நாயாக மாறிய மனிதன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

False சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel

INTRO :

இந்த நாட்களில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் முழுவதும் மிக வேகமாகப் பரவி வரும் காணொளி ஒன்று, தனது முழு உடலையும் அறுவை சிகிச்சை மற்றும் பச்சை குத்துதல் (Tattoo) மூலம் ஒரு நாயின் தோற்றத்திற்கு மாற்றிக் கொண்ட ஜப்பானிய கோடீஸ்வரர் பற்றிய செய்தியாகும். பார்த்தவுடனேயே எவரையும் வியக்க வைக்கும் இந்தச் சம்பவத்தின் உண்மைத் தன்மையை ஆராய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் நடவடிக்கை எடுத்தோம். 

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

“நாயாக மாறிய மனிதன்! எப்படி நடந்தது தெரியுமா? பார்த்தா நீங்களே ஷாக் ஆகிடுவீங்க! என தெரிவித்து குறித்த காணொளி கடந்த 2026.08.10 ஆம் திகதி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது.

மேலும் அதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

“ஜசோ” என்று கோடீஸ்வரர் யாரும் இல்லை

சமூக வலைத்தள பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, இவ்வாறான அறுவை சிகிச்சையை செய்து கொண்ட “ஜசோ” (Jaso அல்லது Jason) எனப்படும் 26 வயதுடைய ஜப்பானிய கோடீஸ்வரர் ஒருவர் பற்றியோ, அல்லது அத்தகைய நபர் அறுவை சிகிச்சைகள் செய்து கொண்டமைக்கோ, நாயின் தோற்றத்தைப் பெறுவதற்காக 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவழித்தமைக்கோ எந்தவொரு ஆதாரமும் இல்லை.

மேலும் அத்தகைய மிகச்சிறப்பான அழகுக்கலை அறுவை சிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவ மூலங்களோ அல்லது சர்வதேச செய்தி அறிக்கைகளிலோ குறிப்பிடப்படவில்லை.

காணொளி AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டது

இந்தப் பதிவில் காட்டப்பட்டுள்ள மனித-நாயின் காணொளி உண்மையானது அல்ல. இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் போலியாக உருவாக்கப்பட்ட ஒன்றாகும். இதன் பின்னணியில் உள்ள நபரின் கால்கள் மற்றும் செருப்புகள் விகாரமடைந்திருப்பது போன்ற AI தொழில்நுட்பத்தின் பொதுவான பிழைகளை தெளிவாகக் காண முடியும். மேலும், இந்தப் படத்தில் காட்டப்பட்டுள்ளது மெக்ஸிகோவில் வசிக்கும் “Xoloitzcuintle” எனப்படும் உரோமமற்ற நாய் இனத்தின் (Mexican hairless dog) அம்சங்களும் மனித உடலும் இணைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட ஒரு போலிப் படைப்பாகும்.

இதன் உண்மையான கதை என்ன?

இந்தப் போலிக் கதையானு உருவாகியமைக்கு அடிப்படையாக அமைந்தது 2022 ஆம் ஆண்டில் ஜப்பானிலிருந்து பதிவான ஒரு உண்மையான மற்றும் முற்றிலும் வித்தியாசமான சம்பவமாகும். அங்கு “Toco” எனப்படும் ஜப்பானிய நபர் எந்தவித அறுவை சிகிச்சைகளையும் செய்துகொள்ளவில்லை. அவர் செய்தது, விலங்கு ஆடைகளைத் தயாரிக்கும் “Zeppet” எனப்படும் சிறப்பு விளைவு (Special Effects) நிறுவனமொன்றுக்கு 2 மில்லியன் ஜப்பானிய யென்களை, அதாவது அப்போதைய மதிப்பிபடி சுமார் 15,000 அமெரிக்க டொலர்களைச் செலுத்தி, மிகத் யதார்த்தமாகத் தோற்றமளிக்கும் “Border Collie” வகை நாயின் ஆடை ஒன்றைத் தயாரித்துக் கொண்டதாகும். அவர் அந்த உடையை அணிந்து கொண்டு வீடியோக்களை வெளியிடுவதுடன், அது அவரது ஒரு பொழுதுபோக்கு மாத்திரமே ஆகும். இது தொடர்பான மேலதிக விபரங்களை இங்கே மற்றும் இங்கே பார்க்கலாம்.


எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஜப்பானிய நபர் ஒருவர் 2.7 மில்லியன் அமெரிக்க டொலர்களைச் செலவழித்து அறுவை சிகிச்சை மூலம் நாயாக மாறினார் எனப் பரவும் தகவல்கள் முற்றிலும் போலியானவையாகும். அந்தத் தகவலுடன் பரவும் புகைப்படம் மற்றும் காணொளி  AI தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டதாகும். மேலும், இதனுடன் உண்மைக் கதையாகத் தொடர்புபடுத்தப்பட்டுள்ளது Toco இன் சம்பவமாகும். Toco என்பவர் நாயின் தோற்றத்தைத் தரும் அதி யதார்த்தமான ஆடை ஒன்றை உருவாக்குவதற்காக வெறும் 2 மில்லியன் யென்களை மட்டுமே செலவிட்டுள்ளாரே தவிர, அவர் அறுவை சிகிச்சைகள் மூலம் நாயாக மாறவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.

Result Stamp

Title: நாயாக மாறிய மனிதன் என பகிரப்படும் காணொளி உண்மையா?

Written By: Suji Shabeedharan

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *