பொலிஸ் வெளியிட்ட 22 விடயங்கள்;   உண்மை என்ன ?

Misleading இலங்கை

INTRO :
பொலிஸால் வெளியிடப்பட்ட 22 விடயங்கள் என ஒரு பதிவானது சமூக வலைத்தளங்கள் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook Link | Archived Link

சமூகவலைத்தளங்களில் ” *_அனைவரும் படிக்க வேண்டிய மிக முக்கியமான விடயம்  காவல்துறை செய்தி.._*

முடிந்த வரை அதிகமாக பகிர்ந்து கொள்ள கேட்டு கொள்கிறேன்

கவனமாக இருங்கள்..⚠ பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் சூழ்நிலையில் நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

போக்குவரத்துச் சட்டங்களை அமல்படுத்துவதில் நாம் பொறுப்புள்ள குடிமக்களாக இருக்க வேண்டும் மற்றும் நம்மையும் நமது உடமைகளையும் பாதுகாப்பதில் முனைப்புடன் இருக்க வேண்டும்.

நகரங்களிலோ அல்லது கிராமங்களிலோ, இந்த நாட்களில் பலர் அதிகம் சம்பாதிப்பதில்லை, அதனால் வேலை இழப்புகள் / வணிக பாதிப்புகள் உங்களுக்கு திடீர் நிகழ்வாக இருக்கலாம்.

1. வீட்டில் உள்ளவர்கள், குழந்தைகள், பெண்கள் / சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரிகள், பணிபுரியும் பெண்கள் / ஆண்கள் உட்பட அனைவரும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

2. விலை உயர்ந்த கடிகாரங்களை அணிய வேண்டாம்.

3. விலை உயர்ந்த நெக்லஸ்கள், வளையல்கள், காதணிகள் மற்றும் உங்கள் கைப்பைகளை அணியாமல் கவனமாக இருங்கள்.

4. ஆண்கள் விலையுயர்ந்த கடிகாரங்கள், விலையுயர்ந்த வளையல்கள் மற்றும் செயின்கள் அணிவதைத் தவிர்க்க வேண்டும்.

5. உங்கள் மதிப்புமிக்க மொபைல் போனை பொது இடங்களில் பயன்படுத்தாதீர்கள்.

பொது இடங்களில் செல்போன் பயன்படுத்துவதை குறைக்க முயற்சிக்கவும்.

6. வாகனத்தில் அந்நியர்களை ஏற்றிச் செல்வதைத் தவிர்க்கவும்.

7. தேவையான அளவுக்கு அதிகமாக எடுத்துச் செல்ல வேண்டாம்.

8. நீங்கள் பயணம் செய்யும் போது உங்கள் ஏடிஎம் மற்றும் கிரெடிட் கார்டை பாதுகாப்பாக வைத்திருங்கள்.

9. உங்கள் பெரியவர்கள், மனைவி மற்றும் குழந்தைகள் பற்றி தெரிந்துகொள்ள அடிக்கடி வீட்டில் பேசுங்கள்.

10. வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் நபர்களுக்கு வீட்டு வாசலில் மணி அடிக்கும் போது பிரதான கதவிலிருந்து பாதுகாப்பான தூரத்தை வைத்துக்கொள்ளவும், முடிந்தால் பார்சல்கள் அல்லது கடிதங்களைப் பெற கிரில்லை அணுகுவதைத் தடுக்க கிரில் கேட்களைப் பூட்டவும்.

11. குழந்தைகளை சீக்கிரம் வீட்டிற்கு செல்ல அறிவுறுத்துங்கள்.

12. வீட்டிற்குச் செல்ல தனிமைப்படுத்தப்பட்ட சாலைகள் அல்லது குறுக்குவழிகளில் செல்ல வேண்டாம்.

முடிந்தவரை, லாபத்தை அதிகரிக்க, இந்த நான்கு கூறுகளையும் நீங்கள் தொடங்குவதற்கு இடத்தில் வைத்திருக்க வேண்டும்.

13. இளைஞர்களே, நீங்கள் வெளியே செல்லும்போது உங்கள் சுற்றுப்புறத்தை ஒரு கண் வைத்திருங்கள்.

14. எப்போதும் அவசர எண்ணை கையில் வைத்திருக்கவும்.

15. மக்களிடமிருந்து சிறிது பாதுகாப்பான தூரத்தை வைத்துக்கொள்ளுங்கள்.

16. * மக்கள் பெரும்பாலும் முகமூடிகளை அணிவார்கள் *.

அதனால் ஆட்களை எளிதில் அடையாளம் காண்பது கடினம்.

17. வண்டியைப் பயன்படுத்துபவர்கள் உங்கள் பெற்றோர், உடன்பிறந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் அல்லது பாதுகாவலர்களிடம் நீங்கள் இருக்கும் இடத்தைப் பற்றி சொல்லுங்கள்.

18. முடிந்தவரை பொதுப் போக்குவரத்து முறையைப் பயன்படுத்த முயற்சிக்கவும்.

19. முடிந்தவரை நெரிசலான பேருந்துகளைத் தவிர்க்கவும்.

20. உங்கள் தினசரி வழக்கத்தில் காலை 6.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை நேரத்தைப் பயன்படுத்தவும், முடிந்தவரை முக்கிய வழிகளைப் பயன்படுத்தவும்.

வெறிச்சோடிய தெருக்களில் தனியாக நடப்பதைத் தவிர்க்கவும்.

20. வணிக வளாகங்கள், கடற்கரைகள் மற்றும் பூங்காக்களில் அதிக நேரம் செலவிட வேண்டாம்.

21. குழந்தைகள் பயிற்சி வகுப்புகளுக்குச் செல்ல வேண்டியிருந்தால், பெரியவர்கள் அவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுங்கள்.

22. உங்கள் வாகனத்தில் விலையுயர்ந்த பொருள்களுடன் எதையும் விட்டுவிடாதீர்கள்.

இது குறைந்தது 3 மாதங்கள் அல்லது நிலைமை மேம்படும் வரை பின்பற்றப்பட வேண்டும்.

நீங்கள் விரும்பும் அனைவருடனும் பகிரவும்.

உங்கள் பகுதியில் உள்ள அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் நமது நாட்டு மக்களின் நலனுக்காக அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்

Nikah in Srilankan “ என இம் மாதம் 16 ஆம் திகதி (16.03.2022) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து அதிகமானோர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.

இணையத்தில் பகிரப்பட்டு வருகின்ற குறித்த செய்தி தொடர்பில் நாம் ஊடகங்களில் தேடிய போது அவ்வாறான செய்திகள் எதும் வெளியாகியமைக்கான ஆதாரங்கள் கிடைக்கவில்லை.

இது தொடர்பாக நாம் உறுதி செய்துக்கொள்ள பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவவிடம் வினவினோம்.

அவ்வாறான எவ்விதமான ஊடக அறிக்கையும் வெளியிடவில்லை என எமக்கு தெரிவித்தார். மேலும் இது தொடர்பாக ஊடக அறிக்கையும் வெளியிட்டுள்ளதாக எமக்கு அறிவித்தார்.

எனவே நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், பொலிஸால் வெளியிடப்பட்ட 22 விடயங்கள் அடங்கிய தகவல் என பகிரப்படும் தகவலானது பொலிஸினால் வெளியிடப்படவில்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel

Conclusion: முடிவு

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பொலிஸ் வெளியிட்ட 22 விடயங்கள்; உண்மை என்ன ?

Fact Check By: S G Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published.