முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் தொடர்பில் பகிரப்படும் காணொளியின் உண்மை என்ன?

Misleading இலங்கை செய்திகள்

முன்னாள் நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் அவர்கள் ஓய்வு பெற்றுச் செல்லும் போது 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தன்னுயிரை காப்பாற்றிய மெய்பாதுகாவலரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அழுகையுடன் விடைபெற்று சென்றதாக ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காணமுடிந்தது.

எனவே இது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸாண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் “அனுரவால் பழிவாங்க்பட்ட நீதிபதி இளஞ்செழியனின் நெகிழ்ச்சியான நிமிடங்கள்

கடந்த 2017 ஆம் ஆண்டு 7ஆம் மாதம் 22ஆம் திகதி அன்று நல்லூர் சந்தியில் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் காவல்துறை மெய்ப்பாதுகாவலர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு மெய்ப்பாதுகாவலர்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் ஒருவர் காயங்களுடன் உயிர் தப்பினார்..

இந்நிலையில் அண்மையில் தனது நீதித்துறையின் 27 வருட சேவையில் இருந்து ஓய்வு பெற்றுச்செல்லும் அவர் தனது உயிரை குண்டடிபட்டு காப்பாற்றியவரையும், அவரது குடும்பத்தையும் சந்தித்து அழுகையோடு விடை பெற்றுச் சென்றுள்ளார்.

தான் என்ன உயரத்தில் இருந்தாலும் நன்றி மறக்காத இவரின் உணர்வு பூர்வமான செயற்பாடு..

அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

ஆனால் ஜனாதிபதி அனுர தலைமையிலான அரசு திட்டமிட்டு வீட்டிற்கு அனுப்பியுள்ளமை இனவாதத்தின் உச்சம் ” என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.02.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிரந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்ட காணொளியை அவதானித்த போது அதில் Daily Mirror பத்திரிகையின் இலட்சிணை இருப்பதனை பார்க்க முடிந்தது. எனவே நாம் Daily Mirror பத்திரிகையின்   உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் இவ்வாறான காணொளி எதுவும் பகிரப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராய்ந்தோம்.

இதன்போது 2017 ஆம் ஆண்டு ஜுலை 24 ஆம் திகதி இந்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிறிருந்தமை கண்டறியப்பட்டது.

உண்மையான காணொளியின் பின்னணி

மேலும் நாம் இது குறித்து மேற்கொண்ட ஆய்வில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதி யாழ். நல்லூரில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் முன்னாள் நீதிபதி இளஞ்செழியன் உயிர் தப்பியிருந்தார். 

இந்த சம்பவத்தில் நீதிபதி இளஞ்செழியனுக்கு 17 ஆண்டுகளாக, நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்த மெய்ப் பாதுகாவலர்கள் இருவர் மீது குண்டுகள் பாய்ந்து படுகாயம் அடைந்திருந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சிலாபத்தை சேர்ந்த 58 வயதுடைய ஹேமரத்ன என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார்.

தனது உயிரை காப்பாற்றிய மெய்பாதுகாவலரின் இழப்பபை தாங்க முடியாத நீதிபதி அவர்கள் மெய்ப்பாதுகாவலரின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுதமை அக்காலப்பகுதயில் அனைத்து ஊடகங்களிலும் பிரதான செய்தியாக வெளியிடப்பட்டிருந்தது. Link | Link | Link

முன்னாள் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் மீதான துப்பாக்கிச் சூடு

முன்னாள் நீதிபதி  இளஞ்செழியன் பயணித்த வாகனத்தை கடந்த 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திகதி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நல்லூர் கோவில் பகுதியில்  வழிமறித்து துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர். இந்த  சம்பவத்தில் நீதிபதிக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்ற போதிலும் அவரது  பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்ததுடன் அதில் ஒருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிபதி இளைஞ்செழியனின் வாகனத்தை இடைமறித்த இனந்தெரியாத நபர்கள், அவரை நோக்கி 10 தடவை துப்பாக்கி சூடு நடத்திய வேளையில், அவரின் மெய்ப்பாதுகாவலர்களின் அதீத முயற்சியினால் நீதிபதி பாதுகாக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சந்தேகநபர் அங்கிருந்த பெண்ணொருவரின் மோட்டார் சைக்கிளை பறித்து தப்பிச் செல்ல முற்பட்ட போது, அவரது துப்பாக்கி கீழே வீழ்ந்துள்ள நிலையில், சந்தேகநபர் சாதுர்யமாக பொலிஸாரின் பிடியில் இருந்து தப்பிச்சென்றதுடன் சந்தேகநபர் வைத்திருந்த துப்பாக்கி பொலிஸாரினால் மீட்கப்பட்டிருந்தது.Link 

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எமது ஆய்வின் அடிப்படையில்  முன்னாள் நீதிபதியான மாணிக்கவாசகர் இளஞ்செழியன் ஓய்வு பெற்றுச் செல்லும் போது 2017 ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் தன்னுயிரை காப்பாற்றிய மெய்பாதுகாவலரையும் அவரது குடும்பத்தினரையும் சந்தித்து அழுகையுடன் விடைபெற்று சென்றதாக தெரிவித்து பகிரப்படும் காணொளியானது தவறானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த காணொளியானது 2017 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 22 ஆம் திதக யாழ். நல்லூரில் நீதிபதி இளஞ்செழியன் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அவரின் உயிரை காப்பாற்றி உயிரிழந்த  நீதிபதியின்  மெய்ப் பாதுகாவலரான  ஹேமரத்னவின் குடும்பத்தினர் முன்னிலையில் கதறி அழுத போது எடுக்கப்பட்ட காணொளி என்பதுவும் தெளிவாகின்றது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *