உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?

Misleading இலங்கை | Sri Lanka

நிகழ்கால அரசாங்கத்தின் ஆட்சியில் உப்பு விலை பாரியளவில் அதிகரித்துவிட்டதாக தெரிவித்து சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

எனவே அது தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபெக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் உப்பு 85/= ரூபாய் ஆவதற்கு 76 ஆண்டுகள் எடுத்தன. 77ஆம் வருடத்தில் ஆட்சிக்கு வந்த பொய்யர்களின் ஆட்சியில் 250/- என தெரிவிக்கப்பட்டு உப்பு பக்கட் ஒன்றின் பின்புறத்தின் புகைப்படத்துடன் கடந்த 2025.02.03 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் இதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த சமூக ஊடகப் பதிவில் பகிரப்பட்டிருந்த உப்பு பக்கட்டின் படத்தினை நாம் அவதானித்த போது அதில் உப்பு நிறுவனத்தின் பெயர் தெளிவாக இல்லை எனினும் அதில் வழங்கப்பட்டுள்ள தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட போது அந்த இலக்கத்தை தொடர்புகொள்ள முடியவில்லை.

தொடர்ந்து அதிலுள்ள முகவரி தொடர்பில் நாம் ஆராய்ந்த  போது அந்த முகவரி தொடர்பான சரியான தகவல்கள் எதனையும் எம்மால் கண்டறிய முடியவில்லை 

குறித்த பதிவில் பகிரப்பட்ட உப்பு பக்கட்டின் படத்திலோ அல்லது குறித்த பதிவிலோ 250 ரூபாவிற்கு விற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட உப்பு பக்கட் 400 கிராம் அளவைக் கொண்டதா அல்லது 1 கிலோவை கொண்டதா என்பது பற்றியும் தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லை

இவ்வாறு சமூக ஊடகங்களில் பகிரப்பட்டதனைப் போன்று பாரியளவில் உப்பு விலை அதிகரிக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்தோம்.

இதன்போது உப்பு விலையை அதிகரிக்க ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தீர்மானித்துள்ளதாகவும்,இறக்குமதி செய்யப்படும் உப்பின் விலை அதிகரித்ததன் காரணமாக இவ்வாறு விலையை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரதான ஊடக செய்திகளில் தெரிவிக்கப்பட்டிருந்தமையை எம்மால் அவதானிக்க முடிந்தது.


அதன்படி, 100 ரூபாவாக இருந்த 400 கிராம் உப்பு பக்கட் ஒன்றின் விலை 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 120 ரூபாவாகவும், 120 ரூபாவாக இருந்த ஒரு கிலோ கல் உப்பு பக்கட் ஒன்றின் விலை 60 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு 180 ரூபாவாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்த விலை உயர்வு தற்காலிக தீர்மானம் என்று ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வருடாந்த உப்பு தேவை 200,000 மெற்றிக் தொன் என்று கூறப்படுகிறது.

இருப்பினும், கடந்த வருடத்தின் கடைசி காலாண்டில் ஏற்பட்ட சீரற்ற வானிலை காரணமாக, நாட்டில் உப்பு உற்பத்தி குறைவடைந்தது.

இதன் காரணமாக, அரசாங்கம் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்தது, அதன்படி, 12,000 மெற்றிக் தொன் உப்பு இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதத்திற்குள் ஹம்பாந்தோட்டை உப்புத் தொழிற்சாலையில் உப்பு உற்பத்தி ஆரம்பிக்கப்படவுள்ளதால், எந்தவொரு பிரச்சினையும் இல்லாமல் உப்பு விநியோகத்தை மேற்கொள்ள முடியுமென நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

நாட்டின் உப்புத் தேவையில் 50 சதவீதத்தை ஹம்பாந்தோட்டை உப்பளத்தின் ஊடாக உற்பத்தி செய்யப்படுகிறது.

இதற்கு மேலதிகமாக, பரந்தன் மற்றும் புத்தளம் உப்பளங்களும் நாட்டின் உப்புத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன எனவும் அந்த செய்திகளில் குறிப்பிடப்பட்டிருந்தது.

குறித்த  செய்திகளை பார்வையிட இங்கே கிளிக் செய்யவும் Link| Link 

மேற்குறிப்பிட்ட செய்திகளின் அடிப்படையிலேயே இந்த உப்பு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமை தொடர்பான தகவல் சமூக ஊடகங்களில் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளன என்பது தெளிவாகின்றது.

ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனம்

எனினும் இது குறித்த மேலதிக தெளிவினைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஹம்பாந்தோட்டை லங்கா உப்பு நிறுவனத்தை நாங்கள் தொடர்பு கொண்டபோது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மூல உப்பிலிருந்து லங்கா உப்பு நிறுவனம் உப்பு உற்பத்தி செய்வது இதுவே முதல் முறை என்று நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் எம்மிடம் தெரிவித்தார். வரலாற்றில் இவ்வாறு ஒருபோதும் உப்பு உற்பத்தி செய்யப்பட்டதில்லை என்றும் அவர் கூறினார்.

அத்துடன் இதன் காரணமாகவே தற்போது சந்தையில் உப்பின் விலையில் கனிசமான அளவு அதிகரிப்பு இடம்பெற்றுள்ளதாகவும், இது நிரந்தரமான அதிகரிப்பு அல்ல எனவும் அவர் எம்மிடம் தெரிவித்தார்.

நெஷனல் சோல்ட் லிமிடட் (NATIONAL SALT LIMITED)

மேலும் இது தொடர்பில் நெஷனல் சோல்ட் லிமிடட்டை தொடர்பு கொண்டு கேட்டபோது, உப்பு விலையில் கனிசமான அளவு அதிகரிப்புகள் ஏற்பட்டுள்ள போதிலும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடக பதிவுகளில் தெரிவிக்கப்பட்டதனைப் போன்று 200 சதவீதத்தில்  அதிகரிப்புகள் இடம்பெறவில்லை எனவும் குறிப்பிட்டனர்.

அத்துடன் சந்தையில் உப்பிற்கு கட்டுப்பாட்டு விலைகள் எதுவும் நிர்ணயிக்கப்படாமைினால் சில நிறுவனங்கள் குறிப்பிடப்பட்ட விலையை விட சற்று அதிகமாக உப்பை விற்பனை செய்யும் சந்தர்ப்பங்களும் காணப்படுவதாகவே அவர்கள் குறிப்பிட்டனர்.

அத்துடன் தற்போது உப்பு தட்டுபாடு காரணமாக உப்பை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்மையே இந்த விலை அதிகரிப்புக்கு காரணம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பிற உப்பு நிறுவனங்கள்

மேலும் நாம் இது தொடர்பில் சில உப்பு உற்பத்தி நிறுவனங்களை தொடர்பு கொண்டு கேட்ட போது கடந்த ஆண்டு ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதமளவில் 400 கிராம் உப்பு விலை 85 ரூபாயாக காணப்பட்டதாகவும் தற்போது  உப்பு இறக்குமதி காரணமாக 400 கிராம் உப்பு பக்கட் 120 ரூபாவாக விற்கப்படுவதாகவும் 1 கிலோ கிராம் உப்பு 180 ரூபாவாக விற்கப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

மேலும் ஒரு சில உப்பு நிறுவனங்களின் உப்பு பக்கட்கள் ஒன்லைனில் விற்பனை செய்யப்படும் விலை தொடர்பில் நாம் ஆராய்ந்தபோது, அந்த விலைகளில் பாரிய வேறுபாடுகள் காணப்படுவதனை எம்மால் காண முடிந்தது.

அதாவது 400 கிராம் உப்பு சில ஒன்லைன் விற்பனை நிலையங்களில் 115 ரூபாவாகவும் சிலவற்றில் 135 ரூபாவாகவும் விற்கப்படுகின்றன.

அதேபோன்று 1 கிலோகிராம் உப்பு பக்கட் சிலவற்றில் 270 ரூபாவாகவும் சிலவற்றில் 230 ரூபாவாகவும் விற்கப்படுவதனை காணமுடிந்தது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் நாட்டில் இறக்குமதி செய்யப்படும் உப்பு விலை அதிகரிக்கப்பட்டுள்ளமையால் சந்தையில் உப்பு விலையில் கனிசமானளவு அதிகரிப்பு ஏற்பட்டிருப்பினும் குறித்த சமூக ஊடக பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று பாரியளவிலான அதிகரிப்புகள் ஏற்படவில்லை என்பது தெளிவாகின்றது.

அத்துடன் உப்பிற்கு கட்டுப்பாட்டு விலைகள் எதுவும் நிர்ணயிக்கப்படாத நிலையில் சில உப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்திகளில் சிறிய விலை மாற்றங்களை செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் இந்த விலை அதிகரிப்பானது நிரந்தரமானது அல்லவென இலங்கை உப்பு நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில் எதிர்காலத்தில் உப்பு விலையில் ஏற்படும் மாற்றம் தொடர்பிலும் நாம் இந்த கட்டுரையில் அறிக்கையிட காத்திருக்கின்றோம்.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:உப்பு விலை அதிகரிப்பு தொடர்பான உண்மை என்ன?

Fact Check By: Suji Shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *