
INTRO :
ஈரான் யுத்ததால் குவைத் நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்க வீரர்கள் எனவும், 560 இராணுவ வீரர்கள் பலி எனவும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “குவைத்தை விட்டு வெளியேறும் மெரிக்க படைகள்.“என இம் மாதம் 10 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (10.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

சமூகவலைத்தளங்களில் “ #அதிரடி: 560 #அமெரிக்க #வீரர்கள் #காலி? #ஈரான் #ஏவுகணை #மழையில் #சுடுகாடான #அமெரிக்கத் #தளங்கள்! #ரஷ்யா #அதிரடித் #தகவல்!
மாஸ்கோ / தெஹ்ரான்:
“அமெரிக்காவின் ஆணவம் அடக்கப்பட்டது!”
மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க இராணுவத் தளங்கள் மீது ஈரான் நடத்திய சரமாரி ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களில், சுமார் 560 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டோ அல்லது படுகாயமடைந்தோ இருக்கலாம் என்று ரஷ்யா தற்போது உறுதிப்படுத்தியுள்ளது.
ஈரான் புரட்சிகர இராணுவம் (IRGC) நடத்திய இந்த “மரண அடி” குறித்த விவரங்கள் இதோ:
போர் நிலவரம் – முக்கிய தகவல்கள்:
பதறிப்போன பென்டகன்: கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் மற்றும் ஈராக் ஆகிய நாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்களை குறிவைத்து ஈரான் இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
மரண எண்ணிக்கை: தாக்குதலில் பலியான மற்றும் காயமடைந்த வீரர்களின் எண்ணிக்கை 560-ஐத் தாண்டியுள்ளதாக ரஷ்யப் பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தரைமட்டமான தளங்கள்: * பஹ்ரைன்: அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தளம் (5th Fleet) மீது ட்ரோன்கள் மோதி பெரும் சேதம்.
கத்தார்: அல்-உதித் (Al-Udeid) விமானத் தளத்தில் ஏவுகணைகள் பாய்ந்து தீப்பிழம்பாக மாறியது.
ஈராக் & அமீரகம்: அமெரிக்கப் படைகள் தங்கியிருந்த குடியிருப்புகள் மீது குறிவைத்துத் தாக்குதல்.
ரஷ்யாவின் உறுதி: அமெரிக்கா இந்த இழப்புகளை மறைக்க முயன்றாலும், செயற்கைக்கோள் ஆதாரங்களுடன் ரஷ்யா இந்த தகவலை வெளியிட்டு உலகையே உலுக்கியுள்ளது.
அமெரிக்காவுக்கு விழுந்த பலத்த அடி!
”எங்கள் தலைவரைத் தொட்டால், உங்கள் படைகளை அழிப்போம்” என்று ஈரான் விடுத்த எச்சரிக்கை இப்போது நிஜமாகியுள்ளது. ஈரான் ஏவிய ஆயிரக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், அமெரிக்காவின் வான் பாதுகாப்பு கவசங்களை (Air Defense Systems) ஓட்டை உடைசலாக்கிவிட்டு உள்ளே புகுந்துள்ளன.
”இது வெறும் தொடக்கம் தான்! அமெரிக்கா வெளியேறும் வரை ஓயமாட்டோம்!” – IRGC தளபதிகள் ஆக்ரோஷம்.
“என இம் மாதம் 02 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (02.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 20 ஆம் திகதி (2024.12.20) 197thinbde என்ற இன்ஸ்டெகிராம் பக்கத்தில் இணையத்தில் தற்போது வைரலாகின்ற காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

தமது விடுமுறைக்கான இராணுவ வீரர்கள் மற்றும் பயிற்சி வீரர்கள் செல்லுகின்றனர் என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது. ஆகவே எமது ஆய்வின் படி இணையத்தில் தற்போது குவைத்தை விட்டு வெளியேறும் அமெரிக்க படை வீரர்கள் என்று பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
ஈரான் யுத்தத்தில் இதுவரையில் (13.03.2026) அமெரிக்க இராணுவ வீரர்களில் 11 பேர் தான் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது. Aljazeera | cbsnews | independent
அமெரிக்கா மற்றும் ஈரான் யுத்தத்தின் போது இறந்த முதலாவது இராணுவ வீரருக்கு அமெரிக்காவில் இறுதி மரியாதை செலுத்தும் காணொளியும் எமக்கு கிடைக்கப்பெற்றது.
அதற்கமைய இரண்டாவது தகவலில் தெரிவித்துள்ளமைக்கு அமைய, 560 வீரர்கள் மரணம் என்று எந்த சர்வதேச ஊடகங்களும் செய்தி வெளியிட்டிருக்கவில்லை.
மேலும் குறித்த புகைப்படத்தினை நாம் ரிவஸ் இமேஜீனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, கடந்த 2004 ஆம் ஆண்டு ஈராக்கில் எடுத்த புகைப்படம் என விக்கிப்பீடியா இணையத்தில் பதிவேற்றம் செய்ப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது. அதற்கமைய குறித்த புகைப்படம் தற்போது இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் இல்லை என்பது உறுதியாகின்றது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் அமெரிக்க இராணுவ வீரர்கள் குவைத் நாட்டில் இருந்து வெளியேறுவதாக தெரிவிக்கப்பட்டு பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதோடு, 560 அமெரிக்க இராணுவ வீரர்கள் மரணம் என தெரிவித்து பகிரப்பட்ட புகைப்படம் மற்றும் தகவலும் தவறானவை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

