பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

Misleading சர்வதேசம் | International

காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர்-ஏ-தொய்பா, ஹிஸ்புல் முஜாஹிதீன் என்ற பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ​​பல தசாப்தங்களாக நீடித்த இந்திய-பாகிஸ்தான் எல்லை மோதல் மேலும் தீவிரமடைந்தது.

அதற்கு பதிலளிக்கும் விதமாக  நேற்று (2025.05.07) பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. 

அந்தவகையில் குறித்த தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என தெரிவிக்கப்பட்ட பல்வேறு காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை எம்மால் காணமுடிந்தது.

எனவே இந்த காணொளிகள் தொடர்பான உண்மை அறியும் நோக்கில் ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

 தகவலின் விவரம் (What is the claim)

Facebook | Archived Link

“ஆபரேஷன் சிந்தூர்” – இந்தியா நடத்திய தாக்குதலில் 80க்கும் மேற்பட்ட மக்கள் உட்பட பயங்கரவாதிகள் பலி? என தெரிவிக்கப்பட்டு குறித்த காணொளி நேற்று (2025.05.07) பதிவேற்றப்பம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் பலர் இந்த காணொளியை சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை எம்மால் காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மேற்குறிப்பிட்ட காணொளியானது உண்மையில் நேற்றைய தினம் (2025.05.07) பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தினர் தாக்குதல் நடத்திய போது எடுக்கப்பட்ட காணொளியா, என்பது தொடர்பில் ஆராயும் நோக்கில் நாம் குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி Reverse Image தேடுதலுக்கு உட்படுத்தினோம்.

இதன்போது இந்த காணொளியானது 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் 02 ஆம் திகதி Hurriyat Radio English  என்ற  X தளத்தில் பதிவேற்றப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டது.

Archived Link

அத்துடன் இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துகிறது என தெரிவிக்கப்பட்டே இந்த காணொளியானது பகிரப்பட்டிருந்தது.

மேலும் 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 01 ஆம் திகதி இஸ்ரேலின் தற்போதைய நிலை என குறிப்பிட்டு X தளமொன்றில் இதே காணொளி பகிரப்பட்டிருந்தது.

கடந்த 2024 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக தெரிவித்து பகிரப்பட்ட காணொளிகைளை இங்க காண்க Link | Link 

அதேபோன்று கடந்த 2024 ஆம் ஆண்டு  New York Post இன் youtube தளத்திலும் குறித்த காணொளி வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் கடந்த 2024 ஆம் ஆண்டு இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தொடர்பில் குறித்த காணொளியின் புகைப்படத்துடன் வத்திக்கான் செய்தி இணையதளத்தில் வெளியாகியிருந்த செய்தியை காண்க Link 

மேலும் நேற்று (2025.05.07) இந்தியா நடத்திய தாக்குதல் எந்த பாகிஸ்தான் இராணுவ தளத்தையும் குறிவைத்து நடத்தப்படவில்லை என்றும் இந்திய அரசு அறிவித்துள்ளது.Link 

இந்த தாக்குதல் தொடர்பாக கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயமும் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது.

Operation Sindoor– பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் இந்திய இராணுவத்தினர் நேற்று (2025.05.07) தாக்குதல் நடத்தியிருந்தனர்.

கடந்த ஏப்ரல் 22 ஆம் திகதி இடம்பெற்ற பஹல்காம் தாக்குதலை அடுத்து, பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், ஒபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) என்ற பெயரில், காஷ்மீர் பகுதியில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை குறிவைத்து, இந்திய இராணுவம் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தாக்குதல் நடத்தியிருந்தது.

கோட்லி, பஹ்வால்பூர், முஸாஃபர்பாத் பகுதிகளில் தாக்குதல் நடத்தப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தான் இராணுவத் தளவாடங்களைக் குறிவைத்து, எந்தத் தாக்குதலும் நடத்தப்படவில்லை என்று இந்திய மத்திய பாதுகாப்புத் துறை தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

எங்களது சமூக வலைதள பக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  | TikTok

Conclusion (முடிவு)

எனவே எமது ஆய்வின் அடிப்படையில்,பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திள தாக்குதல் என தெரிவிக்கப்பட்டு பகிரப்படும் காணொளியானது, கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் முதலாம் திகதி இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணை தாக்குதலின் போது எடுக்கப்பட்ட காணொளி என்பது கண்டறியப்பட்டுளளது.

எனவே வாசகர்களே, இதுபோன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதி செய்யாமல் மற்றவர்களுக்குப் பகிர வேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்பு கொள்ளுங்கள்.

Avatar

Title:பாகிஸ்தான் மீது இந்தியா நடத்திய தாக்குதல் என பகிரப்படும் காணொளி உண்மையா?

Fact Check By: suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *