
INTRO :
நாட்டில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு என தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.
எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):

சமூகவலைத்தளங்களில் “ இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை உயர்வு!
மக்களுக்கு மேலும் சுமையாக எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
ஒக்டேன் 92 பெட்ரோல் – ரூ.434 (+24)
ஆட்டோ டீசல் – ரூ.407 (+15)
சூப்பர் டீசல் – ரூ.478 (+20)
மண்ணெண்ணெய் – ரூ.285 (+20)
தொடர்ச்சியான விலை உயர்வுகள் போக்குவரத்து, அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பொதுமக்களின் வாழ்வாதார செலவுகளில் மேலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என அச்சம் நிலவுகிறது.
#Mullaitivu #srilanka #everone #highlight #everyonehighlights #mullainet #highlightseveryone
#FuelPrice #PetrolPrice #DieselPrice #SriLanka #FuelIncrease #BreakingNews #இலங்கை #எரிபொருள்_விலை #பெட்ரோல் #டீசல் #மண்ணெண்ணெய் #TamilNews #MSMVIEWS ” என இம் மாதம் 17 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (17.06.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
கடந்த புதன்கிழமை (17.06.2026) அன்று எரிபொருள் விலை திருத்தம் ஏதேனும் மேற்கொள்ளப்பட்டிருந்தால், அது குறித்து பிரதான ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்க வேண்டும்.
ஆகவே நாம் அவ்வாறு எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டமை தொடர்பில் பிரதான ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளனவா என ஆராய்ந்த போது, அவ்வாறான எந்தவொரு செய்தியும் பிரதான ஊடகங்களில் வெளியாகியிருக்கவில்லை.
எரிபொருள் விலைச் சூத்திரத்திற்கமைய மாதாந்தம் எரிபொருள் விலையில் மாற்றங்கள் ஏற்படுவது வழக்கமானதாகும். அதற்கமைய கடந்த மாதம் 31 ஆம் திகதி (31.05.2026) அன்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் எரிபொருள் விலையினை அதிகரித்தது.
புதிய விலைத் திருத்தத்திற்கமைய ஒக்டென் 95 ரக பெற்றோல் விலை 25 ரூபாவினாலும், ஒக்டேன் 92 ரக பெற்றோல், விலை 24 ரூபாவினாலும், ஒட்டோ டீசலின் விலை 15 ரூபாவினாலும்,சுபர் டீசலின் விலை 20 ரூபாவினாலும், மண்ணெண்ணை விலை 20 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய புதிய விலைகள் பின்வருமாறு
| எரிபொருள் வகை | தற்போதையவிலை | புதிய விலை | அதிகரிப்பட்ட விலை |
| பெற்றோல் ஒன்டேன் 92 | 410.00 | 434.00 | +24.00 |
| பெற்றோல் ஒன்டேன் 95 | 470.00 | 495.00 | +25.00 |
| லங்கா டீசல் | 392.00 | 407.00 | +15.00 |
| லங்கா சுப்பர் டீசல் | 458.00 | 478.00 | +20.00 |
| மண்ணெண்ணெய் | 265.00 | 285.00 | +20.00 |
மேலும் இது குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட ஊடக அறிக்கை பின்வருமாறு

2026 மே மாதம் 31 ஆம் திகதி நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வந்த எரிபொருள் விலைகள் இன்னமும் மாற்றமின்றி தொடர்வதை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தை நாம் ஆய்வு செய்த போது தெளிவாகக் காண முடிகின்றது.

மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு
எரிபொருள் விலை மீண்டும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வரும் பதிவு குறித்து, நாம் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சரின் ஊடகச் செயலாளரை தொலைபேசி மூலம் தொடர்புக்கொண்டு வினவினோம்.
இதன்போது, சமூக ஊடகங்களில் பகிரப்படும் குறித்த பதிவு முற்றிலும் தவறானது எனவும், அவ்வாறான எந்தவொரு விலை திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், எதிர்வரும் நாட்களில் இத்தகைய விலை அதிகரிப்புக்கள் நிகழுமா என நாம் வினவியபோது, இப்போதைக்குத் அது குறித்து தெளிவாகக் கூற முடியாது எனவும், எவ்வாறாயினும் நேற்று முன்தினம் (17.06.2026) அவ்வாறான எந்தவொரு திருத்தமும் மேற்கொள்ளப்படவில்லை என தெரிவித்தார்.
உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி
அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டதையடுத்து சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. hindustantimes
- ஹோர்முஸ் நீரிணை மீண்டும் திறப்பு
அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளதை அடுத்து, உலகளாவிய எரிசக்தி விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணையின் மீதான கடற்படை முற்றுகையை உடனடியாக அகற்றுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் மூலம் எரிபொருள் விலை மீண்டும் உயர்வு என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

