
கடந்த 8 ஆம் திகதி குற்ப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் பிள்ளையான் கைது செய்யப்பட்டதனை தொடர்ந்து பல்வேறு கருத்துக்கள் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்டு வருகின்றமையை எம்மால் காண முடிந்தது.
அந்த வகையில் தற்போது பிள்ளையான் தொடர்பில் உதய கம்மன்பில தெரிவித்த விடயம் குறித்து சமூக ஊடகங்களில் பகிரப்படும் விடயம் தொடர்பில் உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim)
குறித்த பதிவில் Newsfirst இன் பேஸ்புக் பக்கத்தில் பிள்ளையான் உண்மையான தேசப்பற்றாளர் எனவும் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் அவர் எதையும் கூறவில்லை என உதய கம்மன்பில தெரிவித்ததாக பகிரப்பட்ட காணொளியை பகிர்ந்து அட அட அட அட என தலைப்பிட்டு இன்று (2025.04.17) பகிரப்பட்டுள்ளது.
மேலும் அதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் அதனை பகிரந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
முதலில் குறித்த பதிவில் பகிரப்பட்டதனைப் போன்று Newsfirst இல் இதுபோன்ற செய்தி வெளியாகியிருந்ததா என நாம் ஆராய்ந்தோம் இதன்போது Newsfirst பேஸ்புக் பக்கத்தில் அந்த செய்தியானது வெளியாகியிருந்தது.
எனினும் குறித்த செய்தியில் பிள்ளையான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் எதையும் கூறவில்லை என்பதுவும் அவர் தேசப்பற்றாளர் என உதய கம்மன்பில தெரிவித்த விடயமும் ஒன்றாக தெரிவிக்கப்பட்ட விடயமல்ல என்பது தெளிவானது.
மேலும் நாம் அந்த காணொளியை தொடர்ந்து ஆராய்ந்த போது பிள்ளையான், விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி பிரபாகரனை தோற்கடித்து இந்த நாட்டை காப்பாற்ற உதவியாக இருந்துள்ளார் அதனால் பிள்ளையான் ஒரு தேசப்பற்றாளர் என உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தான் சட்டத்தரணி என்ற ரீதியில் பிள்ளையானை பார்வையிட சென்ற போது தனக்கும் ஈஸ்டர் தாக்குதலுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை என பிள்ளையான் தெரிவித்தாக உதய கம்மன் பில குறிப்பிட்டுள்ளார்.
இதனைடிப்படையில் பார்க்கும் போது ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பிள்ளையானை தேசப்பற்றாளர் என உதய கம்மன்பில தெரிவிக்கவில்லை என்பது தெளிவாகின்றது.
சட்டத்தரணி என்ற ரீதியில் பிள்ளையானை சந்தித்த போது அவர் என்ன கூறினார் என உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்த முழுமையான கருத்து பின்வருமாறு
பிள்ளையான் குறித்து உதய கம்மன்பில தெரிவித்த கருத்து
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து விலகி, நாட்டைப் பாதுகாப்பதற்காக இராணுவத்துடன் இணைந்து போராடியவர் தான் பிள்ளையான் என்றும் அவர் தேசப்பற்றாளர் என்ற அடிப்படையிலேயே அவருக்காக முன்னிலையானேன் என பிவிருது ஹெல உறுமயவின் தலைவர் சட்டத்தரணி உதய கம்மன்பில தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (16) நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
பிள்ளையானுடன் 30 நிமிடங்கள் கலந்துரையாடினேன். சட்டத்தரணி என்ற அடிப்படையில் எனது சேவையாளருடன் இரகசியமாகக் கலந்துரையாடலாம். ஆனால், எமது உரையாடலை நான்கு பொலிஸார் முழுமையாகச் செவிமடுத்துக்கொண்டிருந்தனர்.
பிள்ளையான் கதறி அழுதவாறே என்னிடம் கேள்வி எழுப்பினார். புலிகள் அமைப்பில் இருந்து விலகி, இராணுவத்துடன் இணைந்து உயிரைக்கூடப் பணயம் வைத்து புலிகளைத் தோற்கடிப்பதற்குப் போராடினேன்.
நல்லாட்சி காலத்தில் என்னை 5 வருடங்கள் தடுத்து வைத்திருந்தனர். இறுதியில் வழக்குத் தொடுப்பதற்குப் போதுமான சாட்சி இல்லை என்பதால் வழக்கு மீளப்பெறப்பட்டது. தற்போது மீண்டும் தடுப்பில் வைத்துள்ளனர்.
புலிகள் அமைப்பைத் தோற்கடிப்பதற்காக, நாட்டுக்காக உயிரைப் பணயம் வைத்துப் போராடியதாலா என்னை இப்படி நடத்துகின்றனர்? என பிள்ளையான் மிகவும் உணர்வுபூர்வமாக என்னிடம் கேள்வி எழுப்பினார் என்றும் கம்மன்பில தெரிவித்தார். Link | Link
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel | TikTok
Conclusion (முடிவு)
மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் ஈஸ்டர் தாக்குதலுடன் தொடர்புபடுத்தி பிள்ளையானை தேசப்பற்றாளர் என உதய கம்மன்பில தெரிவித்தாக பகிரப்படும் தகவலானது வெவ்வேறு அர்த்தங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளவை என்பது தெளிவாகின்றது.
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து விலகி நாட்டை காப்பாற்ற தனது உயிரைக் கூட பொருட்படுத்தாமல் இராணுவத்திற்கு உதவியமைக்காகவே அவரை உதய கம்மன்பில தேசப்பற்றாளர் என தெரிவித்தமை புலனாகின்றது.
எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:பிள்ளையானை தேசப்பற்றாளர் என கம்மன்பில கூறியது ஏன்?
Fact Check By: Suji ShabeedharanResult: Misleading
