தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையா இது ?

False இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel


INTRO :

தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “அன்று “College Dropout” என்று எழுதப்பட்ட அந்த இடத்தில்,

இன்று வரலாறு வேற மாதிரி எழுதப்பட்டிருக்கிறது! 🔥

உங்கள் கனவுகள் மீது நம்பிக்கை வைத்திருங்கள்…

ஒருநாள் உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும்! ✨

#l “என இம் மாதம் 21 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (21.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் இணையத்தில் வைரலாகும் தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையினை நன்கு அவதானித்த போது, அதில் விஜய் படித்த கல்லூரியின் பெயர் ‘LOYOLAL’ (லயோலால்) என அச்சிடப்பட்டது. ஆனால் அவர்  லயோலா (LOYOLA) கல்லூரியில் தான் கல்வி பயின்றார்.

இணையத்தில் வைரலாகும் மாணவர் அட்டையில் உள்ள இலட்சினையும் லயோலா கல்லூரியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தில் இருந்து பெற்ற உண்மையான இலட்சினை ஒப்பிட்டபோது அது இரண்டும் வெவ்வேறாக காணப்பட்டது.

அதேபோல் Visual Communications பட்டப்படிப்பானது இளம் அறிவியல் (B.Sc – Bachelor of Science) பட்டமாகும், ஆனால் வைரலாகும் படத்தில் இளங்கலை (B.A – Bachelor of Arts) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

நாம் அவர்களின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்திலும் தேடிய போது இது இளம் அறிவியல் (B.Sc – Bachelor of Science) பட்டத்திற்குள்ளே தான் காணப்பட்டது.

Website link 

மேலும் குறித்த மாணவர் அட்டையில் இடப்பட்டுள்ள அதிபரின் கையொப்பம் குருவானவர் ஆரோக்கியசாமி என இடப்பட்டுள்ளது. நாம் குறித்த கல்லூரி வரலாற்றினை ஆய்வு செய்தபோது, குருவானவர் இன்சாக்கல் அல்லது குருவானவர் சேவியர் அல்போன்ஸ் ஆகிய இருவரில் ஒருவராக இருந்திருக்க வேண்டும் என கண்டறியப்பட்டது.

link

link

வைரலாகும் படத்தில் கல்லூரியில் சேர்ந்த வருடம் (Year of Admission) 1996 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் விஜய் 1992 ஆம் ஆண்டிலேயே கல்லூரி படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு நடிக்க வந்துவிட்டார். இது அவரின் தேர்தலின் போது வழங்கிய உறுதிச் சான்றின் மூலம் அதனை நாம் உறுதி செய்துக்கொண்டோம்.

Affidavit link 

Image Detector, Undetectable AI உள்ளிட்ட செயற்கை நுண்ணறிவு அறியும் கருவி மூலம் இணையத்தில் பரவி வருகின்ற குறித்த படத்தை ஆய்வு செய்தபோது குறித்த புகைப்படமானது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்படட்து.

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டை என பரவும் புகைப்படம் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: தமிழக முதலமைச்சர் விஜய் கல்லூரியில் படித்தபோது வழங்கப்பட்ட மாணவர் அடையாள அட்டையா இது ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *