பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படும் சீர்த்திருங்கள் மற்றும் இதனால் மாணவர்களின் கல்விச் சுமை அதேநேரம் அவர்களின் எதிர்காலம் எவ்வாறு அமையும் என்பது குறித்தும் சமூகத்தில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றமையை நாம் மறுக்க முடியாது.
அந்த வகையில் தற்போதைய அரசாங்கத்தினால் பாடசாலை கல்வி அமைப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள மறுசீரமைப்பு தொடர்பில் சமூக ஊடகங்களில் சில தகவல்கள் பகிரப்படுகின்றமையை எம்மால் காணமுடிந்தது.
எனவே இது குறித்த தெளிவை பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2026 முதல்:
புதிய பாடத்திட்டம் மற்றும் GPA முறைமை – விரிவான வழிகாட்டல்
2026 ஆம் ஆண்டு முதல் அமுலாகவுள்ள க.பொ.ச. சாதாரண தர பரீட்சையின் புதிய பாட அமைப்பையும், GPA (Grade Point Average) மதிப்பீட்டு முறையையும் பற்றிய முழுமையான தகவல்கள் இங்கே வழங்கப்படுகின்றன.
இந்த மாற்றங்கள் மாணவர்களின் கல்விப் சுமையை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வழிவகுத்து, சர்வதேச தரங்களுக்கு ஏற்ற வகையில் அவர்கள் திறன்களை மதிப்பீடு செய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும்.
புதிய பாடத்திட்டம்: மொத்தம் 7 பாடங்கள்
புதிய முறையில், மாணவர்கள் 10 பாடங்கள் கற்க வேண்டிய பழைய முறையைவிட, இப்போது 7 பாடங்கள் மட்டும் கற்க வேண்டியுள்ளது. இது மாணவர்களின் பாடங்களிற்கான பளுவை குறைத்து, ஆழமான கற்றலுக்கு வாய்ப்பு வழங்குவதாகும்.
கட்டாய Subjects – 5:
இவை அனைத்து மாணவர்களும் கற்கவேண்டியபாடங்கள்:
1. தாய்மொழி – தமிழ், සිංහල அல்லது ஏதேனும் அங்கீகரிக்கப்பட்ட தாய்மொழி (Credits: 3)
2. English – Communication skills, Reading, Writing, Speaking (Credits: 3)
3. Mathematics – Concepts, Problem solving, Logical thinking (Credits: 3)
4. Science – Physics, Chemistry, Biology உள்ளடக்கிய General Science (Credits: 3)
5. Religion – Buddhism, Hinduism, Islam, Christianity (Credits: 2)
மொத்த கட்டாய Subjects இற்கான Credits: 14
தேர்ந்தெடுக்கக்கூடிய Subjects – 2:
மாணவர்கள் தங்கள் ஆர்வமும் எதிர்கால இலக்குகளையும் பொருத்து, பின்வரும் களங்களில் இருந்து 2 Subjects தேர்வு செய்யலாம். ஒவ்வொன்றுக்கும் Credits: 2.
Second National Language
Information and Communication Technology
History
Civic Education
Health and Physical Education
Technology :
Tourism and Hospitality Management Technology
Design and Engineering Technology
Livestock Product Technology
Artistic Product Technology
Entrepreneurship and E-commerce Technology
Geography
Aesthetics Education:
Oriental Music
Western Music
Carnatic Music
Oriental Dance
Bharatha Dance
Western Dance
Drama and Theatre
Art
Entrepreneurship and Financial Literacy
இந்த 7 Subjects அமைப்பில், மாணவர்கள் பல வகையான பாடங்களில் சிதறி இல்லாமல், தங்களுக்குப் பயனுள்ள துறைகளில் ஆழமாக கவனம் செலுத்த முடியும்.
GPA (Grade Point Average) முறைமை:
பழைய A, B, C, S, F எனப்படும் Letter Grade முறைக்கு பதிலாக, GPA முறை அமலுக்கு வருகிறது. GPA என்பது மாணவர்கள் பெற்றுள்ள ஒட்டுமொத்த மதிப்பெண் நிலையை இலக்க முறையில் (Numerical Form) காட்டும் முறை.
இது சர்வதேச ரீதியாக அங்கீகரிக்கப்பட்ட முறைமை ஆகும், மேலும் மாணவர்களின் முழுமையான கல்வி செயல்திறனை துல்லியமாக பிரதிபலிக்க உதவும்.
GPA மதிப்பீட்டின் தர விகிதங்கள் உதாரணமாக):
% Marks Range Grade Point
90% – 100% 4.0
80% – 89% 3.7
70% – 79% 3.3
60% – 69% 3.0
50% – 59% 2.7
40% – 49% 2.0 (Pass)
Below 40% 0.0 (Fail)
இந்த Grade Point values Education Ministry வழியாக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் வரை இவை மாதிரிப் பட்டியல் மட்டுமே.
GPA கணக்கீட்டு முறை:
மாணவர் ஒருவர் 7 Subjects கற்கின்றார் என எடுத்துக்கொள்வோம். அவர் பெற்றுள்ள Grade Points பின்வருமாறு:
Mathematics: 3.7
English: 3.3
Mother Tongue: 4.0
Religion: 3.7
Science: 3.0
Optional Subject 1: 3.5
Optional Subject 2: 3.2
Total Grade Points = 3.7 + 3.3 + 4.0 + 3.7 + 3.0 + 3.5 + 3.2 = 24.4
Final GPA = 24.4 / 7 = 3.48
இதன்படி, மாணவரின் Final GPA = 3.48 ஆகும்.
GPA முறைமையின் நன்மைகள்:
துல்லியமான மதிப்பீடு: GPA system மாணவர்களின் ஒட்டுமொத்த திறனை துல்லியமாக பிரதிபலிக்கிறது
குறைந்த மன அழுத்தம்: ஒரு Subject இல் குறைந்த மதிப்பெண் பெற்றாலும், மொத்த GPA அதிகமாக இருக்கலாம்
International Recognition: உலக பல்கலைக்கழகங்களில் GPA முறை ஏற்கப்படுகிறது
A/L Stream தெரிவில் உதவுகின்றது: திறன்கள் மற்றும் ஆர்வங்களை GPA மூலம் தெளிவாக அறிய முடியும்
Relative Assessment: மாணவர்களிடையே ஒப்பீட்டு மதிப்பீடு செய்வது சாத்தியம்
சவால்கள் மற்றும் முக்கிய கவனத்துக்குரிய அம்சங்கள்:
Awareness: GPA முறைமை பற்றி மாணவர்களும், பெற்றோர்களும், ஆசிரியர்களும் சரியான விளக்கங்களைப் பெற வேண்டும்
Minimum GPA for Pass: ஒருவரை Pass ஆகக் கருத தேவையான GPA மற்றும் ஒவ்வொரு Subject இல் Pass குறியீடு தெளிவாக இருக்க வேண்டும்
Transparency: GPA கணக்கீட்டு முறை மற்றும் Grade Point Conversion பற்றிய நெறிமுறைகள் வெளிப்படையாக இருக்க வேண்டும்
இந்த புதிய மாற்றங்கள் இலங்கையின் கல்வி முறைமைக்குள் விசேஷமான மாற்றத்தை உருவாக்கும். அதன் வெற்றி, சரியான திட்டமிடல், செயல் திட்டம், மற்றும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்புகளின் ஒத்துழைப்பு ஆகியவற்றின் மீது தழுவியுள்ளது.
மாணவர்களுக்கு அதிகப் பயனுள்ள, குறைந்த அழுத்தமுள்ள மற்றும் சர்வதேச தரத்திற்கு இணையான கல்வி அனுபவம் ஒன்றை இம்மூலம் வழங்க முடியும் என்பதே நம்பிக்கை. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.07.21 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்த முழுமையான விபரங்களை அறியாதவர்கள் இதனை சமூக ஊடகங்களில் அதிகளவில் பகிரந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
2026 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தெளிவுபடுத்தும் முதல் நிகழ்வு, பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் கடந்த ஜூலை 11 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நடைபெற்றது.
மேலும் புதிய சீர்திருத்தங்களின் குறிக்கோள்கள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், புதிய சீர்திருத்தங்களின்படி கல்வியின் முக்கிய கூறுகள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களை செயல்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி ஆகியவை பிரதமர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கல்வியின் நிலைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள்
பாடசாலை பாடத்திட்ட திருத்தங்களின் கீழ், கல்வி நிலைகள் மற்றும் அதில் மேற்கொள்ளப்பட்ட முக்கிய மாற்றங்கள் பின்வருமாறு.
- சிரேஷ்ட இடைநிலை இரண்டாம் கல்வி நிலை (Senior Secondary Phase 2 Education)
தரம் 12-13:
தொகுதி முறை (module) மற்றும் கிரடிட் அடிப்படையிலான பாடத்திட்டங்கள்
நான்கு (4) பாடப் பிரிவுகள் மற்றும் ஒரு (1) திறன் பிரிவு
- சிரேஷ்ட இடைநிலை முதலாம் கல்வி நிலை (Senior Secondary Phase 1 Education)
தரம் 10 – 11
தொகுதி முறை (module) மற்றும் கிரடிட் அடிப்படையிலான பாடத்திட்டங்கள்
தேர்வுப் பாடங்கள் மற்றும் மேலதிக பாடங்களுக்கான கல்வி மற்றும் தகுதி அடிப்படையிலான வழிகளை அறிமுகப்படுத்துதல்.
7 பாடங்களுக்கான தேசிய அளவிலான மதிப்பீடுகள்
- ஆரம்ப இடைநிலைக் கல்வி
தரம் 6 – 9
தொகுதி முறை (module) மற்றும் கிரடிட் அடிப்படையிலான பாடத்திட்டங்கள்
ஆரம்ப மற்றும் மேலதிக பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தல்
தரம் 9 இல் திறன் மதிப்பீட்டை அறிமுகப்படுத்துதல்
- ஆரம்ப நிலைக் கல்வி
தரம் 1 – 5
செயற்பாடுகள் அடிப்படையிலான ஒருங்கிணைந்த பாடத்திட்டம்
- ஆரம்பகால குழந்தைப் பருவக் கல்வி
முன் கல்வி கொள்கை வரைவு செய்யப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப்பதிவில் தெரிவிக்கப்பட்ட சாதாரண தரப் பரீட்சக்கு ஆரம்ப புள்ளியாகவுள்ள 10 ஆம் தர பாடத்திட்டம் தொடர்பில் நாம் ஆய்வை மேற்கொண்டோம்.
10 – 11 ஆம் தரப் பாடங்கள் 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.
- 10-11 ஆம் தரங்களில் படிக்கும் மாணவர்களுக்கான பொதுவான பாடத்திட்டத்தில் 5 கட்டாய பாடங்களும் 2 விருப்பப் பாடங்களும் உள்ளன. இவற்றின் மூலம் 18 கிரடிட்கள் கிடைக்கும்.
- அதேவேளை, மேலதிகமாக மாணவர்கள் உயர்தரத்திற்கு தேர்வு செய்ய எதிர்பார்க்கும் 4 பாடங்கள் (3 முக்கிய பாடங்கள்) அல்லது தகுதித் துறையில் 4 பாடங்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 14 கிரடிட்கள் வழங்கப்படும்.(Further Learning)
- Transversal Skills – 3 கிரடிட்கள் வழங்கப்படும்
(ஒரு குறிப்பிட்ட பாடம் அல்லது தொழிலுக்கு மட்டும் மட்டுப்படுத்தப்படாத, ஆனால் வாழ்க்கை, கற்றல் மற்றும் வேலையின் பல்வேறு பகுதிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் அத்தியாவசிய திறன்கள் ஆகும். இருப்பினும், இதனை முறையாக ஆதரிக்க போதுமான நபர்களும் வசதிகளும் இருக்கும் பட்சத்தில் மாத்திரமே இந்த தொகுதி ஆரம்பிக்கப்படும்.)
மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவில் புதிய முறையில், இப்போது 7 பாடங்களை மாத்திரமே கற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே நாம் அது குறித்தும் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம்.
10-11 ஆம் வகுப்பு பாடத்திட்டத்திற்கு 14 பாடங்கள்
மேற்கண்ட பிரிவுகளின்படி, 10-11 ஆம் வகுப்புகளுக்கான பாடத்திட்டம் 14 பாடங்களை உள்ளடக்கியது. அதன்படி, 14 பாடங்களும் பின்வருவனவற்றைக் கொண்டுள்ளன.
முதல் பிரிவில் (Common Core Curriculum) 5 கட்டாய பாடங்கள் (Compulsory Subjects)
- தாய்மொழி, ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமயம் மற்றும் மதிப்புகள்
இந்த முதல் பிரிவில் தேர்வு செய்யப்படும் 2 பாடங்களுக்காக வழங்கப்பட்டுள்ள பாடத்திட்டங்கள் பின்வருமாறு.
- இரண்டாவது தேசிய மொழி
- தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம்
- வரலாறு
- குடியுரிமை கல்வி
- உடல்நலம் மற்றும் உடற்கல்வி
- தொழில்நுட்பம்: விவசாய முகாமைத்துவ தொழில்நுட்பம், வடிவமைப்பு மற்றும் பொறியியல் தொழில்நுட்பம், உணவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், கலை உற்பத்தி தொழில்நுட்பம் (கைவினைப்பொருட்கள், ஃபேஷன், அலங்காரம், டிஜிட்டல் வடிவமைப்பு போன்ற தயாரிப்புகளை உருவாக்குவதில் கலை மற்றும் புதுமை), நீர்வாழ் உயிரி வள தொழில்நுட்பம்.
- புவியியல்
- அழகியல் கல்வி (கிழக்கு இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, நடனம், பரதநாட்டியம், கலை நாடகம் மற்றும் நாடகம்)
- தொழில்முனைவு மற்றும் நிதி கல்வியறிவு
அதன்படி, ஒரு மாணவர் முதல் குழுவில் உள்ள 5 கட்டாயப் பாடங்கள் மற்றும் 2 விருப்பப் பாடங்கள் உட்பட மொத்தம் 7 பாடங்களைப் படிக்க வேண்டும்.
இரண்டாவது பிரிவின் கீழ் மேலதிக பாடங்கள் (Further Learning)
இதில், மேலதிக பாடங்களுக்காக, ஒரு முக்கியப் பிரிவிலிருந்து 4 பாடங்கள், 2 கட்டாயப் பாடங்கள் மற்றும் ஒரு (1) திறன் பாடம் தேர்ந்தெடுக்கப்படுகின்றன. அதாவது, இந்தப் பிரிவின் கீழ் 7 பாடங்களைப் படிக்க வேண்டும்.
பின்வரும் பிரிவுகளில் ஏதேனும் ஒன்றிலிருந்து 4 பாடங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்
- STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம்) பிரிவு
இந்தப் பிரிவுடன் தொடர்புடைய பாடங்கள்:
பிரயோக கணிதம், தூய கணிதம், உயிரியல், வேதியியல், இயற்பியல், சுகாதாரம் மற்றும் உடற்கல்வி, கணினி அறிவியல், தரவு அறிவியல், வேளாண் அறிவியல், பொறியியல் தொழில்நுட்பம், உயிரி பொறியியல் தொழில்நுட்பம், உணவு மற்றும் நுகர்வோர் தொழில்நுட்பம், வானூர்தி ஆய்வுகள்
- மனிதநேயம் மற்றும் சமூக அறிவியல் பிரிவு
இந்தப் பிரிவுடன் தொடர்புடைய பாடங்கள்:
மொழி மற்றும் இலக்கியம், ஊடகம் மற்றும் தொடர்பாடல், வெளிநாட்டு மொழிகள், பாரம்பரிய மொழி, குடிமையியல், வரலாறு, புவியியல், சமூக அறிவியல், தத்துவம்/தர்க்கம், கிழக்கு இசை, மேற்கத்திய இசை, கர்நாடக இசை, நடனம், பரதநாட்டியம், கலை, நாடகம் மற்றும் நாடகம், திரைப்பட ஆய்வுகள்
- முகாமைத்துவம் மற்றும் தொழில்முனைவோர் பிரிவு
இந்தப் பிரிவுடன் தொடர்புடைய பாடங்கள்:
பொருளாதாரம், தகவல் மற்றும் தொடர்பாடல், தொழில்நுட்பம், கணக்கியல், வணிக ஆய்வுகள், வணிக புள்ளிவிவரங்கள், தொழில்முனைவோர் மற்றும் நிதி எழுத்தறிவு, விநியோகச் சங்கிலி முகாமைத்துவம்
- திறன்கள் பிரிவு
இந்தப் பிரிவுடன் தொடர்புடைய பாடங்கள்:
கட்டுமானம் மற்றும் உட்கட்டமைப்பு, படைப்புத் தொழில்கள், முதன்மைத் தொழில்கள், சமூக மற்றும் சமூக சேவைகள், உற்பத்தி மற்றும் தொழில்நுட்பம்
Transversal திறன் ஆய்வுகளுக்கான பாடத்திட்டங்கள்
இதனுடன் தொடர்புடைய பாடங்கள்:
இலக்கியப் தொடர்பான தெளிவு, ஊடக ஆய்வுகள், தொழில்துறை அனுபவம், சேவைத் துறை ஆய்வுகள், உலகளாவிய ஆய்வுகள், சமூக சேவைகள், சுகாதாரம் மற்றும் விளையாட்டு, பயன்பாட்டு தொழில்நுட்பம், அழகியல், திரைப்பட ஆய்வுகள், தொழில் தயாரிப்புக்கான அடித்தளம், டிஜிட்டல் குடியுரிமை.
2வது பிரிவின் கீழ் வரலாறு மற்றும் அழகியல் பாடங்களைப் படிப்பது கட்டாயமாகும்
கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பாக கல்வி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட முழு அறிக்கையை இங்கே காணலாம்.
முதல் பிரிவின் கீழ் (Common Core Curriculum) , 5 கட்டாய பாடங்கள் மற்றும் அதே பிரிவில் 2 விருப்பப் பாடங்கள் உட்பட மொத்தம் 7 பாடங்களும், இரண்டாவது பிரிவில் 7 பாடங்களும் (Further Learning)உள்ளன, இவற்றை மேலதிக படிப்புகளுக்கான உயர்தரத்தை நோக்கமாகக் கொண்டு கற்க வேண்டிய தேவை உள்ளது.
எனவே மொத்தமாக மாணவர்கள் 14 பாடங்களை கற்க வேண்டும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
மேற்குறிப்பிட்ட பகுதியானது கல்வி அமைச்சின் தொடர்புடைய அறிக்கையில் வழங்கப்பட்ட குறிப்புகளில் விளக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சின் விளக்கம்
இது குறித்த மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்வதற்காக சாதாரண தரப் பரீட்சையின் போது மாணவர்கள் 14 பாடங்களுக்கும் தேர்வு எழுதுவார்களா என நாம் கல்வி அமைச்சின் செயலாளரை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.
இதன்போது முதல் பிரிவில் (Common core curriculum) 07 பாடங்களுக்கு மாத்திரமே மாணவர்கள் பொதுப் பரீட்சையில் தோற்றுவதாக அவர் குறிப்பிட்டார்.
மற்ற 7 பாடங்களும் மதிப்பீடுகளின் மூலம் பெறப்படும் புள்ளிகள் மற்றும் தவணைப் பரீட்சை மதிப்பெண்களுடன் சேர்க்கப்படும்
இருப்பினும், 10-11 ஆம் வகுப்பு மாணவர்கள் இரண்டாவது குழுவில் 7 பாடங்களைப் படிக்க வேண்டியிருந்தாலும், அதில் அவர்கள் தேர்ந்தெடுத்த பிரிவின் 4 பாடங்கள் மற்றும் கட்டாயப் பாடங்களும் அடங்கும், இருப்பினும், இந்த 7 பாடங்களுக்கும் தவணைப் பரீட்சைகள் இடம்பெறாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், இந்த பாடங்கள் தொகுதிகளாகக் கற்பிக்கப்படுகின்றன என்றும், இதற்காக மதிப்பீடுகள் நடத்தப்படுவதாலும், மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள் GPA முறை மூலம் தெரிவிக்கப்படுவதாலும், மாணவர்கள் இந்தப் பாடங்களைப் புறக்கணிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த அறிக்கைகள் தற்போது மாகாண கல்வி அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டு வருவதாகவும், இது குறித்த தெளிவான அறிக்கை எதிர்காலத்தில் பொதுமக்களுக்கு எளிதாக விளங்கக்கூடிய வகையில் வெளியிடப்படும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ் முதலாவது சாதாரண தரப் பரீட்சையானது 2029 ஆம் ஆண்டு நடத்தப்படும்.
2026 ஆம் ஆண்டு முதல் 1 மற்றும் 6 ஆம் வகுப்புகளுக்கு மாத்திரமே பாடத்திட்ட சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும்
ஒவ்வொரு வகுப்பறைக் காலமும் 50 நிமிடங்கள் ஆகும், மொத்தப் பாடசாலை நேரமும் 30 நிமிடங்கள் நீட்டிக்கப்படுகிறது.
2029 ஆம் ஆண்டு முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திறன் தேர்வு அறிமுகப்படுத்தப்படும்.
இந்த மதிப்பீடு பின்வருவனவற்றை மதிப்பிடுகிறது:
அ) எழுத்தறிவு ஆ) எண் அறிவு இ) ஒரு குறிப்பிட்ட துறையில் மேலும் படிப்பைத் தொடரும் நாட்டம்.
மாணவர்கள் கல்வி அல்லது தொழில்முறை பிரிவுகளில் இருந்து பாடங்களைத் தேர்வுசெய்ய வாய்ப்பு வழங்கப்படும்.
புதிய கல்வி சீர்திருத்தங்களின் கீழ், முதல் G.C.E. சாதாரண தரப் பரீட்சை 2029 இல் நடைபெறும், மேலும் G.C.E. உயர்தரப் பரீட்சையானது அதற்கேற்ப நடைபெறும்.
கல்வி அமைச்சினான் வெளியிடப்பட்ட முழு அறிக்கை
மேலும் குறித்த சீர்திருத்தத்தின் கீழ் மொத்தமாக 14 பாடங்களை மாணவர்கள் கட்டாயமாக கற்க வேண்டும் என்பதுடன் அதில் 7 பாடங்களுக்கு மாத்திரமே பொது சாதாரணத் தரப் பரீட்சை நடத்தப்படும் இருப்பினும் ஏனைய 7 பாடங்களில் மாணவர்கள் பெறும் மதிப்பீட்டின் புள்ளிகள் GPA முறை மூலம் தெரிவிக்கப்படுவதால், மாணவர்கள் இந்தப் பாடங்களைப் புறக்கணிக்க முடியாது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள்மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:புதிய கல்வி சீர்திருத்தத்தின் கீழ் முதல் O/L பரீட்சை எப்போது நடத்தப்படும்?
Fact Check By: Suji ShabeedharanResult: Missing Context
