
INTRO :
இலங்கையில் கொரோனா மரணம் என ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்ட வேளையில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் குறித்த தகவல் போலியானது என கண்டறிந்துள்ளது.
தகவலின் விவரம் (What is the claim):

One Leicester என்ற பேஸ்புக் கணக்கில் “ இலங்கையில் வேகமாக பரவி வரும் கோவிட் தொற்று முஸ்லிம்கள் அவதானமாக செயற்பட்டு
தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய தருணம்!
இந்த சில புகைப்படங்கள் இணையத்தில் உலாவந்துக்கொண்டிருக்கிறது, இலங்கையில் இது வரை காலமும் இல்லாத அளவுக்கு நிலைமை மோசமாக முன்னேரத்தொடங்கிவிட்டன, சமீபத்திய கோவிட் தொற்று பரவுதல் சம்பந்தப்பட்ட தரவீடுகள் இனைக்கப்பட்டுள்ளன, முஸ்லிம்கள் இந்த வேலையில் பாதுகாப்பு விதிமுறைகளை பேணி அவதானமாக நடந்து வீண்பழிகளை தவித்து தங்களையும் பாதுகாத்துகொள்ள வேண்டிய தருணம் இது.
விளிப்புடன், பொறுப்புடன், பாதுகாப்பாக இருப்போம், எல்லாம் வள்ள இறைவன் நம் சமூகத்தையும் ஒட்டு மொத்த மனிதகுலத்தை இந்த கொடிய வரைஸ் தாக்கத்திளிருந்து பாதுகாப்பானாக🤲🏼🇱🇰
Covid-19 spreads rapidly in Sri Lanka, everyone must act safely to protect themselves and the other from this deadly disease! Stay safe ❣️
#StaysafeSriLanka
#covid19SriLanka “ என இம் மாதம் 05 ஆம் திகதி (05.08.2021) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது போன்று மேலும் பலர் பகிர்ந்துள்ளமை காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறியும் நிமித்தமாக எமது குழுவினர் ஆய்வினை மேற்கொண்டோம்.
கடந்த வாரம் முதல் மீண்டும் இலங்கையில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் இதுபோன்ற மரணங்கள் பதிவாகியதாக ஊடகங்கள் எதிலும் எம்மால் காணக்கிடைக்கவில்லை.
எனவே நாம் முதலில் இலங்கை சுகாதார அமைச்சினை தொடர்புகொண்டு இப்புகைப்படம் தொடர்பில் விசாரித்த வேளையில், இலங்கையில் இதுவரை காலத்தில் இவ்வாறு கொரோனாவால் மரணித்த சடலங்கள் வைத்ததில்லை என்றும் குறித்த புகைப்படங்கள் இலங்கையினை சேர்ந்தவை அல்ல என தெரிவித்தார்.
மேலும் இலங்கையில் கொரோனாவினால் மரணிப்பவர்களின் உடல்கள் சரியான பரிந்துரைக்கு அமைவாக உடனடியாக எரிக்கப்படுதல் அல்லது புதைக்கப்படும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என தெரிவித்தார்.
ஆகவே குறித்த புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்த போது, இந்த புகைப்படம் இலங்கையில் நடந்த சம்பவமல்ல என்று கண்டறியப்பட்டது. மேலும் இது மியான்மரில் இடம்பெற்ற சம்பவம் என்பதை அந்நாட்டு ஊடக அறிக்கைகள் மூலம் உறுதி செய்யப்பட்டது.
மியான்மர் அதிகாரப்பூர்வ ஊடகமான Khit Thit Media , குறித்த புகைப்படங்களுடன் ஒரு பேஸ்புக் பதிவு எமக்கு காணக்கிடைத்தது. மியான்மர் மொழி வெளியிடப்பட்டிருந்த அறிக்கையின்படி, ஜூலை 15 ஆம் திகதி 22 பேர் கொரோனாவினால் மரணித்துள்ளதாகவும், மியாவாடியில் (Myawaddy) உள்ள வைத்தியசாலை பிணவறையில் இந்த புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளமையும் கண்டறியப்பட்டது. இந்த தகவலை Factcrescendo மியான்மர் குழு மூலம் உறுதிப்படுத்தினோம்.
நாம் மேற்கொண்ட தேடல் முடிவில், கொரோனா மரணம் என இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் மியன்மாரில் எடுக்கப்பட்டவை என உறுதிசெய்யப்பட்டுள்ளது.
எமது சிங்களப்பிரிவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கையினை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்
எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel
Conclusion: முடிவு
எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Title:கொரோனா மரணம் என இணையத்தில் பகிரப்படும் புகைப்படம் இலங்கையில் எடுத்ததா?
Fact Check By: Nelson ManiResult: Misleading