தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டாரா?

Misleading


INTRO :

தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “தேர்தல் தோல்வி… கண்ணீருடன் சீமான் வெளியிட்ட உணர்ச்சி மிகுந்த வீடியோ..

seeman | seeman emotional video | election result reaction | viral political video |Seeman latest news | seeman crying | 2026

#seithikalanjiyam #tamilnadu #seeman #ntk #tnelections2026

“என இம் மாதம் 04 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (04.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இந்தியாவில் தமிழ் நாட்டு தேர்தல் முடிவுகள் கடந்த 4 ஆம் திகதி அறிவிக்கப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியினர் எவ்விதமான ஆசனங்களும் பெறவில்லை. இந்நிலையில் குறித்த கட்சியின் தலைவரான சீமான் கண்ணீர் மல்க பேசியதாக ஒரு காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றமையை காணக்கிடைத்தது. 

நாம் குறித்த காணொளியை அவதானித்த போது அதில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் என்று குறிப்பிட்டு காளியம்மாள் பற்றியும் சீமான் பேசியுள்ளார்.

ஆனால் காளியம்மாள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தவர் ஆவார்.

நாம் தமிழர் கட்சி கடந்த 2021 ஆம் எதிர்கொண்ட சட்டமன்ற தேர்தலின் போது காளியம்மாள் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பூம்புகார் தொகுதியில் போட்டியிட்டார். அதற்கான அறிவிப்பை நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் வெளியிட்ட காணொளி கிடைக்கப்பெற்றது.

இதன் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது எடுக்கப்பட்ட பழைய வீடியோ இது என்பது தெளிவாகிறது.

மேலும் இதனை உறுதி செய்ய நாம் மேற்கொண்ட ஆய்வின் போது, கடந்த 2021 ஆம் ஆண்டில், தற்போது இணையத்தில் வைரலாகின்ற குறித்த காணொளி உடன் செய்தி வெளியாகி இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

குறித்த காணொளி தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரான இடும்பாவனம் கார்த்திக் அவரின் உத்தியோகப்பூர்வ எக்ஸ் தளத்தில் குறித்த காணொளி போலியானது என பதிவிட்டுள்ளமையும் காணக்கிடைத்தது. 

X.com

இடும்பாவனம் கார்த்திக் அவர்களின் எக்ஸ் பதிவிற்கு அமைய தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் அவர்கள் எந்த ஊடக சந்திப்பினையும் மேற்கொண்டு இருக்கவில்லை. மேலும் தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் ஆர். பி. சௌத்ரி மறைவிற்கு இரங்கல்கள் தெரிவித்து ஊடகங்களில் உரையாடி இருந்த சீமான் அதில் தேர்தல் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டதாக பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டாரா?

Written By: S G Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *