ஹைஃபா அணுமின் நிலையத்தை ஈரான் தாக்கியதாக பரவும் காணொளி உண்மையா ? 

Misleading சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel


INTRO :

ஹைஃபா அணுமின் நிலையத்தை ஈரான் தாக்கியதாக  ஒரு காணொளி சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த புகைப்படம் தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  | Archived Link

சமூகவலைத்தளங்களில் “முக்கியச் செய்தி

🇮🇷ஈரான், பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் ஹைஃபா அணுமின் நிலையத்தைத் தகர்த்துள்ளது.🚀

 “என கடந்த மாதம் 30 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (30.03.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் குறித்த காணொளியில் சில காட்சிகளைப் புகைப்படங்களாக மாற்றி கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது இந்த காணொளி கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வந்திருப்பதைக் காண முடிந்தது.

இந்த சம்பவம் சீனாவில் உள்ள ஒரு இரசாயனத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர விபத்தினுடையது என்பது தெரியவந்தது. இந்த சம்பவம் 2015ம் ஆண்டு சீனாவின் செஜியாங் (Zhejiang) மாகாணத்தில் உள்ள ஒரு இரசாயன தொழிற்சாலையில் நடந்தது என்று குறிப்பிட்டு வெளியான காணொளிகளும், செய்திகளும் நமக்கு காணக்கிடைத்தது.

military.com I mirror.co.uk

இதன் மூலம் சீனாவின் இரசாயன ஆலை வெடிவிபத்தின் காணொளியை இஸ்ரேலின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என்று தவறாக பகிரப்பட்டுள்ளமை  உறுதியாகிறது. 

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் இஸ்ரேலின் மின் நிலையம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் என பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு
எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: ஹைஃபா அணுமின் நிலையத்தை ஈரான் தாக்கியதாக பரவும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: Misleading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *