இஸ்ரேலிய விமான நிலையத்தில் தாக்குதல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என பகிரப்படும் காணொளி உண்மையா ? 

Misleading சர்வதேசம் | International


INTRO :

இஸ்ரேலிய விமான நிலையத்தில் தாக்குதல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ இஸ்ரேலிய விமான நிலையத்தை குறிவைத்து ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய பயணிகள்  அலறி அடித்து கொண்டு வெளியேற்றப்பட்டனர்.🇱🇰 “என இம்  மாதம் 01  ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (01.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

ஈரான் – அமெரிக்க, இஸ்ரேல் மோதல் கடந்த 7 நாட்களாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இஸ்ரேலிய விமான நிலையத்தை குறிவைத்து ஈரானிய ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, இஸ்ரேலிய பயணிகள்  அலறி அடித்து கொண்டு ஓடுகின்ற காட்சி என ஒரு காணாளி இணையத்தில் வைரலாகி வருகின்றமை காணக்கிடைத்தது.

நாம் சர்வதேச  ஊடகங்களில் இது தொடர்பாக செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆய்வினை மேற்கொண்ட போது, அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே நாம் குறித்த காணொளியை புகைப்படமாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது இது கடந்த வருடம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் தீப்பிடித்த சம்பவத்தன் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

x.com link

இது தொடர்பா வெளியாகி இருந்த செய்தி அறிக்கைகளும் எமக்கு கிடைக்கப்பெற்றன.  Abcnews | virakesari | one india

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலிய விமான நிலையத்தில் தாக்குதல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என பகிரப்படும் காணொளி கடந்த வருடம் ஜுலை மாதம் 26 ஆம் திகதி டென்வர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து மியாமிக்கு புறப்படவிருந்த அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தின் டயர் தீப்பிடித்த சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளி என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:இஸ்ரேலிய விமான நிலையத்தில் தாக்குதல் பயணிகள் வெளியேற்றப்பட்டனர் என பகிரப்படும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *