
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சி மலர்கள் ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் (Horton Plains National Park) பூத்துக் குலுங்குகின்றன என தெரிவிக்கப்பட்டு காணொளியொன்று தற்போது சமூக ஊடகங்களில் வைராலாக பகிரப்பட்டு வருகின்றது.
எனவே அது தொடர்பில் உண்மையை ஃபேக்ட கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
இலங்கையின் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் (Horton Plains National Park) குறிஞ்சி மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன.
இந்த மலர்கள் பொதுவாக பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே பூக்கும் தன்மை கொண்டவை, இதனால் இது ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதப்படுகிறது.
இந்த அரிய காட்சியைக் காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வருகை தருகின்றனர். என தெரிவிக்கப்பட்டு 2025.10.12 ஆம் குறித்த காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் சமூக ஊடகங்களில் இதனை பலரும் பகிரந்திருந்ததுடன், பல ஊடகங்களிலும் இந்த காணொளி வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.

Website Link| Archived Link
Fact Check (உண்மை அறிவோம்)
உண்மையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை பூக்கும் குறிஞ்சு மலர்களுக்கும் சமூக ஊடகங்களில் பகிரப்படும் காணொளியில் உள்ள பூக்களுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்பட்டமையை பார்க்கமுடிந்தது.
சமூக ஊடகங்களில் குறிஞ்சு பூ என்று பகிரப்பட்ட உள்ள பூவின் தன்மையும் அந்த தாவரத்தின் தன்மையும், தற்போது, ஹோட்டன் சமவெளியில் பூத்திருக்கும் குறிஞ்சு மலர்களில் தன்மையிலிருந்து வேறுபட்டிருந்தது.
அதேபோன்று இந்த மலர்களை பார்வையிடச் சென்ற சமூக ஊடகப் பயனர்கள் அதன் உண்மையான புகைப்படங்களை பதிவேற்றியுள்ளமையையும் காணமுடிகின்றது.
Facebook
மேலும் பிரதான ஊடகங்களிலும் ஹோட்டன் சமவெளியில் மலர்ந்திருக்கும் உண்மையான குறிஞ்சி மலர்களின் காணொளிகள் பதிவேற்றப்பட்டிருந்தது
குறிஞ்சி மலர்களின் உண்மையான புகைப்படம்
அதன்படி, மேலே உள்ள காணொளியில் இருக்கும் மலரும், இலங்கையில் ஹோட்டன் சமவெளியில் காணப்படும் குறிஞ்சி மலரின் நிறம் மற்றும் வடிவம் வேறுப்பட்டு காணப்படுகின்றமையினால்.நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆய்வினை மேற்கொண்டிருதோம்.
இதன்போது இந்த காணொளி இலங்கையில் எடுக்கப்பட்ட காணொளி அல்ல எனவும், அது சீனாவின் நிக்போவில் உள்ள Ningbo Jin’e மலையில் மலரும் Rhododendron (ரோடோடென்ட்ரான்) என்ற மலர் என்பதனை அறியமுடிந்தது.
mbd.baidu.com
நிங்போ ஜின்ஹே மலையிலுள்ள ரோடோடென்ட்ரான் மலர்கள் என்பது சீனாவின் நிங்போவில் உள்ள ஜின்ஹே மலையில் ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியிலிருந்து மே மாதத்தின் நடுப்பகுதி வரை பூக்கின்றன. இந்த மலையின் முக்கிய ஈர்ப்பாக இருக்கும் வண்ணமயமான பூக்களைப் பார்க்க வரும் மலையேறுபவர்கள் மற்றும் முகாம் இடுபவர்களுக்கு இந்தப் பகுதி ஒரு பிரபலமான இடமாகும். இணைய அறிக்கைகள்
மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள மச்செங்கில் உள்ள குய்ஃபெங் மலையின் ‘ரோடோடென்ட்ரான்’ காடு பற்றி வெளியான இணைய அறிக்கை பின்வருமாறு
en.hubei.gov.cn
சுற்றுலாப் பயணிகளால் புகைப்படம் எடுக்கப்பட்ட ரோடோடென்ட்ரான் பூக்கள். Link | Link | Link
‘ரோடோடென்ட்ரான்’ ஊதா-இளஞ்சிவப்பு அல்லது இளஞ்சிவப்பு-வெள்ளை நிறங்களில் பெரிய மற்றும் பல்வேறு வகையான பூக்கள் காணப்படுகின்றது. ‘ரோடோடென்ட்ரான்’ பூக்கள் பொதுவாக 3 முதல் 6 அங்குல அகலம் கொண்டவை.
ரோடோடென்ட்ரான் பூவின் புகைப்படம்
blueridgemountainlife.com
ரோடோடென்ட்ரான்கள் சீனாவில், குறிப்பாக குய்சோ மாகாணத்தில் உள்ள பைலி மற்றும் ஹூபேயில் உள்ள குய்ஃபெங் மலை போன்ற இடங்களில் காணப்படுகின்றன. அவை உலகளின் பல இடங்களில் காணப்படுகின்றன,நேபாளம், இந்தியா ( உத்தரகண்ட், இமாச்சலப் பிரதேசம்) மற்றும் பூட்டான், முக்கியமாக இமயமலைப் பகுதியில் காணப்படுகின்றன. மேலும் வட அமெரிக்காவின் சில பகுதிகள், ஐரோப்பா மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலும் காணப்படுகின்றன.Link | Link | Link
தேசிய தாவரவியல் பூங்காவின் முன்னாள் பணிப்பாளர்
மேற்குறிப்பிட்ட மலர்கள் தொடர்பில் அறிவதற்கு, தேசிய தாவரவியல் பூங்காவின் முன்னாள் பணிப்பாளரும், தேசிய அடிப்படை ஆய்வுகள் நிறுவனத்தின் தாவர வகைப்பாடு மற்றும் பாதுகாப்பு அலுவலகத்தின் பணிப்பாளருமான பேராசிரியர் சிரில் விஜேசுந்தரவிடம் வினவினோம்.
மேற்கண்ட சமூக ஊடக காணொளியில் ஸ்ட்ரோபிலாந்தஸ் (Strobilanthes) இனத்தைச் சேர்ந்த ‘குறிஞ்சி மலர்கள்’ காட்டப்படவில்லை என்றும், இந்த காணொளியில் இருப்பது ரோடோடென்ட்ரான் இனத்தைச் சேர்ந்த அசேலியா (Azalea) வகை மலர்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் உள்ள ஒரே ரோடோடென்ட்ரான் இனம், Rhododendron arboretum இனம் மாத்திரமே எனவும், ஆனால் அது மேலே உள்ள காணொளியில் காட்டப்பட்டுள்ள இனங்களிலிருந்து முற்றிலும் வேறுபட்டது என்றும் சுட்டிக்காட்டினார்.
Rhododendron arboretum மலரின் புகைப்படம்
நுவரெலியா/ஹக்கல பகுதிகளில் பல வகையான அசேலியாக்கள் பயிரிடப்படுவதாகவும், அவை பெரும்பாலும் ரோடோடென்ட்ரான் இண்டிகம் (Rhododendron indicum) வகைகளாகும் என்றும் குறிப்பிடப்பட்டார்.
குறிஞ்சி மலர்கள் பெரும்பாலும் இலங்கைக்கு சொந்தாமான அதேவேளை அவற்றில் இலங்கைக்கு உரித்தான 35 மலர் இனங்கள் உள்ளதாகவும், நீல குறிஞ்சி(Strobilanthes sexennis), ஊதா குறிஞ்சி (Strobilanthes pulcherrima), மஞ்சள் குறிஞ்சி, வெள்ளை குறிஞ்சி (Strobilanthes viscosa)பேன்ற மலர்களை சாதரணமாக காண முடியும் எனவும் பேராசிரியர் தெரிவித்தார்.
குறிஞ்சி மலர்கள் (Strobilanthes வகை)
இது Acanthaceae குடும்பத்தைச் சேர்ந்தது மற்றும் இலங்கை, இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளை பூர்வீகமாகக் கொண்டது. இந்த இனத்தில் உலகளவில் சுமார் 450 இனங்கள் உள்ளன, மேலும் இலங்கையில் சுமார் 33 இனங்கள் உள்ளன, அவற்றில் சுமார் 30 இனங்கள் இலங்கைக்கு மாத்திரமே உரித்தானவை.
இந்தப் பூக்களுக்கு இடையேயான மிகவும் குறிப்பிடத்தக்க வேறுபாடு அவற்றின் பூக்கும் சுழற்சிகளில் உள்ளது. இவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்ட தாவரங்கள் ஒற்றைத் தண்டு நடத்தையை வெளிப்படுத்துகின்றன, அதாவது அவை இறக்கும் முன் ஒரு முறை மட்டுமே பூக்கும். பல இனங்கள் 12-14 வருடங்களுக்கும் ஒருமுறை பூக்கும். அவை பூப்பதற்கு முன்பு பல ஆண்டுகள் ஆற்றலைச் சேகரிக்கின்றன. பூக்கும் மற்றும் விதை உற்பத்திக்குப் பிறகு, முழு தாவரமும் இறந்துவிடும், மேலும் விதைகள் அடுத்த சுழற்சி வரை மண்ணில் செயலற்ற நிலையில் இருக்கும் என்று அறிக்கைகள் தெரிவிக்கின்றன. Link | Link
குறிஞ்சி இனங்கள் பாதுகாப்பு சிக்கல்களை எதிர்கொள்கின்றன, ஒரு இனம் (Strobilanthes caudata) ஏற்கனவே அழிந்துவிட்டதாகவும் கருதப்படுகிறது. அவை இலங்கை சட்டங்களின் கீழ் சட்டப்பூர்வமாகப் பாதுகாக்கப்படுகின்றன, இதில் வனவிலங்கு மற்றும் தாவரங்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டம், வனப் பாதுகாப்பு கட்டளைச் சட்டம் மற்றும் தேசிய சுற்றுச்சூழல் சட்டம் ஆகியவை அடங்கும்.
மத்திய மலைப்பகுதிகளில், குறிப்பாக ஹோட்டன் சமவெளி தேசிய பூங்காவில் காணப்படுகின்றன. அவை முக்கியமாக ஈரமான மண்டலத்தில், குறிப்பாக உயரங்களில் காணப்படுகின்றன, சில இனங்கள் வறண்ட மண்டலத்தில் காணப்படுகின்றன.
2025 மலர்ந்துள்ள குறிஞ்சி மலர்களும் இந்த தனித்துவமான நிகழ்வைக் எமக்கு காண்பிக்க ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது, இது 2013 ஆம் ஆண்டிற்கு பிறகு சுமார் 12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழ்கிறது. அடுத்து இந்த குறிஞ்சு மலர்கள் மலரும் நிகழ்வு 2037 இல் நிகழும். உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இந்த அரிய நிகழ்வைக் காண ஹோட்டன் சமவெளிக்கு வருகைத் தந்த வண்ணம் உள்ளனர்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வுகளின் அடிப்படையில் ஹோட்டன் சமவெளியில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு பூத்துக் குலுங்கும் ‘குறிஞ்சி மலர்கள்’ என பகிரப்படும் காணொளியானது, தவறானது என்பதுடன் அது சீனாவின் நிங்போவில் உள்ள Ningbo Jin’e மலையில் பூக்கும் Rhododendron (ரோடோடென்ட்ரான்) இனத்தைச் சேர்ந்த அசேலியா மலர் என்பது கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Title:ஹோட்டன் சமவெளியில் பூத்துக் குலுங்கும் “குறிஞ்சி மலர்களின்” காணொளியா இது?
Fact Check By: Suji ShabeedhranResult: Misleading
