு விரல்கள் இருப்பதாக பகிரப்படும் screenshot மேலே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை நாம் உற்று கவனித்தால் அதில் ஆறாவது விரல் என குறிப்பிடும் இடத்தில் அவரின் கையில் ஒரு மடிப்பு மாத்திரமே காணப்படுகின்றது. அந்த மடிப்பின் மங்கலான காட்சியின் காரணமானவே அவருக்கு ஆறு விரல்கள் இருப்பதனைபே் போன்று காணப்படுகின்றது என்பது தெளிவாகின்றது.
எனவே இது காட்சியில் அவர் தனது விரல்களை மடிக்கும் போது தோன்றிய தோற்றமே ஆறாவது விரல் என தவறாக பகிரப்படுவதனை அறியமுடிகின்றது.
ஆகவே இஸ்ரேலின் Government Press Office வெளியிட்ட நெதன்யாகு பேசிய உண்மையைான காணொளியில் இருந்து எடுக்கப்பட்ட சில screenshot களை நாம் கீழே கொடுத்துள்ளோம். அதில் அவர் பேசிகொண்டிக்கும் சந்தர்ப்பத்தில் எடுக்கப்பட்ட பல்வேறு காட்சிகளில் நெதன்யாகுவிற்கு 5 விரல்கள் இருப்பது தெளிவாக தெரிகின்றது.




மேலும் குறித்த காணொளி AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதனால் நாம் நெதன்யாகுவின் உண்மையான காணொளியை AI Detective Tool மூலம் ஆராய்ந்த போது அந்த காணொளி உண்மை எனவும் அது செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்படவில்லை என்பதுவும் உறுதியானது.


அது மாத்திரமன்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு இறந்துவிட்டதாகவும் அவர் பேசும் வீடியோ AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டதாகவும் அதில் அவருக்கு ஆறு விரல்கள் இருப்பதாகவும் பகிரப்பட்டு வந்த தகவல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஒரு coffee shop இல் இருந்து அவர் தான் உயிருடன் இருப்பதாகவும் அவருக்கு கையில் 5 விரல்கள் மாத்திரமே உள்ளது என அவரின் கையை காண்பித்தும் காணொளியொன்றை வெளியிட்டிருந்தார். அதனை பிரதான சர்வதேச ஊடகங்களும் செய்தியாக வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
எனினும் அந்த காணொளியையும் பலர் AI தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டது என தெரிவித்திருந்தனர்.
இஸ்ரேல் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அதிகாரப்பூர்வ பதிலில் “பிரதமர் நலமாக உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பல்வேறு ஊகங்கள் மற்றும் வதந்திகள் அதிகரித்த நிலையில், ஜெருசலேமில் உள்ள The Sataf – Jerusalem என்ற கஃபேவும் நெதன்யாகு அங்கு வந்ததை காட்டும் தனது சொந்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தமது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வெளியிட்டிருந்தது. அந்த பதிவின் விளக்கத்தில், அவர் உண்மையிலேயே மார்ச் 15 அன்று அந்த இடத்திற்கு வந்திருந்தார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் சர்வதேச ஊடகங்களில் வெளியான ஆய்வை காண்க
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நெதன்யாகுவின் கையில் ஆறு விரல்கள் இருந்ததாகவும் அவரின் உரை செயற்கை நுண்ணறிவு தொழிநுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் தகவல்கள் தவறானது என்பதுடன் சமூக ஊடகங்களில் பரவி வரும் வைரல் காட்சிகள், இஸ்ரேல் அரசாங்கம் வெளியிட்ட நேரடி ஒளிபரப்பை விட மங்கலான காட்சியைக் கொண்டுள்ளன. அவற்றில் தெளிவின்மை குறைவாக இருப்பதால், நெதன்யாகுவின் கையில் கூடுதல் ஒரு விரல் இருப்பது போல தோன்றுகின்றது என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


