
INTRO :
இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளிகள் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் விடுக்கப்பட்டுள்ள சுனாமி #எச்சரிக்கை.!!
இந்தோனேசியாவின் வடமேற்கு நகரான என்டேவை மையமாகக் கொண்டு புளோரஸ் தீவுக் கடற் பகுதியில் சுமார்- 10 கிலோ மீற்றர் ஆழத்தில் இன்று(15) அதிகாலை 7.7 ரிக்டர் அளவிலான மிகவும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன் ஏராளமான கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
நிலநடுக்கத்தின் தீவிரத்தைத் தொடர்ந்து இந்தோனேசியாவின் கடலோரப் பகுதிகளுக்கு உடனடியாகச் சுனாமிப் பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுப் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த நிலநடுக்கத்தால் இலங்கைக்குத் தற்போது சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.” என இம் மாதம் 15 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (15.08.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த 15 ஆம் திகதி (15.08.2026) இந்தோனேசியாவின் வடமேற்கு நகரான என்டேவை மையாமாக கொண்டு 7.7 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதினை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
அதில் 47 பேர் வரை இறந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. BBC Link
குறித்த நிலநடுக்கத்தின் போது பதியப்பட்ட காட்சிகள் என சமூகவலைத்தளங்களில் பகிரப்படும் காணொளி தொகுப்பினை நாம் ஆய்வு செய்தோம்.
முதலாவது காணொளி

இது கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி தாய்வான் நாட்டின் தலைநகரான தாய்பே நகரில் 7.4 ரிச்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.
இரண்டாவது காணொளி மற்றும் மூன்றாவது காணொளி
நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் இது கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி (10.10.2025) பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது பதிவான காட்சிகள் என கண்டறியப்பட்டது. News link
மேலும் அதில் பதிவாகி இருந்த மீதமுள்ள காட்சிகள் இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை நடந்த நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் என்பது எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. Link
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில், இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தின் போது என பகிரப்படும் காணொளிகள் அனைத்தும் இந்தோனேசியாவில் கடந்த சனிக்கிழமை ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது எடுக்கப்பட்ட காட்சிகள் அல்ல என எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok | Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

