
ஈரான் – இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையில் நிலவும் போர் பதற்மானது மத்திய கிழக்கு நாடுகளையும் தற்போது தாக்கி வருகிறகு இந்த சூழலில் போரை மையப்படுத்தி பல்வேறு தகவல்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது.
அந்தவகையில் இஸ்ரேலின் ரகசியங்கள் கசியாமல் இருப்பற்காக, அந்நாட்டு குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ளCCTV கண்காணிப்புக் கேமராக்களை அந்நாட்டுப் படையினர் அதிரடியாக அகற்றி வருவதாக தெரிவித்து ஒரு காணொளி சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருவதனை காணமுடிகின்றது.
எனவே இதன் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின் விவரம் (What is the claim):
குறித்த பதிவில் இஸ்ரேல் ரகசியங்கள் கசியாமல் இருக்க அதிரடி நடவடிக்கை!
ஈரான் நடத்தும் தாக்குதல்களின் போது, இலக்குகள் சரியாகத் தாக்கப்படுகிறதா? எவ்வளவு சேதங்கள் ஏற்பட்டுள்ளன? போன்ற நேரடித் தகவல்கள் மற்றும் வீடியோக்கள் ஈரானுக்குக் கிடைப்பதைத் தடுக்க இஸ்ரேல் தீவிரமாக முயன்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, வீதிகள் மற்றும் குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ள #CCTV கண்காணிப்புக் கேமராக்களை அந்நாட்டுப் படையினர் அதிரடியாக அகற்றி வருகின்றனர்.
நேரடிப் பதிவுகள் மற்றும் சேத விவரங்கள் எதிரி நாடுகளுக்குச் சென்றடையக் கூடாது என்பதே இதன் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. என குறிப்பிட்டு 2026.03.09 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பலரும் சமூக ஊடகங்களில் இதனை பலரும் பகிர்ந்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
குறித்த காணொளி தொடர்பான உண்மையை அறிய இந்த காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று பாதுகாப்புக காரணங்களுக்காக இஸ்ரேல் படையினர் அவர்களின் நாட்டிலுள்ள பாதுகாப்பு கேமராக்களை அகற்றுவதாக ஏதேனும் செய்திகள் சர்வதேச ஊடகங்களில் வெளியாகியுள்ளதா என நாம் ஆராய்ந்தபோது அவ்வாறான எந்த செய்திகளும் வெளியாகவில்லை என்பது உறுதியானது.
எனவே நாம் இந்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவர்ஸ் இமேஜ் தேடுதலுக்கு உட்படுத்திய போது எக்ஸ் தள பக்கமொன்றில் இது போலியான செய்தி எனவும் இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதியன்று எடுக்கப்பட்ட பழைய காணொளிஎனவும் உண்மையில் இந்த காணொளி பதிவேற்றியவரின் கூற்றுப்படி, அகற்றப்பட்ட கேமராக்கள் அந்தப் பகுதியில் உள்ள குற்ற அமைப்புகளுக்குச் சொந்தமானவை எனவும் தெரிக்கப்பட்டு பகிரப்பட்ட பதிவொன்றை காணமுடிந்தது.

எனவு நாம் குறித்த பதிவில் குறிப்பிடப்பட்டிருந்த இன்ஸ்டகிராம் பக்கம் தொடர்பில் ஆய்வை மேற்கொண்டிருந்தோம். இதன்போது இந்த காணொளியானது உண்மையில் இஸ்ரேலின் மேற்கு கலிலீ பொலிஸின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 22 ஆம் திகதி வெளியிடப்பட்ட காணொளி என்பதனை அறிய முடிந்தது.
மேலும் அந்த காணொளியில் இந்த கேமராக்கள் மேற்கு கலிலீ பகுதியில் உள்ள குற்றவியல் அமைப்புகளுக்கு சொந்தமானவை, மேலும் அவை பொலிஸாரினால்அகற்றப்பட்டன என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அத்துடன் இந்த காணொளியானது 2025 ஆம் ஆண்டே சமூக ஊடகங்களில் பகிரப்பட்டுள்ளது ஆனால் தற்போதைய போர் நிலைமையானது இந்த ஆண்டு பெப்ரவரி 28 ஆம் திகதியே ஆரம்பமானது என்பதுவும் குறிப்பிடத்தக்கது.
எங்களது சமூகவலைதள பக்கங்களை பின்தொடர….
Facebook PageI Twitter PageIInstagram| Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே எமது ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலின் ரகசியங்கள் ஈரானுக்கு கசியாமல் இருப்பற்காக, அந்நாட்டு குடியிருப்புகளில் பொருத்தப்பட்டுள்ளCCTV கண்காணிப்புக் கேமராக்களை அந்நாட்டுப் படையினர் அதிரடியாக அகற்றி வருவதாக பகிரப்பட்ட காணொளி தவறானது என்பதுடன், அது 2025 ஆம் ஆண்டு மேற்கு கலிலீ பகுதியில் உள்ள குற்றவியல் அமைப்புகளுக்கு சொந்தமான கேமராக்களை இஸ்ரேலின் மேற்கு கலிலீ பொலிஸார் அகற்றும் காணொளி என்பதுவும் கண்டறியப்பட்டது.
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


