இஸ்ரேலுக்கான தூதரை நிரந்திரமாக திரும்பப் பெற்றதை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என பரவும் காணொளி உண்மையா? 

False சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel


INTRO :

ஈரான் யுத்ததால் குவைத் நாட்டை விட்டு வெளியேறும் அமெரிக்க வீரர்கள் எனவும், 560 இராணுவ வீரர்கள் பலி எனவும் ஒரு தகவல் சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “ஸ்பெயின் நாட்டில் பாலஸ்தீன் தூதரகத்தை அமைத்ததற்கும்,

இஸ்ரேல் தூதரகத்தை மூடியதற்கும் ஸ்பெயின் மக்கள் கொண்டாடி மகிழ்ச்சியடைகிறார்கள் ..“என இம்  மாதம் 12  ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (12.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் குறித்த காணொளியில் சில காட்சிகளை புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்ததில், இந்த வீடியோ 2025 ஜூலை மாதத்திலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதை காண முடிந்தது. சர்வதேச ஊடகமான Al Jazeera வின் உத்தியோகப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் குறித்த காணொளியை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதம் வெளியிட்டிருந்தது.

அதில், “ஸ்பெயினின் பம்ப்ளோனா நகரில் நடைபெற்ற சான் பெர்மின் (San Fermin festival) விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கானோர் சுதந்திர பாலஸ்தீனம் கோரி முழக்கமிட்டனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Facebook 

குறித்த தகவலின் அடிப்படையில் ஆய்வினை மேற்கொண்டபோது,கடந்த வருடம் ஜூலை 6 ஆம் திகதி (2025.07.06) இது தொடர்பாக வெளியான பல செய்திகள் கிடைத்தன. அதில், ஒவ்வொரு ஆண்டும் ஸ்பெயின் பம்ப்ளோனா என்ற நகரில் ஜூலை மாதம் 6 ஆம் திகதி சான் பெர்மின் திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு திருவிழாவானது சுதந்திர பாலஸ்தீனத்திற்கு ஆதரவு, பாலஸ்தீனத்தில் நடந்து வரும் இன அழிப்புக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்ற மையக்கருத்தின் அடிப்படையில் நடந்துள்ளது. திருவிழாவில் கலந்துகொண்டவர்கள் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

efe.com I Archive

காசா மீதான தாக்குதலைக் கண்டித்து ஸ்பெயின் நாடு கடந்த 2025ம் ஆண்டு தனது இஸ்ரேல் நாட்டுக்கான தூதுவரைத் திரும்பப் பெற்றது. இந்த நிலையில் 2026 மார்ச் 11ம் தேதி இஸ்ரேல் நாட்டுக்கான ஸ்பெயின் தூதரக பதவி முடிவுக்கு வருவதாக தனது அதிகாரப்பூர்வ அரசிதழில் ஸ்பெயின் அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை ஸ்பெயின் மக்கள் கொண்டாடியதாக 

நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காணொளி  பதிவில் பாலஸ்தீனத்துடனான தூதரக உறவை தொடங்கியதற்காகவும், இஸ்ரேலுடனான தூதரக உறவை துண்டித்ததற்காகவும் ஸ்பெயின் மக்கள் கொண்டாடினார்கள் என்று பதிவிட்டிருந்தனர். 

ஆகவே நாம் பாலஸ்தீனத்துடனான தூதரக உறவை ஸ்பெயின் எப்போது தொடங்கியது என தேடிய போது, கடந்த  2024 ஆம் ஆண்டு தொடங்கியிருப்பது கண்டறியப்பட்டது. iranpress | times of Israel | reuters 

இஸ்ரேலுக்கான ஸ்பெயின் தூதரை ஸ்பெயின் நிரந்திரமாக திரும்பப் பெற்றதை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என்று பரவும் வீடியோ 2025 ஆம் ஆண்டு ஸ்பெயினில் இடம்பெற்ற பாரம்பரியமாக ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் சான்  பெர்மினா என்ற திருவிழாவின் போது எடுக்கப்பட்டது என கண்டறியப்பட்டது.

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலுக்கான ஸ்பெயின் தூதரை ஸ்பெயின் நிரந்திரமாக திரும்பப் பெற்றதை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள், என தெரிவித்து பகிரப்பட்ட காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: இஸ்ரேலுக்கான தூதரை நிரந்திரமாக திரும்பப் பெற்றதை கொண்டாடிய ஸ்பெயின் மக்கள் என பரவும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *