
INTRO :
பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ஆளும் கட்சி பாராளுமன்று உறுப்பினர் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினரினால் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது “என இம் மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (27.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் முதலில் பாராளுமன்ற உத்தியோகப்பூர்வ யுடியூப் தளத்தில் கடந்த வாரம் 21 ஆம் திகதி (21.05.2026) பதிவாகியிருந்த பாராளுமன்ற நேரலை காணொளியினை நன்கு அவதானித்தோம்.
குறித்த ஆய்வின் போது இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக வன்னித்தேர்தல் தொகுதியில் வென்ற துரைராசா ரவிகரன் தனது உரையின் போது,
“இன்றைய ஏற்றுமதி இறக்குமதி சம்பந்தமான விடயத்திற்கு முதல் எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன.
கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச்சேர்ந்தவர்.
உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்” என கருத்தினை முன்வைத்திருந்தமை காணக்கிடைத்தது.
பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன்
பாராளுமன்று உறுப்பினர் துரைராசா ரவிகரன் இலங்கை தமிழரசு கட்சி சார்பாக வன்னி மாவட்டத்தில் போட்டியிட்டு 11,215 வாக்குகள் பெற்று தெரிவானர்.
பாராளுமன்ற இணையத்தளத்திள் உள்ள தகவலிலும் இவர் இலங்கை தமிழரசு கட்சி உறுப்பினர் என்பது காணக்கிடைத்தது.

இவர் விடுதலைப்புலிகள் அமைப்பின் மூத்ததளபதியும் சமர்க்களநாயகனுமான பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தியமை தொடர்பாக அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
அத்துடன் பிரதான ஊடகங்களிலும் செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்தது.
துரைராச ரவிகரன் இதற்கு முந்தைய பாராளுமன்ற அமர்வுகளில் அரசாங்கத்திற்கு ஆதரவாக எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை!
இந்த அரசாங்கத்தினால் கடந்த 2025.03.28 ஆம் திகதி வெளிடப்பட்ட 2430ஆம் இலக்க வர்த்தமானி மூலம் மொத்தம் 5,941 ஏக்கர் காணிகள், காணி நிர்ணயக்கட்டளைச்சட்டம் 5(1)ஆம் பிரிவில் அரசகாணிகளாக அபகரிக்கதற்கு நடவடிக்கை எடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் உரையாட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்தி அறிக்கை – virakesari.lk
குறித்த வர்த்தமானி பின்னர் அரசாங்கத்தினால் ரத்து செய்யப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் நிலையங்கள் ஊடாக எரிபொருள் வழங்கும் நடைமுறையை நிராகரிப்பதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தமது கருத்தினை வெளியிட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக அவர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திற்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்திருந்தார். virakesari.lk
நமது ஆய்வுகளின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசுக்கு எதிராகத் தொடர்ந்து நிலைப்பாடுடன் இருப்பதும், ஆளும் கட்சியின் எந்தவொரு கொள்கையையோ அல்லது நடவடிக்கையையோ அவர் ஆதரித்தார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதையும் இந்த நடவடிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
தேசிய மக்கள் சக்தி
நமது குழுவினர் பரவுகின்ற காணொளி தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் ஊடகப்பேச்சாளரை தொடர்புக்கொண்டு வினவியபோது, அவர் இது முற்றிலும் போலியான தகவல் என தெரிவித்தார். மேலும் துரைராச ரவிகரன் இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எனவும் தெரிவித்தார்.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பிரிகேடியர் பால்ராஜிற்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்திய ஆளும் கட்சி எம்.பி என பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

