
INTRO :
நெதன்யாகுவின் வீட்டின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல், அவரின் சகோதரர் பலி என ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.
எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.
தகவலின்விவரம் (What is the claim):
சமூகவலைத்தளங்களில் “நெதன்யாகுவின் குடும்ப வீட்டின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதில் பெஞ்சமின் நெதன்யாகுவின் சகோதரர் இடோ நெதன்யாகு உயிரிழந்தார்.“என இம் மாதம் 10 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு (10.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.
Fact Check (உண்மை அறிவோம்)
நாம் குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வுசெய்த போது கடந்த மாதம் 10 ஆம் திகதி (2026.02.10) வெளியாகியிருந்த செய்தி அறிக்கையில் இணையத்தில் தற்போது வைரலாகின்ற காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த செய்தி அறிக்கையின்படி அமெரிக்காவின் நிவ்ஜெர்ஸியில் Galloway Township பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து என பதிவிட்டிருந்தமை காணக்கிடைத்தது.
நாம் குறித்த தகவலை அடிப்படையாக கொண்டு சில Keywords இனை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டபோது, பேஸ்புக் சமூகவலைத்தளத்திலும் குறித்த காணொளி கடந்த பெப்ரவரி மாதம் 9 ஆம் திகதி (09.02.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

குறித்த பகுதியினை நாம் உறுதி செய்துக்கொள்ள கூகுள் Map இனை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, காணொளியில் உள்ள குடியிருப்பு பகுதி அமெரிக்காவில் அமைந்துள்ளமை உறுதி செய்யப்பட்டது.
மேலும் .பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டிற்கு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவரின் சகோதரர் இடோ நெதன்யாகு உயிரிழந்தார் என்பதற்கான உறுதியான செய்தி அறிக்கைகள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.
நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நெதன்யாகுவின் வீட்டின் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல், அவரின் சகோதரர் பலி என பகிரப்படும் காணொளி ஒரு மாதத்திற்கு முன்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது.
எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….
Facebook Page I Twitter Page I Instagram | Google News Channel |TikTok| Youtube
Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.


Possessing over 3 years of experience as a web journalist in digital media in performing roles as a reviewer, news reporter and content writer. He also has skills in editorial supervising and social media management. Working as a Fact Checker since 2019 For Fact Crescendo Sri Lanka team

