
INTRO :
தித்வா’ புயல் காரணமாக நாட்டில் ஏற்பட்ட பாரிய அனர்த்தங்களில் சிக்கி, இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 465 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 366 பேர் காணாமற்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர்களைத் தேடும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இவ்வாறு கண்டெடுக்கப்படும் உடல்களின் புகைப்படங்களை பலரும் சமூக ஊடகங்களில் பகிரந்து வருகின்ற அதேவேளை, கீழ்காணும் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பெருமளவில் பகிரப்பட்டு வருவதனால் பலர் அதைப் பற்றி கவலை தெரிவித்திருப்பதுடன், சிலர் அந்த புகைப்படம் தொடர்பில் சந்தேகங்களை எழுப்பி வருகின்றனர்.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):



சமூகவலைத்தளங்களில்“ Ai மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படங்கள் “என இம் மாதம் 1 ஆம் திகதி 2025 ஆம்ஆண்டு (01.12.2025) பதிவேற்றம்செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர்பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
மேலும் இந்த புகைப்படம் உண்மையான புகைப்படம் அல்ல எனவும் இது செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டது எனவும் பலர் கமென்ட் செய்திருந்தமையையும் காணமுடிந்தது.

அதேபோன்று இந்த புகைப்படத்தின் உண்மையை கண்டறியுமாறு பலர் WhatsApp மூலம் எமக்கு கோரிக்கைகளையும் முன்வைத்திருந்தனர்.

Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த நாட்களில் நாட்டில் ஏற்பட்ட ‘தித்வா’ புயலால் ஏற்பட்ட கனமழை காரணமாக, ஆறுகள் நிரம்பி வழிவது, வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவுகள் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை மக்கள் சந்திக்க நேர்ந்தது.
கம்பளை பகுதியில் இந்த நிலைக்கு முகங்கொடுத்த சிலர் உயிரிழந்துள்ளனர் என்றும், அவர்களது உடல்கள் குவிந்துள்ளன என்று தெரிவித்து பகிரப்படும் புகைப்படம் இயற்கைக்ககு மாறாக காணப்படுகின்றன என சமூக ஊடக பயனர்கள் சந்தேகம் வெளியிட்டதால், இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படமா என்பதனை நாம் ஆராய்ந்தோம்
இதன்போது இந்த புகைப்படம் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதல்ல என்பது AI Detective Tool மூலம் உறுதியானது.


இது தொடர்பில் நாம் தொடர்ந்து மேற்கொண்ட ஆய்வில் இதே சம்பவத்துடன் சேர்ந்த இன்னொரு புகைப்படமும் TikTok மூலம் பகிரப்பட்டிருந்தது என்பதையும் கண்டறிந்தோம்.
மேலே அதிகளவில் பகிரப்பட்ட முதல் புகைப்படத்தின் பின்னணியில் உள்ள நபர்களை, இரண்டாவது புகைப்படத்திலும் தெளிவாகத் காணமுடிகின்றது.
அதேபோல், சிவப்பு மற்றும் நீல நிறக் சட்டை அணிந்த நபர், கம்பளை Keells விற்பனை நிலையத்திற்கு பின்புறத்தில் உள்ள வீடுகள் நீரில் மூழ்கியிருக்கின்றன என்பது தொடர்பாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவிலும் இடம்பெற்றுள்ளார் என்பதனையும் அறியமுடிந்தது.Link

இதுகுறித்து சமூக ஊடகத்தில் தமிழில் பதிவொன்று வெளியிடப்பட்டிருந்தது. அதன் மூலம், மேலே குறிப்பிடப்பட்ட சம்பவத்தில் இருந்த ஒருவரை நாங்கள் தொலைபேசி மூலம் தொடர்புகொள்ள முடிந்தது.
சம்பவத்தை நேரில் கண்டவர்கள்
இது செயற்கை நுண்ணறிவு அல்லது வேறுவிதமாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் அல்ல என்றும், கம்பளையில் உள்ள கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்குப் பின்னால் உள்ள வீட்டுத் திட்டத்தில் ஏற்பட்ட வெள்ளத்தில் ஒரு வீட்டில் சிக்கிய ஒரே குடும்ப உறுப்பினர்களின் உடல்கள் என்றும் ஷிராஸ் ஹாசன் கூறினார்.
ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் வீடான குறித்த வீடு ஒரு சாய்வில் அமைந்துள்ளது, வெள்ள நேரத்தில், இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களுக்கு பக்கத்தில் அமைந்திருந்த மூன்று மாடி வீட்டில் இருந்து வீட்டிற்கு வருமாறு தெரிவிக்கப்பட்டது, ஆனால் அவர்கள் வரவில்லை.
வெள்ளம் வடிந்த பிறகு அவர்கள் வீட்டைச் பார்க்க சென்ற போது , ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி உட்பட குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் இறந்து கிடந்ததைக் கண்டறிந்தனர், அந்த நேரத்தில் ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் உடல் கிடைக்கவில்லை. வீட்டில் வளர்க்கப்பட்ட நாயும் இறந்து கிடந்தது, வீட்டிலிருந்து உடல்கள் வெளியே எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது, மேலும் இது செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்று பலர் தவறாக வழிநடத்தப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.
மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் ஃபைரூஸ் முகமதுவை நாங்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். தனது பக்கத்து வீட்டாரான ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரி வெள்ளத்தில் தனது குடும்ப உறுப்பினர்களை இழந்ததாகவும், வெள்ளத்தில் மூழ்கிய வீட்டிலிருந்து உடலங்களை வெளியே எடுத்து வைக்கப்பட்ட புகைப்படத்தை யாரோ சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகவும் அவர் கூறினார்.
கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
இதை மேலும் உறுதிப்படுத்த கம்பளை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியைத் தொடர்பு கொண்டோம், கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்குப் பின்னால் உள்ள வீடுகளின் வரிசையில் வசித்து வந்த ஓய்வுபெற்ற பொலிஸ் அதிகாரியின் குடும்ப உறுப்பினர்கள் இவ்வாறு இறந்துவிட்டதாகவும், பொலிஸ் அதிகாரியும் குடும்ப உறுப்பினர்களும் கடந்த 1 ஆம் திகதி அடக்கம் செய்யப்பட்டதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.
அதேபோன்று மேற்குறிப்பிட்ட சம்பவம் மற்றும் அந்தனுடன் தொடர்புடைய காணொளி மற்றும் புகைப்படங்களை சர்வதேச செய்திச்சேவைகளும் அறிக்கையிட்டிருந்தமையையும் காணமுடிந்தது.
கம்பளையில் ஏற்பட்ட நிலச்சரிவுக்குப் பிறகு உடல்கள் குவிந்திருப்பதைக் காட்டும் சமூக ஊடகங்களில் பரவும் படம் தவறானது என்பதை எங்கள் விசாரணை காட்டுகிறது, இது செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டதாக சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர். ஆனால் இது கம்பளையில் உள்ள கீல்ஸ் சூப்பர் மார்க்கெட்டுக்குப் பின்னால் உள்ள வீடுகளின் வரிசையை அடித்துச் சென்ற வெள்ளம் காரணமாக ஒரு வீட்டில் சிக்கி இறந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்களின் உடலங்களே இவையாகும்.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:கம்பளையில் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை காட்டும் புகைப்படம் AI மூலம் உருவாக்கப்பட்டதல்ல!
Fact Check By: S.G.PrabuResult: Misleading


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

