
INTRO :
டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என சமூகவலைத்தளங்களில் ஒரு புகைப்படம் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “பிரேக்கிங் நியூஸ்: ட்ரம்ப்புக்கு ஈரானிலிருந்து வந்த சர்ப்ரைஸ் கிஃப்ட்! உலகமே ஷாக்!
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான பனிப்போர் உலகம் அறிந்ததே. குறிப்பாக டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் இது உச்சக்கட்டத்தை எட்டியது. ஆனால், சமீபத்தில் ஈரானிலிருந்து ட்ரம்ப்புக்கு ஒரு விசித்திரமான பரிசு வந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன, இது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பரிசு என்ன தெரியுமா?
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது புளோரிடா இல்லத்தில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தபோது, அவருக்கு ஈரானில் இருந்து ஒரு பெரிய பார்சல் வந்தது. ஆர்வத்துடன் அதைத் திறந்து பார்த்த ட்ரம்ப், உள்ளே இருந்ததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனார்!
அப்படியென்ன இருந்தது அந்த பார்சலில்?
வேறு ஒன்றும் இல்லை, ஈரானின் உலகப் புகழ்பெற்ற “பெர்ஷியன் தரைவிரிப்பு” (Persian Carpet) ஒன்று தான். ஆனால், இது சாதாரணமான தரைவிரிப்பு அல்ல. இதில் ஈரானியக் கலைஞர்களால் மிகவும் நுணுக்கமாக நெய்யப்பட்ட ஒரு ஓவியம் இருந்தது.
ஓவியத்தில் என்ன இருந்தது?
அந்தத் தரைவிரிப்பில், டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அயதுல்லா கொமேனியின் அருகில் அமர்ந்து, ஒன்றாக “பர்த்ரான்ட் ரஸ்ஸலின்” புத்தகத்தைப் படித்துக் கொண்டிருப்பது போல சித்தரிக்கப்பட்டிருந்தது! 😂📚
(பர்ட்ரான்ட் ரஸ்ஸல் ஒரு புகழ்பெற்ற தத்துவவாதி மற்றும் அமைதி ஆர்வலர் என்பது குறிப்பிடத்தக்கது).
ட்ரம்ப்பின் ரியாக்ஷன்:
இந்தப் பரிசைக் கண்ட ட்ரம்ப், முதலில் குழப்பமடைந்தார். பின்னர், தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தப் படத்தைப் பகிர்ந்து, “இதுவரை எனக்குக் கிடைத்த மிகவும் விசித்திரமான பரிசு! ஈரானியர்கள் என்னை மிகவும் மதிக்கிறார்கள் போலிருக்கிறது!” என்று நகைச்சுவையாகப் பதிவிட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் வைரல்:
இந்தப் பதிவு வெளியான சில நிமிடங்களிலேயே வைரலானது. 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இதைப் பார்த்துள்ளனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் கருத்து தெரிவித்துள்ளனர்.
”ஈரானியர்கள் ட்ரம்ப்பைத் தத்துவவாதியாக மாற்றிவிட்டார்கள்!” – ஒரு பயனர்.
”இதுதான் ‘அமைதி பேச்சுவார்த்தை’க்கான புதிய வழி!” – மற்றொரு பயனர்.
”ட்ரம்ப் அடுத்து ஒரு தத்துவ புத்தகத்தை எழுதுவார் என்று நினைக்கிறேன்!” – ஒரு ஆதரவாளர்.
ஈரான் அரசாங்கம் இந்தப் பரிசு குறித்து இன்னும் அதிகாரப்பூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை. ஆனால், இது ஒரு தத்துவார்த்தமான செய்தியை உள்ளடக்கியது என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
எது எப்படியோ, ட்ரம்ப் மற்றும் ஈரானின் இந்தப் புதிய ‘தத்துவ உறவு’ சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது! “என கடந்த மாதம் 29 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (29.04.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
அமெரிக்க ஜனாதிபதி டெனால்ட் ட்ரம்பிற்கு ஈரான் அவ்வாறான ஒரு பரிசினை அனுப்பியிருந்தால் அது சர்வதேச ஊடகங்களில் செய்தியாக வந்திருக்கும், எனவே குறித்த சம்பவம் தொடர்பாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளனவா என நாம் ஆய்வினை மேற்கொண்டபோது, அவ்வாறான செய்தி எதுவும் வெளியிட்டிருந்தமை காணக்கிடைக்கவில்லை.
குறித்த புகைப்படத்தினை நன்கு அவதானித்த போது அது Gemini AI மூலம் உருவாக்கப்பட்டமைக்கான அடையாளம் ( Gemini AI logo) காணப்பட்டது.

ஆகவே குறித்த புகைப்படத்தினை நாம் Gemini AI மூலம் ஆய்வுக்கு உட்படுத்திய போது இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக தெரிவித்தது.

இதனை மேலும் உறுதி செய்ய நாம் செயற்கை நுண்ணறிவை கண்டறியும் கருவியினை பயன்படுத்தி ஆய்வு செய்தோம். அத்தேடலில் இது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டமை கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் டிரம்புக்கு ஈரானில் இருந்து வந்த பரிசு என புகைப்படமானது செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளமை என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

