ஈரானிய தலைவரை காட்டி கொடுத்த ஜெனரல்நேரடி ஒளிபரப்பில் உயிரை மாய்த்தார் என  பகிரப்படும் காணொளி உண்மையா ? 

False சர்வதேசம் | International


INTRO :

ஈரானிய தலைவரை காட்டி கொடுத்த ஜெனரல் நேரடி ஒளிபரப்பில் உயிரை மாய்த்தார் என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ *ஈரானிய தலைவரின் சரியான இருப்பிடத்தை வெளிப்படுத்தி அவரைக் காட்டிக் கொடுத்த ஜெனரல் மனந்திரும்பிவிட்டார். நேரடி ஒளிபரப்பில் அவர் தனது உயிரை மாய்த்துக் கொண்டார். உணர்ச்சிகரமான காணொளி.*

Iran International ايران اينترنشنال #iran #muslim“என இம்  மாதம் 06  ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (06.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

அமெரிக்கா– இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலின் ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி காலமானார். குறித்த தாக்குதலிற்கு உதவிய ஜெனரல் நேரடி ஒளிபரப்பில் தனது உயிரினை மாய்த்துக் கொண்டாதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதா என தேடியபோது, அவ்வாறான எவ்விதமான செய்திகளும் எமக்கு கிடைக்கவில்லை.

ஆகவே நாம் குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது கடந்த 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி Rojhelat News என்ற எக்ஸ் தளத்தில் பதிவாகியிருந்த காணொளி எமக்கு கிடைத்தது.

x.com 

கிழக்கு குர்திஸ்தானில் உள்ள Baneh நகரத்தைச் சேர்ந்த எர்பிலில் வசிக்கும் Zahir Aminian என்ற நபர் இன்ஸ்டெகிராம் பக்கத்தில் நேரலையில் தற்கொலை செய்து கொண்டதாக குறித்த எக்ஸ் பதிவில் பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதற்கமையில், அண்மையில் யுத்தத்தில் மரணித்த  ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி மரணத்துடன் தொடர்புப்படுத்தி பகிரப்படும் குறித்த காணொளி இரு வருடங்களுக்கு முன்னரே இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் ஈரானிய தலைவரை காட்டி கொடுத்த ஜெனரல் நேரடி ஒளிபரப்பில் உயிரை மாய்த்தார் என பரவுகின்ற காணொளி  ஈரானின் உயர் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனி இறப்பதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: ஈரானிய தலைவரை காட்டி கொடுத்த ஜெனரல் நேரடி ஒளிபரப்பில் உயிரை மாய்த்தார் என பகிரப்படும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *