தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என பகிரப்படும் காணொளி தொடர்பான உண்மை என்ன?

Misleading சர்வதேசம் | International

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம் நேரடி முழு போராக மாறவில்லை என்றாலும், அதன் தாக்கம் மத்திய கிழக்கு நாடுகளில் பல வழிகளில் உணரப்படுகிறது.

அதனடிப்படையில் தற்போது, ஏவுகணை வீச்சிலிருந்து தப்பிக்க போராடும் இஸ்ரேலிய படை வீரர்கள் என தெரிவிக்கப்பட்டு ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றமையை காணமுடிந்தது.

எனவே அது தொடர்பில் உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் களத்தில் வெடித்த பீதி: குண்டுவெடிப்புகளுக்கு இடையே சிதறி ஓடும் இஸ்ரேலியப் படையினர் நேற்று (2026.03.01) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலரும் இந்த காணொளியை தற்போது இஸ்ரேல், ஈரான் இடையே நிலவும் போர் நிலைமைகளின் போது எடுக்கப்பட்டதாக தெரிவித்து பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் ஏதேனும் செய்திகள் சர்வதேச பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளனவா என நாம் ஆராய்ந்த போது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவிலலை என்பது உறுதியானது.

எனவே நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்தி ஆராய்ந்த போது,  கடந்த 2024 ஆம் ஆண்டு குறித்த காணொளியானது Ulusal Kanal என்ற துருக்கிய ஊடகமொன்றின் YouTube தளத்தில் குறித்த காணொளி   வெளியாகியிருந்தது.

மேலும் அந்த காணொளியை ஆராய்ந்த போது, அதில் ஹிஸ்புல்லா தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலிய வீரர்கள் கண்ணீருடன் ஓடிவிட்டனர்என தெரிவிக்கப்பட்டிருந்தமையை அவதானிக்க முடிந்தது.

அதேபோல் ஹிஸ்புல்லாஹ் வெற்றியாளர்! என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி 2024 ஆம் ஆண்டு  ஒக்டோபர் 22 ஆம் திகதி எக்ஸ் தளமொன்றில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

X | Archived Link

ஆகவே நாம் மேற்குறிப்பிட்ட காணொளி தொடர்பில் மேலும் ஆராய்ந்த போது, ஹிஸ்புல்லா போர் முனையில் தப்பிச் செல்லும் இஸ்ரேலிய வீரர்கள் அழும் காட்சிகள் ஒரு பிரபலமான தலைப்பாக மாறியுள்ளது என தெரிவிக்கப்பட்டு CNN தொலைக்காட்சியில் இந்த காணொளி தொடர்பில் நடத்தப்பட்ட நிகழ்ச்சி 2024 ஆம் ஆண்டு CNN தொலைக்காட்சியின் YouTube தளத்தில் வெளியாகியிருந்தமையை காணமுடிந்தது.

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம்

அமெரிக்கா – இஸ்ரேல் – ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையிலான பதற்றம் தற்போது மிகவும் அதிகரித்த நிலையில் உள்ளது. ஈரானின் அணு திட்டம், ஏவுகணை திறன் மேம்பாடு ஆகியவை இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்பு அச்சத்தை அதிகரித்துள்ளன. 

இதன் காரணமாக பொருளாதார தடைகள், மறைமுக மற்றும் நேரடி தாக்குதல்கள், சைபர் தாக்குதல்கள் போன்ற நடவடிக்கைகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன. சமீப காலங்களில் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்கள் பரிமாறப்பட்டதாக தகவல்கள் வெளியாகி, பிராந்தியத்தில் இராணுவ எச்சரிக்கை நிலை அதிகரித்துள்ளது. மேலும், உலகளாவிய எண்ணெய் விநியோகத்திற்கு முக்கியமான Strait of Hormuz பகுதியில் பதற்றம் உருவாகியதால், சர்வதேச சந்தைகளிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது. 

மொத்தத்தில், இந்த நிலைமை முழுமையான பிராந்திய போருக்கு மாறுமா என்ற கவலை உலக நாடுகளிடையே நிலவி வருகிறது; அதே நேரத்தில், அமைதியான தீர்வுக்கான தூதரக முயற்சிகளும் தொடர்கின்றன.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் குண்டுவெடிப்புகளுக்கு இடையே சிதறி ஓடும் இஸ்ரேலியப் படையினர் என பகிரப்படும் காணொளியானது தற்போதைய இஸ்ரேல் – அமெரிக்கா மற்றும் ஈரான் இடையில் நிலவும் போர் நிலைமைகளின் போது எடுக்கப்பட்ட காணொளி அல்ல என்பதுடன் அது 2024 ஆம் ஆண்டு ஹிஸ்புல்லா போர் முனையிலிருந்து இஸ்ரேலிய படை வீரர்கள் தப்பிச் செல்லும் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது. 

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:தப்பியோடும் இஸ்ரேலிய வீரர்கள் என பகிரப்படும் காணொளி தொடர்பான உண்மை என்ன?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *