
அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜப்கஷ அண்மையில் மாத்தளைக்கு விஜயம் செய்திருந்தார். இந்த சந்தர்ப்பத்தில் அவருடன் இளைஞர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவாளர் எனவும் அவர் நாமல் ராஜபக்ஷவுடன் ஒன்றாக எடுத்துக்கொண்டதாக தெரிக்கப்பட்ட சில புகைப்படங்கள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமையை காணமுடிந்தது.
எனவே அது குறித்த உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் அண்மையில் நாமல் ராஜபக்ச மாத்தளையில் அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்துக்கு விஜயம் செய்தபோது அங்கு ஒரு இளைஞன் அவருடன் முரண்பட்டான்.
அப்போது அங்கு நாமல் ராஜபக்சே அவ் இளைஞனைப் பார்த்து நான் எனது அரசியலை சரி செய்து கொள்கிறேன்.நீங்கள் உங்கள் அரசியலை செய்யுங்கள். எம்மால் இம்மக்கள் பாதிக்கப்படக்கூடாது. நாம் இருவரும் இளைஞரே என்று கூறி ஒரு நாடகத்தை நடத்தி இருந்தார்.
இங்கு நாடகம் என்று குறிப்பிடுவதற்கான காரணம்:அவருடன் முரண்பட்ட இளைஞர் அவரின் கட்சி தோழரே.என்பதை கீழுள்ள புகைப்படம் நிரூபிக்கின்றது.
மக்களைப் பார்வையிடுவதற்கு வெறுங்கையுடன் சென்றாலும். மக்கள் கவனத்தை தம் பக்கம் இருக்கும் வழியில் ஒரு நாடகத்தை சிறப்பாக அரங்கேற்றி இருந்தார்.
ஒரு காலம் இருந்தது இவ்வாறான நாடகங்களை மக்கள் நம்பி வாக்களித்த காலம். அது தற்பொழுது மலையேறிவிட்டது.
மக்கள் மிகவும் தெளிவாக உள்ளனர்.
தேசிய மக்கள் சக்தி மக்களின் கண்களை திறந்து உள்ளது என தெரிவிக்கப்பட்டு 2025.12.19 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த 17 ஆம் திகதி மாத்தளை, லக்கல பகுதியில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டு தற்காலிக முகாம்களில் தங்கியுள்ள மக்களை பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ சென்று பார்வையிட்ட சந்தர்ப்பத்தில் அங்கு வருகைத் தந்திருந்த இளைஞர் ஒருவர் நாமலுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்த செய்திகள் காணொளியுடன் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருந்தது. Link | Link | Link
எனினும் Hiru NEWS செய்திகளில் வாக்குவாதத்தில் ஈடுபட்ட குறித்த இளைஞர் தேசிய மக்கள் சக்தியின் மாத்தளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரின் உறவினர் என தெரிவிக்கப்பட்ட அதேவேளை, Ada Derana
செய்திகளில் தேசிய மக்கள் சக்தியின் கட்சி உறுப்பினர் என குறிப்பிடப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.
நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இளைஞர் ரமேஷ் சில்வா என்பவரா?
அதன்படி, லக்கலவில் நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட இளைஞரின் தோற்றத்திற்கும் அதுவொரு நாடகம் என குறிப்பிடப்பட்டு பகிரப்பட்ட ரமேஷ் சில்வா என்பவரின் தோற்றத்திற்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. எனவே நாம் ரமேஷ் சில்வா என்ற நபரின் பேஸ்புக் கணக்கை ஆய்வு செய்தோம் இதன்போது, அவரது புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் பரவும் பதிவுகளுக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட முறைப்பாட்டு பத்திரத்தின் புகைப்படத்துடனான ஒரு பதிவை காணமுடிந்தது.
அந்த பதிவில் முறைப்பாட்டு பத்திரத்தின் நகல், மற்றும் சமூக ஊடகங்களில் அவர் தொடர்பில் பகிரப்பட்ட பதிவு மற்றும் உண்மையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரின் புகைப்படங்கள் என்பன பகிரப்பட்டிருந்தன.

அத்துடன், லக்கல மக்களைச் சந்திக்க பாராளுமன்ற உறுப்பினர் நாமல் சென்றபோது தானும் அங்கு இருந்ததாகக் கூறி ரமேஷ் சில்வா என்பவர் பேஸ்புக் நேரடி காணொளி மூலம் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தார். அந்த இடத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமலுக்கு எதிர்ப்புத் தெரிவித்த நபர் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்றும் அவர் கூறியுள்ளார்.

ரமேஷ் சில்வா மற்றும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட NPP கட்சியின் ஆதரவாளர் இருவரும் ஒரே காட்சியில் இருக்கும் காணொளி பின்வருமாறு
அதேபோன்று, மற்றொரு சமூக ஊடக பயனர் பேஸ்புக்கில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார், அதில் அந்த இளைஞரும் ரமேஷ் சில்வாவும் நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதம் செய்வதைக் காணமுடிகின்றது. இதன் மூலம் லக்கலவில் நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதம் செய்த இளைஞர் ரமேஷ் சில்வா அல்ல என்பது தெளிவாகிறது.
நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நபர் நீலப்படையணியைச் சேர்ந்தவரா?
லக்கலவில் நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் 2015 ஆம் ஆண்டு நீலப் படையைச் சேர்ந்த இளைஞர் என்று கூறி வெளியிடப்பட்ட பதிவுகளின் உண்மைத்தன்மையை ஆராய நாம் நடவடிக்கை எடுத்தோம்.
இதன்போது சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞரின் புகைப்படத்தைப் பயன்படுத்தி சமூக ஊடக தளங்களில் வெளியிடப்பட்ட கருத்துகளில், குறித்த இளைஞர் விமுக்தி சேனநாயக்க என்பதுடன் அவர் 2019 இல் இறந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. அவரது நண்பர் ஒருவர் இது குறித்து ஒரு பதிவை வெளியிட்டிருந்தார்.
தொடர்புடைய சமூக ஊடகப் பதிவுகளுக்குப் பயன்படுத்திய இளைஞர் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வாகன விபத்தில் இறந்துவிட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதன்படி, விமுக்தி சேனநாயக்கவின் பேஸ்புக் கணக்கை நாம் ஆராய்ந்த போது, அவரது கணக்கு 2018 முதல் புதுப்பிக்கப்படவில்லை என்பதுவும், அது Memorialized Account ஆக மாற்றப்பட்டுள்ளது என்பதுவும் தெளிவாகியது. இருப்பினும், அவரது கணக்கைச் சரிபார்த்தபோது, அவர் இலங்கை பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர் என்பதனையும் அறியமுடிந்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ
மேற்குறிப்பட்ட விடயம் தொடரபில் பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவிடம் நாம் வினவினோம். இதன்போது சமூக ஊடகங்களில் பரவி வரும் பதிவுகள் தவறானவை என்றும், இரண்டு இளைஞர்களுக்கும் லக்கல சம்பவத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.
மேலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு பதிவில் காணப்படும் விமுக்தி சேனநாயக்க என்பவர், 2018 இல் இறந்துவிட்டதாகவும் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
தேசிய மக்கள் சக்தியின் ஊடகப் பிரிவு
மேலும் கடந்த 17 ஆம் திகதி லக்கலையில் இடம்பெற்ற சம்பவம் குறித்து தேசிய மக்கள் சக்தியிடமும் நாம் வினவினோம். இதன்போது நாமல் ராஜபக்ஷவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என்றும் அவரது பெயர் சிசிர குமார என்றும் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்திப்பதற்காக லக்கல பிரதேசத்திற்கு சென்றபோது அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் மற்றும் அது ஒரு நாடகம் என தெரிவித்து பகிரப்பட்ட பதிவுகள் தவறானவை என்பதுடன், கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தின் போது நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் தேசிய மக்கள் சக்தியின் ஆதரவாளர் என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:நாமல் ராஜபக்ஷவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளைஞர் அவரின் ஆதரவாளரா?
Fact Check By: Suji shabeedharanResult: False


