
அமெரிக்காவின் தாக்குதலுக்கு உள்ளான ஈரான் கப்பலில் இருந்த பயணிகளை மீட்க விரைவாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது. இதற்காக பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்தனர். அதேவேளை, சிலர் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவிக்கையில், இந்த நடவடிக்கையின் காரணமாக அமெரிக்காவை ஆதரிக்கும் ஏனைய நாடுகளிடமிருந்து இலங்கைக்கு தேவையற்ற பிரச்சினைகள் உருவாகலாம் என்று கூறப்பட்டது.
அந்தவகையில், மத்திய கிழக்கில் நிலவும் போர்முனை நிலைமைகளில் நேரடியாக ஈடுபடாத இலங்கையை, மத்திய கிழக்கு நாடுகளுடன் சேர்த்து பயணிப்பதற்கு ஆபத்திற்குறிய நாடாக குறிப்பிடப்பட்டதாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக் முடிந்தது.
இந்த ஆபத்து குறித்து உண்மையான தகவல்களை கண்டறிவதற்காக ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
Fact Check (உண்மை அறிவோம்)

என்ன மக்கள் நம்மளையும் அந்த list ல சேர்த்து விட்டானோல்…
சரி கத முடிங்சி.. என தெரிவிக்கப்பட்டு குறித்த பதிவானது 2026.03.06 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
Fact Check (உண்மை அறிவோம்)
மேலே பகிரப்பட்ட சமூக ஊடகப் பதிவில் குறிப்பிடப்பட்டதன்படி 7NEWS என்ற அவுஸ்திரேலிய செய்தி தொலைக்காட்சி, பயணிப்பதற்கு ஆபத்திற்குரிய நாடுகள் பட்டியலில் இலங்கை பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தோம்.
இதன்போது, 7NEWS தொலைக்காட்சி வெளியிட்ட செய்தியில் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர்முனை நிலைமையை முன்னிட்டு, அந்தப் பகுதியில் உருவாகியுள்ள உலகளாவிய விமானப் போக்குவரத்து தடைகள் மற்றும் பயண அபாய பகுதிகள் குறித்து விவாதிக்கப்பட்டுள்ளது.
அதன் போது, பயணம் செய்ய வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை இடம்பெற்றதாகவும், சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ள படத்தில் காட்டப்பட்டுள்ள வரைபடத்தில் அது குறிக்கப்பட்டிருந்ததாகவும், அதைப் பற்றி செய்தி வாசிப்பாளர் குறிப்பிட்டதாகவும் காணப்பட்டது. குறித்த காணொளியை இங்கே காண்க
அவுஸ்திரேலியாவின் பிற முக்கிய ஊடகங்களிலும் இலங்கை குறித்து புதிய எந்தவொரு பாதுகாப்பு அபாயமும் குறிப்பிடப்படவில்லை
ABC News, SBS News, The Sydney Morning Herald மற்றும் The Guardian Australia போன்ற முக்கிய அவுஸ்திரேலிய ஊடகங்கள், மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் நிலைமைகளுடன் தொடர்புடைய “உயர் அபாயம் கொண்ட பயண இடங்கள்” என்ற வகையில் அவுஸ்திரேலியா, இலங்கையை அண்மையில் புதியதாக வகைப்படுத்தியதாக எந்தவொரு செய்தியையும் வெளியிடவில்லை என்பதனை அறியமுடிந்தது.
மார்ச் 2, 2026 அன்று வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில், அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பென்னி வோங், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்கள் காரணமாக ஏற்படும் பயண இடையூறுகளுக்கு அவுஸ்திரேலியர்கள் தயாராக இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ளார். பல மத்திய கிழக்கு நாடுகளில் விமான ரத்து, வான்வெளி மூடல்கள் மற்றும் பாதுகாப்பு அபாயங்கள் தொடர்பில் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த போதிலும், அதில் அதிகரித்த பயண எச்சரிக்கைகளுக்கு உட்பட்ட இடங்களில் இலங்கை சேர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் சமீபத்திய அறிவுறுத்தல்களுக்கு ஏற்ப Smartraveller இணையதளத்தைப் பின்பற்றுமாறு அதில் அறிவிக்கப்பட்டுள்ளது. Smartraveller அவுஸ்திரேலியர்களுக்கு மத்திய கிழக்கின் பல நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டாம் எனப் பரிந்துரைத்துள்ளது. இதில் பஹ்ரைன், ஈரான், ஈராக், இஸ்ரேல், குவைத், லெபனான், பலஸ்தீன், கத்தார், சிரியா, ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் யேமன் ஆகிய நாடுகள் அடங்கும்.
அத்துடன் அவுஸ்திரேலியர்களுக்கு ஜோர்தான், ஓமான் மற்றும் சவுதி அரேபியா போன்ற நாடுகளுக்குப் பயணம் செய்ய வேண்டிய அவசியம் இருந்தால், அதை மீண்டும் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம்
இலங்கை “உயர் அபாயம்” கொண்ட பயண இடமாக வகைப்படுத்தப்பட்டதாக ஆஸ்திரேலியா தனது பயண அறிவுறுத்தல்களை மாற்றியுள்ளது என்பதற்கான தகவலை கொழும்பில் உள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் மறுத்துள்ளது.
இலங்கைக்கு அவுஸ்திரேலியாவின் பயண அறிவுறுத்தல் நிலை மாற்றப்படவில்லை என்றும், போர் நிலைமையால் இலங்கை “உயர் அபாய” வகைப்படுத்தலுக்கு சேர்ந்துள்ளதாக இணையத்தில் பரவுகின்ற தகவல்கள் தவறானவை என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், புதுப்பிக்கப்பட்ட மற்றும் துல்லியமான பயண வழிகாட்டல்களுக்கு பயணிகள் அதிகாரப்பூர்வ Smartraveller இணையதளத்தை மாத்திரம் பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Smartraveller இணையதளத்தில் இலங்கைக்கு வழங்கப்பட்ட பயண அறிவுறுத்தல்
அவுஸ்திரேலியாவின் அதிகாரப்பூர்வ பயண அறிவுறுத்தல் சேவையான Smartraveller இணையதளத்தின் படி, இலங்கை “2ஆம் மட்டத்தில்” உள்ளது, இந்த நிலையானது சுட்டிக்காட்டுவது என்னவெனில் பயணிகள் “அதிக கவனமாக இருக்க வேண்டும்” என்பதாகும்.
இந்த எச்சரிக்கை மத்திய கிழக்கு முரண்பாடுகளுக்காக விடுப்பட்டது அல்ல, மாறாக பொதுமக்கள் போராட்டங்கள் மற்றும் சாதாரண பாதுகாப்பு அபாயங்களுடன் தொடர்புடையது.

அந்த Smartraveller இணையதளம் இறுதியாக 2026 ஜனவரி 23 ஆம் திகதி புதுப்பிக்கப்பட்டுள்ளதுடன். அதில் உள்ள தகவல்கள் 2026 மார்ச் 10ஆம் திகதி வரை செல்லுபடியாகும். இந்த புதுப்பிப்பில் குறிப்பிடப்பட்டிருப்பது, கடந்த தித்வா புயலின் தாக்கத்துக்குப்பின் நிலை மற்றும் இலங்கைக்கு பயணம் செய்யும் முன் பாதைகள் மற்றும் வழித்தடங்களை சரிபார்க்க வேண்டும் என்பதையும், பயணத்திற்குத் செல்லும் இடங்கள் மற்றும் பாதை சரிபார்ப்புகளை உள்ளூர் சேவை வழங்குநர்களிடமிருந்து அதிகாரப்பூர்வ தகவல்களை பெற்றுக்கொண்டு பாதுகாப்பாக செயல்பட வேண்டும் என்பதையும் மாத்திரமே குறிக்கின்றது.
எனினும், அதில் மத்திய கிழக்கு முரண்பாடுகளுடன் தொடர்புடைய “உயர் அபாயம்” குறித்து எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை. இதன் மூலம், மத்திய கிழக்கில் ஏற்பட்ட நிலைமையின்போதும், இலங்கை அவுஸ்திரேலிய அரசு இலங்கையை “உயர் அபாயம்” கொண்ட நாடாக வகைப்படுத்தப்படவில்லை என்பதுதான் உறுதியாககின்றது.

www.smartraveller.gov.au| Archived Link
முக்கிய நாடுகளின் அடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படும் பயண அறிவுறுத்தல்களின் ஒப்பீடு
போர் நிலைமை காரணமாக மற்ற நாடுகள் இலங்கையை பயண அபாயம் உள்ள நாடாக வகைப்படுத்தியதா என்பதையும் நாம் ஆராய்ந்த போது அதுபோன்று எந்த செய்தியும் வெளியிடப்படவில்லை என்பது உறுதியானது.
எனவே மற்ற முக்கிய மேற்கத்திய நாடுகளில் இலங்கைக்கு வழங்கப்பட்ட பயண அறிவுறுத்தல்களை ஆராயும் போது, அவுஸ்திரேலியா, அமெரிக்கா, கனடா மற்றும் ஐக்கிய இராச்சியம் உள்ளிட்ட பல அரசுகளின் தரவுகளின் படி, இலங்கை “மத்திய கவனத்துடன்” (Medium Precaution) பயண நிலைமையில் உள்ளது என்பதை காண முடிகிறது. இந்த அறிவுறுத்தல்கள் எதுவும், போர் நிலைமைகள் காரணமாக, இலங்கை “உயர் அபாயம்” கொண்ட நாடாக புதிய வகைப்படுத்தல் அடைந்ததாக பதிவாகவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
| நாடு | இலங்கைக்கான ஆலோசனை மட்டம் | முக்கிய காரணம் |
| அவுஸ்திரேலியா (Smartraveller வழியாக) | நிலை 2 – அதிக அளவு எச்சரிக்கை | பொது ஆர்ப்பாட்டங்கள், பொது பாதுகாப்பு பிரச்சினைகள் |
| அமெரிக்கா (அமெரிக்க வெளியுறவுத்துறை வழியாக) | நிலை 2 – அதிக கவனம் செலுத்துங்கள். | பொதுவான பாதுகாப்பு அபாயங்கள்மற்றும் முந்தைய மோதல் ஏற்பட்ட சில பகுதிகளில் உள்ள கண்ணிவெடிகள் |
| கனடா (கனடா அரசாங்க பயண ஆலோசனை வழியாக) | மிகுந்த எச்சரிக்கையுடன் இருங்கள். | போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள், பயங்கரவாத அச்சுறுத்தல்கள், சிறு குற்றங்கள் |
| ஐக்கிய இராச்சியம் (வெளியுறவு, பொதுநலவாய அமைப்பு மற்றும் அபிவிருத்தி அலுவலகம் மூலம்) | சாதாரண/நிலையான பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்தவும். | பொதுவான பயண ஆலோசனை, சில விமான இடையூறுகள் |
மேலும் இது குறித்து அவுஸ்திரேலியாவிலுள்ள இலங்கை தூதரகத்திடம் மின்னஞ்சல் மூலம் வினவியுள்ளோமட, அவர்களிடமிருந்து பதில் கிடைத்தவுடன் இந்த கட்டுரையை புதுப்பிக்க காத்திருக்கின்றோம்.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போர் பதற்றம் காரணமாக அவுஸ்திரேலியா இலங்கையை பயணிப்பதற்கு “உயர் அபாயம்” கொண்ட நாடாக வகைப்படுத்தியுள்ளது என்ற வகையில் பரவி வரும் தகவல்கள் தவறானவை என்பதுடன், இலங்கைக்கான அவுஸ்திரேலியாவின் பயண அறிவுறுத்தல்கள் மாற்றமின்றி தொடர்கின்றன என்பதுடன் பொதுமக்கள் போராட்டங்கள் ஏற்படும் வாய்ப்பு மற்றும் சாதாரண பாதுகாப்பு காரணிகளை கருத்தில் கொண்டு பயணிகள் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என மாத்திரமே அறிவுறுத்தப்பட்டுள்ளது என்பதுவும் கண்டறியப்பட்டது.
மேலும், மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக இலங்கை பயணிப்பதற்கு “உயர் அபாய” கொண்ட நாடாக புதிதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்ற கூற்று, அவுஸ்திரேலிய அரசின் அதிகாரப்பூர்வ அறிவுறுத்தல் அல்ல, மாறாக அந்நாட்டின் ஒரு தொலைக்காட்சி செய்தி ஊடகம் தவறாக வழிநடத்தும் வகையில் வெளியிட்ட செய்தி அறிக்கையே என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


