இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நாமல் என பரவும் தகவல் உண்மையா?

False சர்வதேசம் | International

Subscribe to our WhatsApp Channel


INTRO :

இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நாமல் என ஒரு காணொளி பதிவு சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட நாமல் ராஜபக்‌ஷ!

#NewsUpdate #NamalRajapaksha #MahindaRajapaksa #India #SLPolitics #Srilanka “என இம் மாதம் 26 ஆம் திகதி 2026 ஆம்ஆண்டு  (26.01.2026) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் திகதி, இந்தியாவின் மிக உயரிய சட்டமான இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. இது இந்தியாவை ஒரு இறையாண்மை கொண்ட ஜனநாயகக் குடியரசாக மாற்றிய வரலாற்றுச் சிறப்புமிக்க தருணமாகும். இதனை ஆண்டுத்தோறும் இந்தியக் குடியரசு தினமாக கொண்டாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் 77வது குடியரசு தின விழா கொண்டாட்டம்

இந்தியா தனது 77வது குடியரசு தினத்தை கடந்த 26 ஆம் திகதி டெல்லியில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஜனாதிபதி திரௌபதி முர்மு பங்குபற்றலுடன் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் மற்றும் ஐரோப்பிய கவுன்சில் தலைவர் ஆன்டனியோ கோஸ்டா ஆகியோர்  77வது குடியரசு தின கொண்டாட்டங்களில் தலைமை விருந்தினர்களாக கலந்து கொண்டனர். bbc.com | dinakaran.com

நாம் பிரதமர் மோடி கலந்துக்கொண்ட குடியரசு தின விழா நிகழ்வின், புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை அவதானித்த போது அதில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துக்கொண்டமைக்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

குறித்த நிகழ்வில் இலங்கை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்துக்கொண்டமைக்கான ஊடக அறிக்கைகள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் இந்திய ஊடகங்கள் மற்றும் இலங்கை ஊடகங்களும் இது தொடர்பாக எவ்விதமான செய்தி அறிக்கைகளும் வெளியாகி இருக்கவில்லை.

கே.ஐ.ஐ.ரி பல்கலைக்கழத்தில் நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல்

ஒடிசாவிலுள்ள கே.ஐ.ஐ.ரி பல்கலைக்கழத்தில் (KIIT University, Odisha) நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட நாமல் ராஜபக்சவுக்கு சிறப்பான கௌரவம் அளிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக நிர்வாகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட குறித்த நிகழ்வில் நூற்றுக் கணக்கான மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தன நிலையில், தேசியக் கொடி ஏற்றும் நிகழ்வில் கலந்து கொண்ட நாமல் ராஜபக்ச திறந்த வாகனத்தில் பொது மக்கள் பார்வைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.

கே.ஐ.ஐ.ரி பல்கலைக்கழத்தில் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, பல்கலைக்கழத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  இந்திய  குடியரசு தின விழாவில் பிரதம விருந்தினராக பங்கேற்றமை தொடர்பான பதிவுடன் புகைப்படத் தொகுப்பும் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ஷ அவரின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்திலும் இது தொடர்பான பதிவினை பதிவிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.

எமது இந்திய பிரவின் மூலம் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஒடிசாவிலுள்ள கே.ஐ.ஐ.ரி பல்கலைக்கழத்தில் (KIIT University, Odisha) நடைபெற்ற இந்திய குடியரசு தின நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டமை உறுதி செய்யப்பட்டது.

இலங்கையில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம்

இந்தியாவில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டாரா என்று உயர் ஸ்தானிகராலய செய்தித் தொடர்பாளரிடம் மேலும் விசாரித்தோம். பாராளுமன்ற உறுப்பினரான நாமல் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளவில்லை என்றும், அதற்கான எந்த அதிகாரப்பூர்வ அழைப்பையும் இந்திய அரசிடமிருந்து பெறவில்லை என்றும் அவர் கூறினார். மேலும், தனியார் பல்கலைக்கழகம் ஏற்பாடு செய்த குடியரசு தின விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கலந்து கொண்டதாக தெரிவித்தனர்.

மேலும் இணையத்தில் வைரலாகும் பதிவில் இந்திய சுகந்திர தினம் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்திய சுகந்திரத்தினம் ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதியே கொண்டாடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. Link 

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்துகொண்ட நாமல் ராஜபக்ஷ தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

xa
Avatar

Title:இந்தியாவின் சுதந்திர தின நிகழ்வுகளில் கௌரவ அதிதியாக கலந்து கொண்ட நாமல் என பரவும் தகவல் உண்மையா?

Fact Check By: S G Prabu  

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *