
தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பணம் அச்சிடப்படுவதாக தெரிவக்கப்பட்ட தகவல்கள் காலத்திற்கு காலம் பகிரப்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
அந்தவகையில் தற்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடன் கூடிய 2000 ரூபாய் நாணயத்தாள் அச்சிடப்பட்டுள்ளமை தொடர்பில் பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே அது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நாம் ஆய்வொன்றை மேற்கொண்டோம்.
தகவலின்விவரம் (What is the claim):

“பணம் அச்சிடப்பட்டதாக நாங்கள் கூறியபோது, முடிந்தால் அநுரவின் கையொப்பமிட்ட நாணயத்தாளை காட்டுமாறு எங்களை பார்த்து சிரித்தார்கள்” என தெரிவிக்கப்பட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் கையெழுத்துடனான நாணயத்தாளின் புகைப்படத்துடனான பதிவொன்று கடந்த 2025.08.29 ஆம் திகதி சிங்கள மொழியில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் பலரும் இதனை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையையும் எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மேற்குறிப்பிட்ட 2000 ரூபா நாணயத்தாள் தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டோம்.
இதன்போது, இலங்கை மத்திய வங்கி தனது 75வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில் கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி (2025.08.29) 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத்தாளை புழக்கத்திற்காக வெளியிட்டுள்ளது.
மேலும் இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும்.
தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், “சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை ” என்ற, ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நாணயத்தாள்கள் 50 மில்லியன் நாணயத்தாள்களைக் கொண்ட மட்டுப்படுத்தப்பட்ட வெளியீடு எனவும், இன்று முதல் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் ஊடாக இந்த நாணயத்தாள்கள் படிப்படியாக புழக்கத்திற்கு விடப்படும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த நாணயத்தாள்கள் இலங்கையில் எந்த அளவு பணத்தையும் செலுத்த செல்லுபடியாகும் என்றும், இந்த நாணயத்தாள்கள் புழக்கத்தில் இருக்கும் வரை இலங்கை மத்திய வங்கியின் பொறுப்பாகும் என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் இந்த நாணயத்தான் 2025.08.28 ஆம் திகதியே வெளியிடப்பட்டிருந்தது என குறிப்பிடப்பட்டிருந்ததுடன். இந்த நாணயத்தாளின் வடிவமைப்பின் முக்கிய அம்சங்கள் தொடர்பிலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

நாணயத்தாள் தொடர்பான முழுவிபரங்களை இங்கே காண்க
எனவே மத்திய வங்கியிள் அறிவிப்பின்படி, கடந்த ஆகஸ்ட் 29 ஆம் திகதி முதல் உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் குறித்த 2000 ரூபா நாணயத்தாள் படிப்படியாக புழக்கத்திற்கு விடப்படும் என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் கையெழுத்துடனான இந்த புதிய நாணயத்தாள் இதற்கு முன்னர் அச்சிடப்படவில்லை என்பது உறுதியானது.
நினைவு நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத்தாள்கள்
பல்வேறு சந்தர்ப்பங்களை நினைவுகூரும் வகையில் இலங்கை மத்திய வங்கி 1957 முதல் நினைவு நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத்தாள்களை வெளியிட்டு வருகிறது.
இந்த நினைவு நாணயங்கள் இரண்டு வடிவங்களில் வெளியிடப்பட்டுள்ளன.
- புழக்கத்திற்கான நினைவு நாணயங்கள்
- புழக்கத்திற்கு வராத நினைவு நாணயங்கள்
இது குறித்த மேலதிக விபரங்களை இங்கே காண்க
நினைவு நாணயக் குற்றிகள் மற்றும் நாணயத் தாள்களை அச்சிடுவது பணவீக்கத்தில் தாக்கம் செலுத்துமா?
இது தொடர்பில் நாம் பொருளாதாரப் பேராசிரியர் சிறிமல் அபேரத்னவிடம் வினவியபோது, இலங்கை மத்திய வங்கி 50 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள 2000 ரூபாய் நினைவு நாணயத்தாள்களை வெளியிட்டுள்ளது. இலங்கையில் மொத்த பண விநியோகத்தைப் பொறுத்தவரை, இது ஒப்பீட்டளவில் சிறிய தொகையாகும், மேலும் மொத்த பண விநியோகம் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு இல்லாததால்,பணவீக்க சூழ்நிலை ஏற்படாது என்று அவர் தெரிவித்தார்.
இதேபோல், உரிமம் பெற்ற வணிக வங்கிகள் மூலம் இந்த நாணயத்தாள்கள் படிப்படியாக புழக்கத்தில் விடப்படுகின்றன. இந்த கட்டுப்படுத்தப்பட்ட விநியோகம், பண விநியோகத்தில் திடீர் அதிகரிப்பைத் தடுக்க உதவுகிறது, இதன் மூலம் விலை நிலைத்தன்மைக்கு பங்களிக்கிறது.
இருப்பினும், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியின் 75வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக வெளியிடப்படுகிறது, மேலும் இது பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்வதையோ அல்லது பணவீக்கத்தைப் பாதிக்கும் வகையில் பண விநியோகத்தை அதிகரிப்பதையோ நோக்கமாகக் கொண்டிருக்கவில்லை.
இலங்கை மத்திய வங்கி எப்போது புதிய நாணயத்தாள்களை அச்சிட வேண்டும்?
இலங்கை மத்திய வங்கி இரண்டு காரணங்களின் அடிப்படையில் புதிய நாணயத்தாள்களை அச்சிட வேண்டும்.
ஒன்று, பயன்படுத்தும்போது தேய்ந்து போய் படிக்க முடியாத அளவுக்கு மாறிவிட்ட நாணயத்தாள்களை மாற்றுவதற்காகவும், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ப நாணயத்தாள்களை அச்சிடுதல் வேண்டும்.
நாட்டின் உற்பத்தி அதிகரித்து பொருளாதாரம் வலுப்பெறும் போது, அந்தப் பொருட்களை வாங்க மக்களுக்கு பணம் தேவைப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், நாட்டின் வளர்ச்சிக்கு ஏற்ப புதிய நாணயத்தாள்கள் அச்சிடப்படுகின்றன. Link | Link
புதிய மத்திய வங்கிச் சட்டத்தில் பணம் அச்சிடுவதற்கு கட்டுப்பாடு!
புதிய மத்திய வங்கிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதன் மூலம் அரசாங்கம் பணத்தை அச்சிடுவதற்கான கோரிக்கைகளைச் செய்யும் திறன் கடுமையாகக் குறைக்கப்பட்டது, மேலும் மத்திய வங்கியை மேலும் சுயாதீனமாக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
நாட்டில் ஒரு சிறப்பு பாதுகாப்பு பிரச்சினை மற்றும் உலகளாவிய சுகாதார பிரச்சினை ஏற்பட்டால் மாத்திரமே பணத்தை அச்சிடும் வாய்ப்பு வழங்கப்படுகிறது, மேலும் வெளியிடப்பட்ட திறைசேரி உண்டியல்களின் மதிப்பில் 5% ஐ தாண்டாத தொகையை மாத்திரமே அச்சிட முடியும்.
இது தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய வழங்கிய விளக்கம் இங்கே.
எங்களதுசமூகவலைதளபக்கங்களைபின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube

Title:ஜனாதிபதியின் கையெழுத்துடன் அச்சிடப்பட்ட புதிய நாணயத்தாள் தொடர்பான தெளிவுபடுத்தல்
Fact Check By: Suji shabeedharanResult: Misleading
