தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

Missing Context சர்வதேசம் | International

இந்தியாவின் தமிழ் நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கான முடிவுகள் வெளிவந்துவிட்ட நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வென்று முன்னிலை வகிக்கிறது. ஆனால் ஆட்சியமைப்பதற்கு தேவையான 118 என்ற பெரும்பான்மையை பெறாத காரணத்தினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பதவியேற்பதில் இழுபறி நிலை நிலவிவருகின்றது.


இந்நிலையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவித்து தகவல்கள் பகிரப்பட்டு வருவதனை காணமுடிந்தது.


எனவே அது தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link 

குறித்த பதிவில் தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி

நடை முறைக்கு வந்தது.

புதிய அரசு பொறுப்பேற்கும் வரை தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி என தெரவித்து ஆளுநர் மாளிகையில் இருந்து வெளியான ஊடக அறிக்கையொன்று கடந்த 07.05.2026 ஆம் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த தகவல் பலரினாலும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருப்பதனை அவதானிக்க முடிந்தது.

Instagram

Fact Check (உண்மை அறிவோம்)

தமிழகத்தில் சட்டப்பேரவை ஆட்சி முடிவுற்று ஜனாதிபதி ஆட்சி தொடங்கிவிட்டதாக தகவல்கள் பகிரப்படுகின்றன எனினும் அது தொடர்பான எந்த தகவல்களும் இந்திய ஊடகங்களிலோ அல்லது சர்வதேச ஊடகங்களிலோ செய்திகள் வெளியாகவில்லை என்பது எமது ஆய்வில் உறுதியானது.

எனினும் குறித்த தகவலுடன் பகிரப்படும் ஊடக அறிக்கை தொடர்பில் நாம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். அதன்போது தமிழகத்தில் கடந்த 2021-ம் ஆண்டு அமைக்கப்பட்ட 16ஆவது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை ஆளுநர் மாளிகை வெளியிட்டுள்ளதாக தெரிவித்து மேற்குறிப்பிட்ட அறிவிப்புடனான செய்திகள் இந்திய ஊடகங்களில் வெளியாகியிருந்தது.Link


அதேபோன்று ஆளுநர் மாளிகை இணையதளத்திலும் இந்த அறிக்கை வெளியிடப்பட்டிருந்தமையை காணமுடிந்தது.

ஆனால் குறித்த அறிவிப்பில் தமிழ்நாடு சட்டமன்றம் கலைப்பு தொடர்பான அறிவிப்பு மாத்திரமே வெளியாகியிருந்ததே தவிர அதில் அடுத்து, தமிழ்நாட்டில் ஜனாதிபதி ஆட்சி நிலவப்போவதாக எந்த அறிவிப்பும் விடுக்கப்பட்டிருக்கவில்லை.

மேலும் தமிழ்நாட்டில் தற்போது தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதிலும் கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சராக பதிவியேற்பதிலும் இழுபறி நிலை காணப்படுகின்றது உண்மைதான் எனினும், ஜனாதிபதி ஆட்சி அங்கு அமையப்போவது தொடர்பில் எந்த அறிவிப்புகளும் வெளியாகவில்லை.

மேலும் இந்திய அரசியலமைப்பின் படி ஒரு மாநிலத்தில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஒரு கட்சி இருக்கும் சந்தர்ப்பத்தில் அந்த மாநிலத்தின் ஆட்சி எவ்வாறு அமைய வேண்டும் மற்றும் ஜனாதிபதி ஆட்சிக்கான அறிவிப்புகள் வெளியாவது தொடர்பான நடைமுறை ஒழுங்குகள் காணப்படுகின்றன. ஆனால் அவை எதுவும் இடம்பெறாமல் சட்டமன்றம் கலைக்கப்பட்டவுடன் ஜனாதிபதி ஆட்சி தொடங்கிவிட்டதாக பகிரப்படும் தகவல்கள் தவறான புரிதலுடன் பகிரப்படுபவை என்பதனை அறியமுடிகின்றது.Link

அந்த வழிமுறைகள் எவ்வாறு இடம்பெறும் என்பதன் விளக்கம் பின்வருமாறு

தற்காலிக முதலமைச்சர் 

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் வழங்கியதும், ஆளுநர் அதனை ஏற்றுக்கொள்வார். இருப்பினும், நிர்வாகம் முடங்கக் கூடாது என்பதற்காக, “புதிய அரசு அமையும் வரை தற்காலிக முதலமைச்சராகத் தொடருங்கள்” என்று ஆளுநர் ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக்கொள்வார்.

  • அதிகாரம்: தற்காலிக முதலமைச்சருக்குப் புதிய கொள்கை முடிவுகளை எடுக்கவோ அல்லது முக்கிய அரசாணைகளை (Major Policy Decisions) வெளியிடவோ அதிகாரம் கிடையாது. அன்றாட நிர்வாகப் பணிகளை மட்டுமே கவனிக்க முடியும்.

ஆளுநரின் பங்கு 

தற்போது சட்டமன்றம் கலைக்கப்பட்டுள்ள சூழலில், மாநிலத்தின் மிக உயரிய அதிகாரம் கொண்ட நபராக ஆளுநர் (Governor) இருப்பார்.

  • புதிய அரசு அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வது ஆளுநரின் கடமையாகும்.
  • எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாதபோது, தனிப்பெரும் கட்சியான தவெக-வை (விஜய்) அழைத்து, ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு இருக்கிறதா என்று அவர் கேட்பார்.

நிர்வாகம் யார் கையில்? 

முதலமைச்சர் இல்லாத அல்லது தற்காலிகமாக இருக்கும் காலத்தில், மாநிலத்தின் ஒட்டுமொத்த நிர்வாக இயந்திரமும் தலைமைச் செயலாளர் (Chief Secretary) மற்றும் ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும். இவர்கள் ஆளுநரின் வழிகாட்டுதலின்படி மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு மற்றும் இதர பணிகளைக் கவனிப்பார்கள்.

குடியரசுத் தலைவர் ஆட்சி (President’s Rule – Article 356):

ஒருவேளை தமிழக வெற்றிக் கழகம் அல்லது திராவிட முன்னேற்றக் கழகம் ஆகிய எந்தக் கட்சியாலும் ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டால் அல்லது ஆளுநர் வழங்கும் காலக்கெடுவுக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கத் தவறினால்: Link

  • ஆளுநர் மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்புவார்.
  • அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமுல்படுத்தப்படும்.
  • இந்தச் சூழலில், ஆளுநர் நேரடியாக மாநிலத்தை நிர்வகிப்பார். அவருக்கு உதவியாக மத்திய அரசால் ‘ஆலோசகர்கள்’ (Advisors) நியமிக்கப்படுவார்கள்.

சட்டசபை கலைக்கப்பட்டால் என்ன நடக்கும்?

சட்டசபை கலைக்கப்பட்டுவிட்டதால், தற்போதுள்ள எம்.எல்.ஏ-க்களின் பதவிக்காலம் முடிவுக்கு வந்துவிடும். புதிய அரசு பதவியேற்று, புதிய எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்கும் வரை சபாநாயகர் (Speaker) மட்டுமே தனது பதவியில் நீடிப்பார் (புதிய சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்படும் வரை).

தற்போதைய நிலை 

தற்போது மு.க. ஸ்டாலின் அவர்கள் ஒரு தற்காலிக முதலமைச்சராக நிர்வாகத்தை மேலோட்டமாகக் கவனிப்பார். ஆனால், உண்மையான அதிகாரம் மற்றும் ஆட்சி அமைக்கும் முடிவுகள் ஆளுநர் மாளிகையில் எடுக்கப்படும். விஜய் அவர்கள் 118 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுக் கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்துப் பதவியேற்கும் வரை இந்த ‘இடைக்கால நிலை’ நீடிக்கும்.

விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்திருந்தாலும், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான 118 இடங்கள் இல்லாததால் தற்போது தமிழகத்தில் ஒரு “தொங்கு சட்டமன்ற” (Hung Parliament) சூழல் நிலவுகிறது.

ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கைகள்:

  1. ஆட்சிக்கான அழைப்பு: பொதுவாக, அதிக இடங்களைப் பெற்ற கட்சியின் தலைவரை (விஜய்) ஆளுநர் அழைத்து, ஆட்சி அமைக்கத் தேவையான ஆதரவு இருக்கிறதா என்று கேட்பார்.
  2. ஆதரவுக் கடிதம்: விஜய் அவர்கள் காங்கிரஸ் (5 இடங்கள்) அல்லது பிற சுயேச்சைகளின் ஆதரவுக் கடிதங்களைச் சமர்ப்பித்து 118 என்ற எண்ணிக்கையைக் காட்டினால், ஆளுநர் அவரை முதலமைச்சராகப் பதவியேற்க அழைப்பார்.
  3. பெரும்பான்மை நிரூபணம்: பதவியேற்ற பிறகு, சட்டசபையில் குறிப்பிட்ட நாட்களுக்குள் (பொதுவாக 15 நாட்கள்) வாக்கெடுப்பு நடத்தி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்.

குடியரசுத் தலைவர் ஆட்சி எப்போது வரும்?

கீழ்க்கண்ட சூழல்களில் மத்திய அரசு சட்டப்பிரிவு 356-ஐப் பயன்படுத்தி குடியரசுத் தலைவர் ஆட்சியை அமுல்படுத்தலாம்:

  • யாராலும் ஆட்சி அமைக்க முடியாவிட்டால்: தவெக அல்லது திமுக ஆகிய இரு தரப்புமே “எங்களால் ஆட்சி அமைக்க முடியாது” என ஆளுநரிடம் தெரிவித்துவிட்டால்.
  • பெரும்பான்மை தோல்வி: விஜய் அவர்கள் முதலமைச்சராகப் பதவியேற்று, சட்டசபையில் வாக்கெடுப்பின் போது 118 பெரும்பான்மையை பெறத் தவறினால்.
  • ஆளுநரின் அறிக்கை: எந்தக் கட்சியாலும் நிலையான ஆட்சியை வழங்க முடியாது என ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அறிக்கை சமர்ப்பித்தால்.

குடியரசுத் தலைவர் ஆட்சியின் போது நிர்வாகம்:

இந்தக் காலகட்டத்தில் தமிழகத்தில் மந்திரி சபை இருக்காது. ஆளுநர் தான் மாநிலத்தின் உண்மையான தலைவராகச் செயல்படுவார். அவருக்கு ஆலோசனை வழங்க மத்திய அரசால் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் (IAS) அதிகாரிகள் ‘ஆலோசகர்களாக’ நியமிக்கப்படுவார்கள். பொதுவாக இது 6 மாதங்கள் வரை நீடிக்கலாம், அதற்குள் மீண்டும் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய தற்போதைய நிலவரப்படி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் (தவெக) மிக முக்கியமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய கள நிலவரம் மற்றும் அவர்களுக்கு உள்ள ஆதரவு குறித்த விவரங்கள் இதோ:

தவெக-விற்கு ஆதரவு அளிக்கும் கட்சிகள்

தற்போதைய (மே 9, 2026) தகவல்களின்படி, தவெக ஆட்சி அமைப்பதற்குப் பல கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன:

  • காங்கிரஸ்: 5 இடங்களைக் கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி, தவெக-விற்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளது.
  • இடதுசாரிகள் (CPI & CPI-M): இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் (தலா 2 இடங்கள்) தவெக-விற்கு நிபந்தனையற்ற ஆதரவைத் தெரிவித்துள்ளன.
  • விசிக (VCK): திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (2 இடங்கள்) இதுவரை ஆதரவை முறைப்படி அறிவிக்கவில்லை

இதேவேளை தவெக தலைவர் விஜய் அவர்கள் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளார். ஆனால், எழுத்துப்பூர்வமான ஆதரவு கடிதங்கள் மற்றும் துல்லியமான எண்களை நிரூபிப்பதில் ஆளுநர் மிகக் கவனமாக இருப்பதால், இன்னும் அதிகாரப்பூர்வ அழைப்பு விடுக்கப்படவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின்  நிலை மிகவும் வலுவாக உள்ளது. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அவர்கள் பெரும்பான்மையை எட்டியுள்ளனர். அடுத்த சில மணி நேரங்களில் அல்லது நாட்களில் ஆளுநர் விஜய்யை ஆட்சி அமைக்க அழைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவ்வாறு அழைக்கப்பட்டால், தமிழகத்தின் முதல் திராவிடக் கட்சி அல்லாத முதலமைச்சராக (1967-க்குப் பிறகு) விஜய் பதவியேற்பார். 

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….


Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி தொடங்கிவிட்டதாக பகிரப்படும் தகவல் தவறானது என்பதுடன், அதுகுறித்து பகிரப்படும் ஊடக அறிவிப்பானது, 16ஆவது சட்டப்பேரவையை கலைத்து ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் உத்தரவிட்டமைக்கான அறிவிப்பு மாத்திரமே தவிர ஜனாதிபதி ஆட்சி நிலவப் போவதாக அதில் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்பதுடன் ஜனாதிபதி ஆட்சி தொடர்பில் இதுவரை எந்தவித அதிகாரபூர்வ அறிவிப்புகளும் வெளியாகவில்லை என்பதுவும் கண்டறியப்பட்டுள்ளது.


மேலும் தமிழ்நாட்டில் நடந்து முடிந்த தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக முன்னிலைப்பெற்றுள்ள தமிழகவெற்றிக் கழகம் 118 என்ற பெரும்பான்மையை இதுவரை நிருபிக்காமையினால் முதலமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் அவர்கள் பதவியேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: தமிழகத்தில் ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்துவிட்டதா?

Written By: Suji Shabeedhran

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *