உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என ஒரு வீடியோ பதிவு பேஸ்புக்கில் பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

குறித்த தகவலின் உண்மைத் தன்மையினை கண்டறிவதற்கு நாம் தேடுதலில் ஈடுபட்டோம்.

தகவலின் விவரம்:

Facebook Link | Archived Link

Mohamed Rizwan என்ற பேஸ்புக் கணக்கில் ”BREAKING NEWS SRILANKA

உலகமே திரும்பி பார்க்கவைத்த கருணாவின் செய்தி...😂😂 ” என்று கடந்த மாதம் 22 ஆம் திகதி (22.06.2020) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த தகவலை உண்மை தன்மையினை கண்டறிவதற்கு Google Reverse Image Tool பயன்படுத்தி மேற்கொண்ட சோதனையின் போது, இது கஜகஸ்தான் நாட்டை சேர்ந்த செய்தி வாசிப்பாளரால் காமெடியாக வாசிக்கப்பட்ட செய்தி என காணப்பட்டது.

Google Link

பேஸ்புக்கில் பகிரப்பட்டிருந்த கருணா அம்மான் வீடியோவிலிருந்து ஒரு புகைப்படத்தினையும் கஜகஸ்தான் செய்தி வாசிப்பாளர் வீடியோவிலிருந்து ஒரு புகைப்படத்தினையும் வைத்து ஆய்வினை நாம் மேற்கொண்டோம்.

அதில் குறித்த செய்தியினை வாசிக்கும் செய்தி வாசிப்பாளர் அணிந்திருந்த ஆடை மற்றும் அவர் வைத்திருந்த மடிக்கணினியில் உள்ள இலட்சினை மற்றும் செய்தி வாசிப்பாளரின் பின்புறத்தில் இருக்கும் நபர்கள் அனைவரும் ஒத்துள்ளமை எமக்கு காணக்கிடைத்தது.

மேலும் குறித்த இரு வீடியோ பதிவிலுள்ள ஒலியும் ஒன்றுடன் ஒன்று பொருந்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

யுடியூப்பில் நாம் கஜகஸ்தான் செய்தி வாசிப்பாளர் வீடியோ தொடர்பாக தேடியபோது குறித்த வீடியோ பல வருடங்களாக பகிரப்பட்டு வருவது எமக்கு காணக்கிடைத்தது.

இதற்கமைய மேற்கண்ட ஃபேஸ்புக் தகவல் போலியானது என்று உறுதி செய்யப்படுகின்றது.

எமது வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Conclusion: முடிவு

உரிய ஆதாரங்களின் அடிப்படையில் உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி என்று பகிரப்படும் தகவல் போலியானது என்று நிரூபித்துள்ளோம்.

Avatar

Title:உலகத்தையே திரும்பி பார்க்க வைத்த கருணாவின் செய்தி?

Fact Check By: Nelson Mani

Result: False