ஜனாதிபதி அதிசொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தாரா? 

Misleading சமூகம் | Society

ஜனாதிபதியின் யாழ் விஜயத்தின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் பல்வேறு தகவல்களுடன் பகிரப்படுகின்றன.

எனவே அது தொடர்பான உண்மையை கண்டறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களின் வடக்கு பயணத்திற்காக புதிய சொகுசு வாகனம் ஒன்று பயன்படுத்தப்பட்டதாகக் கூறி, சில புகைப்படங்களுடன் இந்த பதிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி பாதுகாப்பிற்கு நடுவில் வெள்ளை நிற சொகுசு வாகனத்தில் சென்று, ஒரு கோவிலின் அருகில் இறங்கும் விதமாகக் காட்டப்படும் இரண்டு புகைப்படங்களும், அதற்குரிய வாகனத்தின் பதிவு இலக்கத் தகவல்களும் இணைக்கப்பட்டு,இந்த பதிவு பகிரப்பட்டுள்ளது.

அதே கருத்தை முன்வைத்து, ஜனாதிபதியின் பயன்பாட்டிற்காக 2024 ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்ட புதிய வாகனம் ஒன்று பெறப்பட்டுள்ளதாக, தெரிவித்து கீழே காட்டப்பட்டுள்ளபடி மேலும் சில பதிவுகளும் பகிரப்பட்டிருந்ததை கவனிக்க முடிந்தது.

FB | FB | FB

சில இணைய செய்தி அறிக்கைகளிலும், இந்த வாகனத்தின் புகைப்படங்களுடன், “ஜனாதிபதி யாழ்ப்பாணப் பயணத்தின் போது புதிதாக இறக்குமதி செய்யப்பட்ட டொயோட்டா லாண்ட் க்ரூசர் வகை வாகனத்தில் பயணம் செய்தார்” எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட பதிவில் இடம்பெற்றிருந்த புகைப்படங்களில் ஜனாதிபதியை தெளிவாகக் காண முடிந்ததுடன், அவை ஜனாதிபதியின் வடக்கு விஜயத்துடன் தொடர்புபடுவதாகவே காணப்பட்டது.

இதனை அடிப்படையாகக் கொண்டு, கடந்த ஜனவரி மாதத்தில் ஜனாதிபதி யாழ்ப்பாணத்திற்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பில் நாம் கவனம் செலுத்தினோம்.

யாழ்ப்பாண விஜயத்தின் போது சமூக  ஊடகப் பதிவில் காட்டப்பட்டுள்ள வகையான வாகனத்தில் ஜனாதிபதி பயணம் செய்தாரா என்பது தொடர்பான செய்திகள்  பிரதான ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என்பதனை ஆராய்ந்த போது அவ்வாறான எந்த, காட்சிகள் பிரதான ஊடகங்களில் வெளியிடப்பட்டதாகக் காணப்படவில்லை.

இதனைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட தரப்புகளுடன் தொடர்பு கொண்டு மேலும் தகவல்களை உறுதிப்படுத்துவதற்கு நாம் நடவடிக்கை எடுத்தோம்.

ஜனாதிபதி ஊடகப் பிரிவு

சமூக ஊடகங்களில் பகிரப்படும் புகைப்படம் தொடர்பில் நாம் ஜனாதிபதி ஊடகப் பிரிவை தொடர்புகொண்டு வினவியிருந்தோம். இதன்போது ஜனவரி 16 ஆம் திகதி ஜனாதிபதி நயினா தீவிலுள்ள நாக விகாரைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதுடன், பின்னர் விகாராதிபதியின் நலனை விசாரித்து, அதன்பின் நயினாதீவில் அமைந்துள்ள கோவிலில் நடைபெற்ற விசேட வழிபாடுகளில் கலந்துகொள்வதற்காக புறப்பட்டுச் சென்றார்.

அங்கு ஜனாதிபதி கோவிலுக்குச் செல்லும்போது,  நயினாதீவு நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க அவர்களின் வாகனத்தில் சென்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.

மேலும், ஜனாதிபதி நாகதீப விகாரைக்குச் சென்று மதச் சடங்குகளில் ஈடுபட்ட பிறகு, விகாராதிபதியின் நலம் குறித்து விசாரித்ததை, ஜனாதிபதி ஊடகப் பிரிவு மற்றும் பிரதான ஊடகங்கள் புகைப்படங்களுடன் செய்தி வெளியிட்டிருந்தன.Link | Link

நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தேரர்

இது தொடர்பில் நாகதீப ரஜமகா விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தேரரிடம் நாம் வினவியபோது, சமூக ஊடக பதிவுகளில் காணப்படும் வாகனம் அவரது சொந்த வாகனம் எனவும், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்கள் நாகதீப விகாரைக்கு வந்தபின் கோவிலுக்குச் செல்ல அவரது சொந்த வாகனத்தையே  வழங்கியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

 நாகதீப ராஜமகா விகாரையின் விகாராதிபதி அதி வணக்கத்திற்குரிய  நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸநாயக்க தேரர், சமூக ஊடகங்களில் ஒரு காணொளியை வெளியிட்டிருந்தார், தான் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர் என்றும், ஆனால் அவர் உண்மையைப் பேசுகிறார் என்றும், ஜனாதிபதி அநுர  நயினாதீவு கோயிலுக்கு சென்றபோது பயன்படுத்திய வாகனம் குறித்து சமூக ஊடகங்களில் தவறான விளக்கங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறியுள்ளார்

ஜனவரி 16 ஆம் திகதி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாகதீப விகாரைக்குச் சென்று, மதச் சடங்குகளைச் செய்து, அவரது நலம் விசாரித்து, பின்னர் ஜனாதிபதி கோயிலுக்கு சென்றதாகவும் அதற்காக ஜனாதிபதிக்கு அவரது சொந்த வாகனமே வழங்கப்பட்டதாகவும் ரேர் அந்த காணொளியில் குறிப்பிட்டுள்ளார். குறித்த காணொளி பின்வருமாறு

ஜனாதிபதி நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் ஆலயத்திற்கு சென்று சமய வழிபாடுகளில் ஈடுபட்ட புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புகைப்படங்களில் காணப்படும் வாகனம் நாகதீப விகாராதிபதி தேரருக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்தும் ஆதாரங்கள்

ஜனாதிபதியின் புதிய வாகனம் எனக் கூறி சமூக ஊடகங்களில் பரவி வரும் புகைப்படங்களில் காணப்படும் வாகனம், நாகதீப விகாராதிபதிக்கு சொந்தமானது  தேரரின் ஃபேஸ்புக் கணக்கைப் பரிசோதித்தபோதும் உறுதியானது.

ஜனவரி 22 ஆம் திகதி, விகாராதிபதி  தமது சொந்த வாகனத்தின் அருகில் நிற்கும் புகைப்படமும் அவரின் ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டிருந்தது.

Facebook | Archived Link

சர்ச்சையை ஏற்படுத்திய யாழ்ப்பாண திஸ்ஸ விகாரையின் கட்டுமான பணிகளைப் பார்வையிடச் சென்ற சந்தர்ப்பத்தை காட்டும் கீழ்க்காணும் புகைப்படங்களை ஆய்வு செய்தபோதும், சமூக ஊடகங்களில் பரவி வரும் அந்த அதிசொகுசு வாகனம் நாகதீப விகாராதிபதிக்கு சொந்தமானது என்பதை உறுதிப்படுத்த முடிகிறது.

மேலும், கடந்த 02 ஆம் திகதி ஒரு ஊடகவியலாளர் தனது X கணக்கில் அந்த புகைப்படங்களை வெளியிட்டிருந்தார்.

X

ஜனவரி  16 ஆம் திகதி எடுக்கப்பட்ட   ஜனவாரி 2 ஆம் திகதி எடுத்த
புகைப்படம்                                                   புகைப்படம்

திஸ்ஸ விகாரையின் நிலையை ஆய்வு செய்வதற்காக நாகதீப விகாராதிபதி ஜனவரி 02 ஆம் திகதி குறித்த வாகனத்தில் திஸ்ஸ விகாரைக்கு சென்றிருந்ததாக ஊடகங்களில் வெளியிடப்பட்ட செய்திகளை ஆய்வு செய்தபோதும், இது மேலும் உறுதிப்படுத்தப்படுகிறது.

பிராந்திய ஊடகவியலாளர்கள்

நாம் குறித்த விவகாரம் தொடர்பில் யாழ். ஊடகவியலாளர்களிடம் வினவியபோது, நாகதீப விகாரைக்கு சென்று மத வழிபாடுகளில் ஈடுபட்ட பிறகு, ஜனாதிபதி,  விகாராதிபதியின் சொந்த  வாகனத்தில் நாகபூஷணி அம்மன் விகாரைக்குச் சென்றதாகவும், குறிப்பிட்டார்.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் ஜனாதிபதியின் யாழ். விஜயத்தின் போது, புதிதாக கொண்டுவரப்பட்ட அதிசொகுசு வாகனத்தில் சென்றார் என தெரிவிக்கப்படும் தகவல் தவறானது என்பதுடன்,  ஜனாதிபதி நாகதீப விகாரையின் மதச் சடங்குகளில் ஈடுபட்ட பின்னர், அதே தீவில் அமைந்துள்ள நாகபூஷணி அம்மன் கோவிலுக்கு நாகதீப விகாரை விகாராதிபதியின்  சொந்த வாகனத்தையே பயன்படுத்தியுள்ளார் என்பது கண்டறியப்பட்டது.

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம். 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Avatar

Title:ஜனாதிபதி அதிசொகுசு வாகனத்தில் யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தாரா?

Fact Check By: Suji shabeedharan 

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *