“Seismic Waves CARD” என்ற கோப்பை திறப்பதன் மூலம் உங்கள் தொலைபேசி ஹெக் செய்யப்படுமா?

False சமூகம் | Society

சைபர் தாக்குதல் குறித்து பயனர்களை எச்சரிக்கும் ஒரு செய்தி சமீபகாலமாக WhatsApp  உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றது.

இதில்  “Seismic Waves CARD” என்ற கோப்பைத் திறப்பதன் மூலம் 10 வினாடிகளுக்குள் உங்கள் தொலைபேசி ஹேக் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டு வரும் நிலையில் அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook| Archived Link 

குறித்த பதிவில் ஜப்பான் மற்றும் மொராக்கோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் புகைப்படங்கள் உங்கள்  WhatsApp இற்கு வந்தால் அதை திறக்க வேண்டாம். அந்தக் கோப்பு Seismic Waves CARD என்று அழைக்கப்படுகிறது, அதைத் திறக்காதீர்கள், அது உங்கள் தொலைபேசியை 10 வினாடிகளில் ஹேக் செய்யும், அதை எந்த வகையிலும் நிறுத்த முடியாது. என்று ஆங்கிலத்தில் தெரிவிக்கப்பட்டு கடந்த 2025.01.28 ஆம் திகதி பதிவேற்றப் செய்யப்பட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2023 ஆம் ஆண்டும் இது போன்ற தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்ததனை எம்மால் காண முடிந்தது.

Facebook | Archived Link

குறித்த பதிவில் #எச்சரிக்கை_பதிவு

யூதர்களின் குடியிருப்புகளில் நடக்கும் சண்டையின் படங்களை சிலர் வாட்ஸ்அப்பில் பதிவேற்றம் செய்து வருகின்ற தலனர்

கோப்பு நில அதிர்வு அலைகள் அட்டை என்று அழைக்கப்படுகிறது.

அதை திறக்க வேண்டாம், அது 10 வினாடிகளில் உங்கள் தொலைபேசியை ஹேக் செய்துவிடும் மற்றும் எந்த வகையிலும் நிறுத்த முடியாது.

குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தகவலை அனுப்பவும்.

தொலைக்காட்சியில் அதைப் பற்றிப் பேசினார்கள். பல்வேறு திசைகளில் இருந்தும் நம் மீது சைபர் தாக்குதல் தொடங்கியுள்ளது. என தெரிவிக்கப்பட்டு கடந்த 2023.10.11 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அதன் உண்மை அறியாத பலரும் சமூக ஊடகங்களில் இதனை பகிர்ந்திருந்தமையை எம்மால் காண முடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேலும் இது தொடர்பில் நாம் ஆராய்ந்த போது snopes சர்வதேச இணையதளம் ஒன்றில் இது குறித்த முழுமையான அறிக்கையிடலை எம்மால் காணமுடிந்தது. மேலும் வட்ஸ்அப் மூலம் பகிரப்படும் இந்த தகவல் தொடர்பில் விரிவான தெளிவுபடுத்தலை வழங்கியிருந்ததுடன் அதில் இந்த தகவல் தவறானது என தெரிவிக்கப்பட்டு அதற்கான ஆதாரங்களும் வெளியிடப்பட்டிருந்தது.

மேலும் இது குறித்து அவர்கள் வட்ஸ்அப் உடன் தொடர்புகொண்டு வினவியபோது இது போலியான தகவல் என வட்ஸ்அப் நிறுவனம் உறுதிப்படுத்தியதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், ஸ்னோப்ஸின் அறிக்கையின் படி, வட்ஸ்அப்பில் பரவும் இந்த செய்தி வேறொரு மொழியிலிருந்து மொழிபெயர்க்கப்பட்ட செய்தி என்பதுவும் தெளிவாகியது.

Archive

WhatsApp ஊடாக சந்தேகத்திற்கிடமான கோப்புகள் அல்லது இணைப்புகளைத் திறக்க வேண்டாம் என்று பரிந்துரைகள் இருந்தபோதிலும், “Seismic Waves CARD” என்ற கோப்பு மூலம் ஜப்பான் மற்றும் மொராக்கோவில் நிலநடுக்கங்களின் புகைப்படங்களை குறிவைத்து சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் செய்தியை வட்ஸ்அப் முற்றிலும் ஆதாரமற்றது என்று மறுத்துள்ளது.

குறித்த தகவல் தொடர்பில் வட்ஸ்அப் வெளியிட்ட விளக்கம் NBC செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதுபோன்ற மோசடி தொடர்பான தகவல்கள் இதற்கு முன்னர் பகிரப்பட்டிருந்த போதிலும் தற்போது சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்படும் இந்த அபாய எச்சரிக்கையில் எந்தவித உண்மையும் இல்லை என WhatsApp தனது பயனர்களுக்கு அறிவித்துள்ளதாக  குறித்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த சமூக ஊடக பதிவில் குறிப்பிடப்பட்டதனைப் போன்று 10 வினாடிகளில் தொலைபேசிகள் ஹெக் செய்யப்படுவதற்கான தொழில்நுட்பம்

படங்கள் அல்லது கோப்புகளினால் உள்ளீடுகைகளை மறைக்க முடியும் என்றாலும், குறித்த  தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ள விதத்தில் தொலைபேசிகள் தாக்குதலுக்குள்ளாகும் விதம் நடைமுறைக்கு மாறானது. 

ஒரு தொலைபேசியை 10 வினாடிகளில் ஹேக் செய்துவிடலாம், அதைத் தடுக்க எந்த வழியும் இல்லை என்ற கூற்று உண்மைக்கு புறம்பானது, நடைமுறையில், அவ்வாறானவை ஆபத்துக்களை ஏற்படுத்துவதற்கு முன்பு இணைப்புகளைக் கிளிக் செய்வது அல்லது அனுமதிகளை வழங்குவது போன்ற குறிப்பிட்ட செயல்களைக் கோருகிறது. அதன்படி, ஒரு கோப்பைத் திறப்பதன் மூலம் தொலைபேசியை ஹேக் செய்ய முடியும் என்று கூறப்படுவது நடைமுறைக்கு சாத்தியமற்ற விடயமாகும்.

குறிப்பிட்ட கோப்பு அல்லது செயலி இல்லாமல் புகைப்படங்களை நேரடியாக வட்ஸ்அப்பில் பகிர முடியும் என்று Tech ARPவிளக்குகிறது. பட அடிப்படையிலான மெல்வெயார்கள் தொழில்நுட்ப ரீதியாக சாத்தியம் என்றாலும், அதை செயல்படுத்த பயனர் நடவடிக்கை தேவைப்படுகிறது மற்றும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளபடி 10 வினாடிகள் போன்ற ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தொலைபேசிகள் ஹெக் செய்யப்பட்ட பிறகு மீண்டும் அதனை எந்த விதத்திலும் சரிசெய்ய முடியாது என தெரிவிக்கப்படுவது தவறான தகவலாகும்.

பயனர்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இதற்கு முன்னர் WhatsApp ஊடாக பகிரப்பட்ட அபாய எச்சரிக்கைகள்

இவ்வாறு வட்ஸ்அப் ஊடாக மக்களை தவறாக வழிநடத்தும் நடவடிக்கைகள் இதற்கு முன்னரும் இடம்பெற்றுள்ளன.

2020 இல்  “WhatsApp Gold” ஐ Upgrade செய்வதற்க கிளிக் செய்வதன் மூலம் தொலைபேசிகள் ஹெக் செய்யப்படுவதாக போலியான தகவல்கள் பகிரப்பட்டு வந்தது. அந்த சந்தர்ப்பங்களில் Dance of the Pope” அல்லது  “Martinelli என்ற பெயரில் பகிரப்படும் காணொளிகளை கிளிக் செய்வதனை தவிர்க்கவும் என தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்டது.

எவ்வாறாயினும் இது போன்ற நடவடிக்கைகள் சைபர் தாக்குதல்களை மேற்கொள்பவர்களினால் நடத்தப்படும் செயற்பாடாகும் முதலில் இவை அச்சுறுத்தல்களை ஏற்படுத்தாவிட்டாலும் காலப்போக்கில் இவற்றின் மூலம் பல அபாயகர நிலைகளை தோற்றுவிக்க கூடும்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

மேற்குறிப்பிட்ட தகவல்களின் அடிப்படையில் “Seismic Waves CARD” என்ற கோப்பு வழியாக பதிவேற்றப்பட்ட ஜப்பான் மற்றும் மொராக்கோவில் நிலநடுக்கங்களின் படங்களைப் பயன்படுத்தி தொலைபேசிகள் ஹேக் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படும் அபாய எச்சரிக்கை செய்தியானது தவறானது என்பதுடன்  அத்தகைய சைபர் தாக்குதல் அல்லது தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் கொண்ட கோப்பு இருப்பதற்கான நம்பகமான ஆதாரங்கள் அல்லது உறுதிப்படுத்தப்பட்ட அறிக்கைகள் எதுவும் இல்லை என்பதுவும் தெளிவாகின்றது.

எனினும் மேற்குறிப்பிட்ட சமூக ஊடகப் பதிவு தவறானது என்றாலும் பெரும்பாலும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் பரீட்சயமற்ற இணைப்புகளை கிளிக் செய்வதனை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:“Seismic Waves CARD” என்ற கோப்பை திறப்பதன் மூலம் உங்கள் தொலைபேசி ஹெக் செய்யப்படுமா?

Fact Check By: Suji Shabeedharan 

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *