புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

Missing Context சமூகம் | Society

கத்தோலிக்க திருச்சபையின் ஆன்மீக தலைவராக 12 வருடகாலம் பணியாற்றிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் நேற்று (2025.04.21) நித்திய இளைப்பாறினார்.

இதனைத் தொடர்ந்து புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும் நடைமுறைகள் 15-20 நாட்களுக்கு பிறகு ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த பாப்பரசராக தெரிவு செய்யப்படக் கூடிய பெயர்பட்டியலில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை அவர்களின் பெயரும் இடம்பெற்றுள்ளதாக சில தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிகின்றது.

எனவே அது தொடர்பான உண்மையை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

குறித்த பதிவில் அடுத்த பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் பேராயர் கார்டினல் மல்கம் ரஞ்சித் அவர்களின் பெயர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டு இன்று (2025.04.22) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட தகவல் தொடர்பில் நாம் ஆராய்ந்த போது உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களில் அடுத்த பாப்பரசர் தெரிவிற்கான பெயர் பட்டியல் குறித்து உத்தியோகபூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளியாகியமை தொடர்பான எந்த செய்திகளும் இருக்கவில்லை. 

இருப்பினும் பல உள்நாட்டு மற்றும் சர்வதேச ஊடகங்களில் அடுத்த பாப்பரசராக தெரிவுசெய்யப்படலாம் என எதிர்வுக்கூறப்படும் கர்தினால்களின் பெயர்பட்டியலில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயர் இருப்பதனை எம்மால் அவதானிக்க முடிந்தது.Link | Link |Link |Link | Link 

மேலும் எட்வர்ட் பென்டின் மற்றும் டயான் மொன்டாக்னா தலைமையிலான கத்தோலிக்க பத்திரிகையாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களைக் கொண்ட சுயாதீனக் குழுவினால் நடத்தப்படும் இணையதளமான The College of Cardinals Report, இல் அடுத்த பாப்பரசராவதற்கான வாய்ப்பு அதிகமுள்ள 22 கார்டினல்களின் பெயர்பட்டியல் வெளியாகியிருந்தது. அவர்களில் இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையின் பெயரும் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.

அருட்தந்தை சிரில் காமினி

எனவே அடுத்த பாப்பரசர் தெரிவு குறித்து மேலதிக தெளிவினை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இலங்கை கத்தோலிக்க திருச்சபையின் ஊடகப் பேச்சாளர் அருட்தந்தை சிரில் காமினி அவர்களை தொடர்புகொண்டு வினவியிருந்தோம்.

இதன்போது புதிய பாப்பரசரை கத்தோலிக்க திருச்சபையின் மூத்த அதிகாரிகளான கர்தினால்மார்களே தெரிவுசெய்வார்கள். இவர்கள் அனைவரும் பாப்பரசரினால் நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள், தற்போது 252 கத்தோலிக்க கர்தினால்கள்  உள்ளதாகவும் இவர்களில் 135 பேர் புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கு வாக்களிப்பதற்கு தகுதி பெற்றவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏனையவர்கள் 80 வயதிற்கு மேற்பட்டவர்கள் இதன் காரணமாக அவர்களால் பாப்பரசர் தேர்தலில் பங்கெடுக்க முடியாது. எனினும் யாரை தெரிவு செய்ய வேண்டும் என்ற விவாதத்தில் அவர்கள் கலந்து கொள்ளலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் பாப்பரசர் பதவிக்கு போட்டியாளர்கள் என்று யாரும் இல்லை. உலகிலுள்ள 252 கர்தினால்களில் யாரையும் அடுத்த பாப்பரசராக  தேர்ந்தெடுக்கலாம், எனவும் அவர்களில் 77 வயதான இலங்கையின் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும் அடுத்த பாப்பரசராக வரக்கூடியவர்களின் பெயர்பட்டியல்கள் எதுவும்  வெளியிடப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வத்திக்கான் உத்தியோகப்பூர்வ இணையத்தளம்

புதிய பாப்பரசர் தெரிவு தொடர்பாக எதும் அறிவித்தல்கள் வழங்கப்பட்டுள்ளதா என வத்திக்கானின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினை ஆய்வு செய்தபோது, அவ்வாறான எவ்விதமான அறிவிப்புக்களும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.  Vatican news 

வத்திக்கானின் தற்காலிக தலைவர்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

புதிய பாப்பரசரை தெரிவு செய்வதற்கான நடைமுறைகள் எவ்வாறு இடம்பெறும் 

80 வயதுக்கு குறைவான கர்தினால்கள் வத்திகானில் கூடி புதிய பாப்பரசர் தெரிவுக்கான  இரகசிய நடைமுறைகளை ஆரம்பிப்பார்கள்.

வத்திக்கானில் உள்ள சிஸ்டைன் தேவாலயத்தில் வைத்து இந்த நடைமுறைகள் நடைபெறும். புதிய பாப்பரசரைத் தெரிவு செய்யும்  நடைமுறையில் ஈடுபட்டு இருக்கும் பர்தினால்கள் வெளியுலக தொடர்பு இன்றி இருப்பார்கள். ஊடகங்களிடம் மட்டுமன்றி  தொலைபேசி மூலமாகவும் யாருடனும் தொடர்பில் இருக்க மாட்டார்கள்.

புதிய பாப்பரசராக தெரிவு  செய்யப்படுபவருக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்கும் வரை பல்வேறு கட்ட வாக்கெடுப்பு நடைபெறும். இந்த நடைமுறைகளுக்கு பின்னர் கருப்பு நிற புகை குறியீடாக வெளியிடப்பட்டால் பாப்பரசர் நடைப்பெற்ற வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்படவில்லை என்பதை குறிப்பதோடு, வெள்ளை நிற புகை குறியீடாக வந்தால், புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்டதாக அறிந்துகொள்ள முடியும்.

கர்தினால்கள் தங்கள் வாக்குச்சீட்டை ஒரு நாளைக்கு இரண்டு தடவை எரிப்பதால் வெளிவரும் புகை மாத்திரமே தேர்தல்கள் எவ்வாறு நடைபெறுகின்றன என்பதை தெரிவிக்கும்.

புதிய பாப்பரசர் தெரிவு செய்யப்பட்ட பிறகு, இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்ளுமாறு அவருக்கு முறைப்படி கோரிக்கை வைக்கப்படும். அவர் ஏற்றுக்கொண்டால் அவர் புதிய பாப்பரசராக   அறிவிக்கப்படுவார். 

புனித பீட்டர் பசிலிக்காவில் இருந்து இந்த அறிவிப்பு வெளியிடப்படும். அதன்பிறகு புதிய பாப்பரசர் புனித பீட்டர் சதுக்கத்தில் இருந்து மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்குவார்.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் அடுத்த பாப்பரசராக வரக்கூடியவர்களின் பெயர்பட்டியல் எதுவும் இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை என்பதுவும் தற்போது சில ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள பெயர் பட்டியலானது எதிர்வுக்கூறல்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டவை என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:புதிய பாப்பரசராக வரக்கூடிய பெயர் பட்டியலில் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் பெயர் உள்ளடக்கப்பட்டுள்ளதா?

Fact Check By: suji shabeedharan 

Result: Missing context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *