உலகின் மிகப் பெரிய முதலை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

Missing Context சர்வதேசம் | International

உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்தில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவித்து காணொளியொன்று சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே அது குறித்த உண்மை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.

தகவலின்விவரம் (What is the claim):

Facebook | Archived Link

உலகின் மிகப்பெரிய முதலை… 20 அடி நீளமுள்ள உலகின் மிகப்பெரிய முதலை இந்தியாவில் சமீபத்திய வெள்ளத்தில் கண்டறியப்பட்டது. என தெரிவித்து குறித்த காணொளியானது கடந்த 2025.08.20 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

எனவே இது குறித்த உண்மையை அறிய அண்மையில் இந்தியாவில் உலகிலேயே மிகப்பெரிய முதலை கண்டுப்பிடிக்கப்பட்டமை தொடர்பான செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது கண்டறியப்பட்டது.

ஆகவே மேற்குறிப்பிட்ட காணொளியின் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருந்தோம் இதன்போது, x1news எனும் YouTube பக்கத்தில் குறித்த காணொளியானது கடந்த ஆகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

தொடர்ந்து நாம் அந்த காணொளியில் குறிப்பிடப்பட்டிருந்த தகவல் குறிப்பு தொடர்பில் ஆராய்ந்த போது, அதில் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகளின் ஒன்றியப் பகுதியின் தலைநகரான போர்ட் பிளேரில் கிட்டத்தட்ட 20 அடிக்கு மேல் நீளமான இந்த முதலை தென்பட்டதாகவும், இருப்பினும் அதன் சரியான அளவை அதிகாரப்பூர்வமாக இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும் இந்த காணொளி எப்போது யாரால் எடுக்கப்பட்டது என்பது தொடர்பிலும் இதுவரை எந்த உறுதியான தகவல்களும் இல்லை எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும் அந்த முதலையின் நீளம் தொடர்பான உறுதியான தகவல்கள் எங்கும் வெளியிடப்படவில்லை.

இது குறித்து நாம் தொடர்ந்து தேடுதலில் ஈடுபட்ட போது Times Of India இணையதளத்தில் கடந்த ஜுலை மாதம் உலகின் மிகப்பெரிய முதலைகள் தொடர்பில் வெளியான கட்டுரையை எம்மால் காணமுடிந்தது.

அதில் அவுஸ்திரேலியாவிலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் பாதுகாக்கப்பட்டு வந்த Cassius என்ற முதலை கடந்த ஆண்டு (2024) உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. 

சுமார் ஒரு தொன் எடை மற்றும் 18 அடி நீளம் கொண்ட இந்த முதலை சுமார் 110 வருடங்கள் பழமையானதான இருக்கலாமென கூறப்படுகிறது. 

மிகப்பெரிய உவர்நீர் முதலையான இது, குயின்ஸ்லாந்திலுள்ள வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த 1980ம் ஆண்டு முதல் வசித்து வருகிறது.

2011ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய முதலை என்ற கின்னஸ் சாதனைனையும் Cassius படைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது. Link

மேலும் இது தொடர்பில் key word கொண்டு நாம் ஆராய்ந்த போது உலகின் மிகப்பெரிய முதலை என கின்னஸ் சாதனை படைத்த முதலை இரந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்ட பல செய்திகளை எம்மால் காணமுடிந்தது.BBC | Link

ஆனால் அதற்குப் பின்னர் உலகின் மிக நீண்ட முதலைகள் கண்டுப்பிடிக்கட்டதாக எந்த அதிகாரப்பூர்வ அறிக்கைகளையும் காணமுடியவில்லை.

எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் 20 அடி நீளமான உலகின் மிகப் பெரிய முதலை இந்தியாவில் கண்டுப்பிடிக்கப்பட்டமைக்கான எந்தவித அதிகாரப்பூர்வ அறிக்கைகளும் இல்லை என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:உலகின் மிகப் பெரிய முதலை இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டதா?

Fact Check By: Suji shabeedharan 

Result:Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *