
இலங்கையில் பிரபல பத்திரிக்கையில் ஒன்றான மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் பெயரில் பேஸ்புக் பக்கங்களில் முஜிபுர் ரஹ்மான் மற்றும் அசாத் சாலி ஆகியவர்களின் பெயர்களில் சில செய்திகள் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.
தகவலின் விவரம்:

Carrim Thasim என்ற பேஸ்புக் கணக்கில் ” ஞானசாரவும் ரிஸ்வி முப்தியும் ஆடையில் மட்டுமே வேறுபட்டவர்கள் – முன்னாள் பா.உ முஜிபுர் ரஹ்மான் விசனம்
செல்பி மோகத்தில் மாட்டிக்கொண்ட இளைஞர் ; மரணம் இந்தியா உத்திர பிரதேசத்தில் சம்பவம்
மத்திய கொழும்பு முஸ்லிம்கள் சிந்தித்து வாக்களியுங்கள்
பைரூஸ் போன்ற முட்டாள்களை தெரிவு செய்யாமல் முஜிபுர் ரஹ்மான் போன்ற புத்திசாலிகளை தெரிவு செய்யுங்கள் சாலி கொழும்பு முஸ்லிம்களிடம் வேண்டுகோள் “ என்று இம் மாதம் 18 ஆம் திகதி (18.05.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
குறித்த பதிவில் முன்று வேறுபட்ட சம்பவங்களும் நபர்களையும் மையப்படுத்தி செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த பதிப்பில் பதிவேற்றம் செய்யப்பட்ட பத்திரிக்கையின் பிரதியில் பயன்படுத்தியுள்ள மெட்ரோ News பத்திரிக்கையின் இலச்சினை மெட்ரோ இணையத்தளத்தின் இலச்சினை ஆகும்.
மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் இலச்சினையில் Daily மற்றும் weekly என்ற இரு சொற்கள் பயன்படுத்தப்படும்..
மேலும் நாம் மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் ஆசிரியர் ஆர்.சேதுராமனை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு குறித்த செய்தி தொடர்பில் வினவிய போது, குறித்த செய்தி முற்றிலும் போலியானது என தெரிவித்தார்.
மேலும் இந்தப் போலிச்செய்தி தொடர்பில் தமது நிறுவனம் பொறுப்புடையது அல்ல எனவும் வாசகர்கள் இவ்வாறான போலிச் செய்திகள் தொடர்பில் வாசகர்கள் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதை போன்று சம்பிக்க ரணவக்க பெயரில் ஒரு செய்தியும் வெளியாகியிருந்தமை தொடர்பில் நாம் மேற்கொண்ட ஆய்வினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
மேலும் குறித்த செய்தி போலியானது என அந்நிறுவனத்தில் பணியாற்றும் நபரொருவரால் பேஸ்புக் கணக்கிலும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இதற்கமைய மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி என பேஸ்புக்கில் பகிரப்பட்ட மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையின் புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.
Conclusion: முடிவு
மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தி எனக் கூறி பேஸ்புக்கில் பகிரப்பட்ட புகைப்படம் போலியானது என்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Title:மெட்ரோ நியூஸ் பத்திரிக்கையில் வெளியான செய்திகள் உண்மையா?
Fact Check By: Nelson ManiResult: False