
நெஸ்லே குழந்தை பால்மா வகைகளில் விஷப்பொருட்கள் அடங்கியுள்ளதாக கூறப்பட்டதை தொடர்ந்து, 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் உலகளாவிய ரீதியில் நெஸ்லே குழந்தை பால்மா தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டன. அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே, டானோன் நிறுவனத்திற்கு உட்பட்ட மற்றொரு குழந்தை பால்மா தயாரிப்பான Aptamil தொடர்பாகவும் ஒரு செய்தி வெளியானது.
இதற்கிடையில், தற்போது Cow & Gate மற்றும் Nutrilon ஆகிய தயாரிப்புகளும் உலகளாவிய ரீதியில் மீளப்பெறப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்ட தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றன.
எனவே இது குறித்த உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):

குறித்த பதிவில் பெற்றோர்களே அவதானம் Danone நிறுவனத்தால் தயாரிக்கப்படும் cow & Gate, Nutrilon போன்ற தயாரிப்புகளை அந்நிறுவனம் மீண்டும் மீளப்பெற்றுள்ளது. இந்த தயாரிப்புகளில் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அடங்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும். எனவே நீங்களும் இது குறித்து விழிப்புடன் என தெரிவிக்கப்பட்டு நேற்று (2026.02.02) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
மேலும் இதனை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
Cow & Gate என்பது பிரித்தானிய குழந்தை பால் மா மற்றும் குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளுக்கான நிறுவனமாகும். இது தற்போது பிரான்ஸைத் தலைமையிடமாகக் கொண்ட பன்னாட்டு நிறுவனமான டேனோன் (Danone) நிறுவனத்திற்குச் கீழ் செயற்பட்டு வருகின்றது.
தற்போதைய நிலையில், Cow & Gate என்பது Aptamil மற்றும் Nutrilon போன்ற பிற குழந்தை ஊட்டச்சத்து தயாரிப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
Cow & Gate நிறுவனத்தின் அனைத்து குழந்தை பால் மா தயாரிப்புகளும் மீளப்பெறப்பட்டுள்ளதாக எந்தவொரு சர்வதேச ஊடக அறிக்கையோ அல்லது டேனோன் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்போ இதுவரை காணப்படவில்லை.
இருப்பினும், அயர்லாந்தில் தயாரிக்கப்பட்ட Aptamil குழந்தை பால் மாகளில் உணவு விஷமாவதற்கு காரணமாகும் ஒரு விஷப்பொருள், அதாவது செரியூலைடு (cereulide) கலந்த ARA எண்ணெய் (arachidonic acid) இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், அந்த எச்சரிக்கைகள் மற்றும் உறுதிப்படுத்தல்களைப் பொருட்படுத்தாமல் அயர்லாந்திலும் அந்த குழந்தை பால் மாகள் விற்பனை செய்யப்பட்டதாக அயர்லாந்து உணவு பாதுகாப்பு துறை (FSAI) தெரிவித்துள்ளதாக அயர்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, அந்த குழந்தை பால் மா தயாரிப்புகள் மீளப்பெறப்பட்டுள்ளன. இவ்வாறு மீளப்பெறப்பட்ட தயாரிப்பு, டேனோன் நிறுவனத்திற்குச் சொந்தமான Aptamil, பிறந்த நாளிலிருந்து வழங்கக்கூடிய குழந்தை பால் மா (800 கிராம் டின்) ஆகும்.
அந்த தயாரிப்பின் காலாவதி திகதி 2026-10-31 எனப் பட்டியலிடப்பட்டுள்ளது.
செரியூலைடு விஷம் தொடர்பான பிரச்சினை ஏற்பட்ட குறித்த குழந்தை பால் மா தொகுதி, 2025 ஆம் ஆண்டு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை விற்பனை செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

தங்களின் தயாரிப்புகள் பாதுகாப்பானவை என்றும், பொருந்தும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளுக்கும் முழுமையாக இணங்குகின்றன என்றும் டேனோன் (Danone) நிறுவனம் தெரிவித்துள்ளது.
சில உள்ளூர் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் தங்களது வழிகாட்டுதல்களை புதுப்பித்து வருவதாகவும், அந்தச் சூழலில், பொறுப்புள்ள உற்பத்தியாளராகவும் சமீபத்திய வழிகாட்டுதல்களுக்கு இணங்கவும் செயல்படுவதற்காக, உணவு பாதுகாப்பு தொடர்பான தற்போதைய நிலைமையை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட பாதுகாப்பு அறிவுறுத்தல்களில் ஏற்பட்ட மாற்றங்களின் அடிப்படையில், டேனோன் தனியார் நிறுவனம் குழந்தை பால் மாவின் ஒரு வரையறுக்கப்பட்ட தொகுதியைச் சேர்ந்த சில தயாரிப்புகளை சந்தைகளிலிருந்து பாதுகாப்பற்ற பொருட்களாக கருதி அகற்ற முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
இது முழுமையாக விநியோகிக்கப்பட்ட அனைத்து குழந்தை பால் மாவு தயாரிப்புகளையும் மீளப்பெறும் நடவடிக்கை அல்ல என்றும் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.Link
பன்னாட்டு உணவு உற்பத்தி நிறுவனமான குறித்த நிறுவனம், அயர்லாந்தின் Wexford மற்றும் Cork மாகாணத்தில் உள்ள Macroom ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள தொழிற்சாலைகளில், Aptamil, Nutrilon மற்றும் Cow & Gate என்ற வர்த்தகப் பெயர்களின் கீழ் குழந்தை பால் மாகளை உற்பத்தி செய்து வருகிறது.
குழந்தை பால் மாவு அயர்லாந்தில் உற்பத்தி செய்யப்பட்டிருந்தாலும், பாதிப்புக்குள்ளான அந்த குறிப்பிட்ட தொகுதி ஐக்கிய இராச்சிய சந்தைக்காக தயாரிக்கப்பட்டதாகும்.
மேலும், அந்த தொகுதி Boots.ie இணையதளம் வழியாக ஐக்கிய இராச்சியத்திலிருந்து அயர்லாந்து நுகர்வோருக்கு ஆன்லைன் கொள்முதல் மூலம் மறைமுகமாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக, அயர்லாந்து உணவு பாதுகாப்பு துறை (FSAI) வெளியிட்ட மீளப்பெறல் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
மீளப்பெறல் நடவடிக்கைக்கு உட்பட்ட தயாரிப்புகள், அயர்லாந்திலிருந்து ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பிற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அயர்லாந்து உணவு பாதுகாப்பு துறை (FSAI) தெரிவித்துள்ளது.
ஜேர்மனியில் Aptamil குழந்தை பால் மாவின் குறைந்தது மூன்று தொகுதிகள் மீளப்பெறப்பட்டுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட தொகுதி 2025 மே – ஜூலை மாதங்கள் இடையே விற்பனை செய்யப்பட்டதாகவும், அவற்றின் காலாவதி திகதி, தொகுதி எண் மற்றும் உற்பத்தி நேரம் பக்கற்றின் பின்பக்கத்தில் காணக்கூடியதாக உள்ளதாக, சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இருப்பினும், இந்த மீளப்பெறல் நடவடிக்கை அதிகாரிகள் கண்டறிந்த குறிப்பிட்ட தொகுதிகளுக்கே பொருந்துகிறது; இது உலகளாவிய ரீதியில் அனைத்து Aptamil தயாரிப்புகளுக்கும் பொருந்தாது.
ஐக்கிய இராச்சிய உணவு தர நிறுவனம் (FSA) வெளியிட்ட மீளப்பெறல் அறிவிப்பில், Aptamil First Infant Formula 800 கிராம் (batch exp 31-10-2026) என்ற பாதிக்கப்பட்ட தொகுதியை வாங்கிய நுகர்வோர் அதனை பயன்படுத்துவதைக் நிறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முழுமையான பணம் மீண்டும் பெற நுகர்வோர், பற்றுச்சீட்டு இருக்கிறதோ இல்லையோ, அதனை வாங்கிய கடைக்கு திருப்பி கொடுக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அது தொடர்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பு பின்வருமாறு


இலங்கை நுகர்வோர் அதிகாரசபை
சந்தையில் மேற்கூறிய பிரிவுகளின் கீழ் குழந்தைகளுக்கான பால் மா வாங்குவது தொடர்பாக ஏதேனும் முறைப்பாடுகள் வந்துள்ளதா அல்லது குழந்தைகள் அதனால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து இலங்கை நுகர்வோர் அதிகாரசபையிடம்வினவினோம். அத்தகைய முறைப்பாடுகள் எதுவும் வரவில்லை என்று அதிகாரசபையின் ஊடகப் பிரிவு தெரிவித்தது. மேலும் அந்த நிறுவனங்கள் மூலம் செய்யப்படும் திரும்பப் பெறுதல்களில் நுகர்வோர் அதிகாரசபை தலையிடுவதில்லை என்றும், அந்த தயாரிப்புகளை திரும்பப் பெறுவது அவர்களின் விற்பனை வலையமைப்பு மூலம் மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறப்பட்டது.
இலங்கையில் Cow & Gate தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளர்
இலங்கையில் Cow & Gate தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளரும் விநியோகஸ்தருமான Darley Butler & Co., Ltd நிறுவனத்திடம் நாம் இது தொடர்பில் வினவியபோது,
Cow & Gate தயாரிப்புகள் இந்தோனேசியாவிலிருந்து இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுவதாகவும், லேபிள் மாற்றம் காரணமாக, இலங்கையில் உற்பத்தி செயல்முறை கடந்த ஜூலை மாதத்துக்குப் பிறகு நிறுத்தப்பட்டு, புதிய உற்பத்தி செயல்முறை கடந்த செப்டம்பர் மாதத்தில் ஆரம்பிக்கப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
மீளப்பெற்ற தொகுதி இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்றும், அந்த மீளப்பெறல் நடவடிக்கை அயர்லாந்து மற்றும் ஐக்கிய இராச்சியம் நாடுகளில் மட்டுமே பின்பற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இருப்பினும், எங்கள் குழு இது தொடர்பாக மேலதிக உறுதிப்படுத்தலுக்காக Danone தனியார் நிறுவனத்திடம் மின்னஞ்சல் மூலம் விசாரணையை மேற்கொண்டது.அவர்களிடமிருந்து பதில் கிடைத்தவுடன், இந்த கட்டுரையை புதுப்பித்து அதனை வெளியிடுவோம் என எதிர்பார்க்கிறோம்.
Nestle, Aptamil மற்றும் Lactalis குழந்தை பால் மாகளை மீளப்பெற காரணமான செரியூலைடு (cereulide) விஷப்பொருள்
மீளப்பெறல் நடவடிக்கை டேனோன் தயாரிப்புகளோடு மட்டுமல்ல, பல குழந்தை பால் மா தயாரிப்புகளுக்கும் தொடர்புடையது.கடந்த ஜனவரி 6-ஆம் திகதி, ஐரோப்பிய நாடுகளில் Nestle குழந்தை பால் மாகள் மீளப்பெறலில் சேர்ந்திருந்தன. அதே சமயம், Lactalis குழந்தை பால் மாகள் மீளப்பெறப்பட்டதற்கும் காரணம், ARA எண்ணெய் என்ற மூலப்பொருளின் மாசுபாடு என தெரிவிக்கப்பட்டமையாகும். குழந்தை பால் மாகளில், பாலில் உள்ள முக்கிய வளர்ச்சி உறுதிசெய்யும் ஊட்டச்சத்து கூறுகளை வழங்குவதற்காக இந்த எண்ணெய் சேர்க்கப்படுகிறது.
இந்த வர்த்தக நாமங்களின் கீழ் தயாரிக்கப்படும் குழந்தை பால் மாவுகளுடன் சேர்க்கப்பட்ட ARA எண்ணெய், குழந்தை பால் மாகளின் முக்கிய மூலப்பொருளாகும். இந்த எண்ணெய் ஒரே ஒரு சீன விநியோகஸ்தரிடமிருந்து மாத்திரம் பெற்றதாகவும், அந்த எண்ணெயில் ஏற்பட்ட மாசுபாடு (contamination) FSA (Food Standards Agency) ஆய்வு மூலம் கண்டறியப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது.இதுபற்றி வெளியிடப்பட்ட அறிக்கைகள் Link | Link | Link
செரியூலைடு (Cereulide) என்பது Bacillus cereus என்ற பாக்டீரியாவின் சில உயிரியல் செயல்முறைகள் மூலம் உருவாகும் விஷப்பொருள் ஆகும். இதனால் உணவு விஷமாதல் (food poisoning) ஏற்படக்கூடும் என்று FSAI தெரிவித்துள்ளது.
Aptamil பிரச்சினை ஏற்பட்ட குறிப்பிட்ட தொகுதிகளைப் பயன்படுத்தியதால், குழந்தைகளுக்கு எந்தவொரு அழற்சி அல்லது நோய்நிலை ஏற்பட்டதாக இதுவரை எந்தவொரு முறைப்பாடுகளும் பதிவாகவில்லை.
இருப்பினும், செரியூலைடு (Cereulide) காரணமாக ஏற்படும் உணவுத் விஷமாதல் (food poisoning) அறிகுறிகளில் வாந்தி மற்றும் வயிற்று வயிற்று வலிஆகியவை அடிக்கடி நிகழக்கூடும். ஐக்கிய இராச்சிய உணவு தர நிறுவனம் (FSA) தெரிவிப்பதைப் போல், உணவு தயாரிக்கும் போது அல்லது கொதிக்கும் நீரை பயன்படுத்தும் போது கூட, குழந்தை பால் மாவில் உள்ள செரியூலைடு அழியாமல் இருக்கக்கூடும். பிரச்சினை ஏற்பட்ட குழந்தை பால் மா தயாரிப்புகள் கண்டுப்பிடிக்கப்பட்ட வேளையில் Nestle நிறுவனம், இதற்கான வழிகாட்டலுடன் கூடிய முழுமையான அறிவிப்பை வெளியிட்டிருந்தது.
ஒரே மாதிரியான நச்சுப் பொருள் இருக்கலாம் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, Nestle நிறுவனம் அதன் SMA குழந்தை பால் மாவின் சில தொகுதிகளை உலகளாவிய ரீதியில் மீளப்பெற்றது.
இது தொடர்பாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல்கள் பகிரப்பட்ட போது, இந்த விடயம் குறித்து நாம் மேற்கொண்ட உண்மை சரிபார்ப்பு ஆய்வறிக்கை பின்வருமாறு.
நெஸ்லே குழந்தை பால் மா மீளப்பெறப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளதா?
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page IInstagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எமது ஆய்வின் அடிப்படையில், ஐக்கிய இராச்சியத்தில் தயாரிக்கப்பட்ட Cow & Gate மற்றும் Nutrilon குழந்தை பால்மாகளின் அனைத்தும் மீளப்பெற்றுள்ளன என்று பரவிய தகவல்கள் தவறானவை என்பது கண்டறியப்பட்டது.
மேலும் பிரச்சினைக்குரிய Aptamil First Infant Formula 800 கிராம், 31-10-2026 காலாவதி திகதியைக் கொண்டுள்ளது மற்றும் 2025 மே மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கிடையில் இங்கிலாந்து, அயர்லாந்து மற்றும் ஜேர்மனி போன்ற பல ஐரோப்பிய நாடுகளில் விற்கப்பட்டது. எனினும், இந்த மீளப்பெறல் நடவடிக்கை கட்டுப்படுத்தப்பட்ட அந்த குறிப்பிட்ட தொகுதிக்கே பொருந்துகிறது என இங்கிலாந்து உணவு பாதுகாப்பு நிறுவனங்கள் (FSA) உறுதி செய்துள்ளது. இலங்கையில் Cow & Gate தயாரிப்புகளின் அதிகாரப்பூர்வ இறக்குமதியாளர் மற்றும் விநியோகஸ்தராக செயல்படும் Darley Butler & Co., Ltd நிறுவனம் மற்றும் இலங்கை நுகர்வோர் அதிகாரசபை என்பன பிரச்சினைக்குரிய இந்தத் தொகுதி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தின.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.
Title:Cow & Gate குழந்தை பால்மா உலகளாவிய ரீதியில் மீளப்பெறப்பட்டுள்ளதா?
Fact Check By: Suji shabeedharanResult: Misleading


