
INTRO :
நுவரெலியா டன்சினன் நீர்வீழ்ச்சி வெள்ளத்திலிருந்து கோயிலை காத்த அம்மன் என ஒரு வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

மலைநாடு என்ற பேஸ்புக் கணக்கில் ” மலையகத்தில் பேரதிசியம்
நுவரெலியா டன்சினன் நீர்வீழ்ச்சி வெள்ளத்திலிருந்து கோயிலை காத்த அம்மன்.
🔴நேரடி காட்சி
https://youtu.be/8yVSaVHY0s0 “ என இம் மாதம் 14 ஆம் திகதி (14.07.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
நாம் குறித்த வீடியோவை ஆய்விற்கு உட்படுத்திய போது, இது 2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இணையத்தில் முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.
அதில், சிங்களத்தில் ஒரு நபர் தொலைபேசியில் உரையாடும் குரல் பதிவும் பதிவாகி இருந்தது, அதில் எப்படி மழை, பூண்டுலோயாவில் வெள்ளப்பெருக்கு என்று அவரின் வீட்டுக்கு சொல்கின்றார்.
அந்த வீடியோவே தற்போது இணையத்தில் மீண்டும் பதிவேற்றம் செய்து டன்சினன் நீர்வீழ்ச்சி வெள்ளத்திலிருந்து கோயிலை காத்த அம்மன் என பகிர்ந்து வருகின்றமை உறுதி செய்யப்பட்டது.
நாம் கூகுளில் 2015 ஆம் ஆண்டு குறித்த வீடியோ தொடர்பாக தேடியபோது, அம்மன் காத்ததாக எவ்விதமான செய்தியும் பதிவாகி இருக்கவில்லை.

மேலும், குறித்த கோயிலுக்கு அருகாமையில் டன்சினன் நீர்வீழ்ச்சி இருப்பதால், அதில் வந்த வெள்ள நீர் வீடியோவை எடுத்து தவறான கருத்தினை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

நாம் தொடர்ந்து இது குறித்து வெவ்வேறு காலப்பகுதியில் தேடுதல்களை மேற்கொண்டபோது, மழைக்காலங்களில் குறித்த நீர்வீழ்ச்சியில் இயல்பு நிலை மாற்றங்கள் காணப்படுகின்ற வீடியோ எமக்கு கிடைக்கப்பெற்றன.
மேலும் குறித்த வீடியோவின் கீழ் மக்கள் இது பொய்யான கருத்து என பதிவிட்டு வருகின்றமையும் காணக்கிடைத்தது.

நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், நுவரெலியா டன்சினன் நீர்வீழ்ச்சி வெள்ளத்திலிருந்து கோயிலை காத்த அம்மன் என பகிரப்படும் வீடியோ போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:நுவரெலியா டன்சினன் நீர்வீழ்ச்சி வெள்ளத்தில் இருந்து கோயிலை காத்த அம்மனா?
Fact Check By: Nelson ManiResult: False