சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான்?

Insight இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel


INTRO :

சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “மாட்டிகினாரு முஜிபுரு

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபருடன் டெலிபோன் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் 53 தடவைகள் கைப்பேசி அழைப்புகளுடனும் உரையாடலுடனும் சம்பந்தப்பட்டிருக்கிறார். 

விசாரணையில் விடயம் தெரியவந்ததை தொடர்ந்து அவரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. 

#thinklanka #TLNews #TamilNews #SriLankaNews #FollowUsOnFacebookPage“என இம் மாதம் 27 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (27.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபருடன் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடியதாக வெளியான செய்தி தொடர்பாக சமூகவலைத்தளத்தில் தற்போது மிகவும் பேசப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான்

இந்த செய்தி தொடர்பாக தமது கருத்தினை வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினரான முஜிபுர் ரஹ்மான் இது முற்றிலும் தவறான கருத்தினை வெளியிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

குற்றப் புலனாய்வு திணைக்களம் வாக்குமூலம் அளித்ததன் பின்னர் தமது பேஸ்புக் கணக்கில் அவர் வெளியிட்ட காணொளி மூலம் அவர் பின்வருமாறு கருத்தினை தெரிவித்திருந்தார்.

“சிரச மற்றும் சக்தி தொலைக்காட்சியில் தன்னை பற்றி தவறான முறையில் ஒரு செய்தி வெளியிடப்பட்டுள்ளதாகவும் அதன் மூலம் தன்னை பற்றிய பிழையான கருத்தினை உருவாக்கும் விதமாக குறித்த செய்தி வெளியிடப்பட்டு இருக்கலாம் என நான் சந்தேகம் படுகின்றேன். அதில் போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சந்தேக நபரிடம் இருந்த தொலைபேசியில் எனது தொலைபேசி இலக்கமும் இருந்தமையால், அது குறித்து விசாரிக்க என்னை குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் அது தொடர்பில் வாக்குமூலம் வழங்க என்னை அழைந்திருந்தனர்.

குறித்த வாக்குமூலம் வழங்க நான் சென்றிருந்தபோது, அவர்கள் கைப்பற்றிய சிம் இலக்கத்தினை நான் ஆராய்ந்தபோது, இது தனக்கு நன்கு பரீசிலினை ஆன தொலைபேசி இலக்கமாகும், அந்த இலக்கத்தினை முதலில் வைத்திருந்த நபர் தன்னுடன் அரசியல் நடவடிக்கைகளில் தேர்தல் நேரத்தில் பங்கெடுத்த நபரின் தொலைபேசி இலக்கம் தான் இது மற்றும் குறித்த நபரினை நான் அறிவேன் என தெரிவித்தேன்.

குறித்த தொலைபேசி இலக்கத்தினை வைத்திருந்த நபருடன் கடந்த 2021 தொடக்கம் 2024 காலக்கட்டத்தில் தொலைபேசியில் உரையாடியுள்ளேன் மற்றும் என்னுடைய இலக்கத்திற்கு குறித்த காலக்கட்டத்திலேயே தொலைபேசி அழைப்புக்கள் வந்திருந்தன.

அந்த இலக்கத்தினை பயன்படுத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபருக்கு குறித்த தொலைபேசி இலக்கத்தினை வழங்கியுள்ளார். ஆனால் கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து எனக்கு எந்த அழைப்புக்களும் வந்திருக்கவில்லை. 

நான் குற்றப்புலனாய்வு துறையிடம் எனக்கு எந்த சமிக்ஞை கோபுரத்தில் இருந்து அழைப்புக்கள் வந்துள்ளன என வினவியபோது, அவரகள் மாளிகாவத்த மற்றும் கொட்டாஞ்சேனை ஆகிய இரு  சமிக்ஞை கோபுரத்தில் இருந்து தான் அழைப்புக்கள் வந்துள்ளதாக தெரிவித்தனர். நான் அவர்களிடம் வெலிக்கட சமிக்ஞை கோபுரத்தில் இருந்து அழைப்புக்கள் வந்துள்ளனவா என வினவியபோது குறித்த சமிக்ஞை கோபுரத்தில் இருந்து எந்த அழைப்புக்களும் வரவில்லை என தெரிவித்தனர்.

அதற்கமைய சிறையில் உள்ள நபர் எனக்கு எந்த தொலைப்பேசி அழைப்பினையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்தார்.”

இது தொடர்பாக தினமின பத்திரிக்கையிலும் செய்தி வெளியாகியிருந்தமை காணக்கிடைத்து. Dinamina Epaper

குற்றப் புலனாய்வு திணைக்களம்

இது தொடர்பாக நாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினை தொடர்புக்கொண்டு வினவியபோது குறித்த சம்பவம் தொடர்பாக இன்னும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் தற்போது அது தொடர்பாக தமது கருத்தினை வெளியிட முடியாது என தெரிவித்தனர்.

இலங்கை பொலிஸ்

நாம் இலங்கை பொலிஸ் ஊடகப்பேச்சாளரை தொடர்புக்கொண்டு குறித்த சம்பவம் தொடர்பாக வினவியபோது, தாம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இது தொடர்பாக அறிக்கையினை கேட்டுள்ளதாகவும், அது தங்களிடம் இன்னும் கிடைக்கப்பெறவில்லை எனவே இது தொடர்பாக மேலதிக கருத்துக்கள் வெளியிடமுடியாது உள்ளதாக தெரிவித்தார்.

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான் என பரவும் தகவல் தொடர்பாக தமது கருத்தினை பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

இருப்பினும் இது தொடர்பாக உத்தியோகப்பூர்வ அறிக்கைகள் எதுவும் இலங்கை பொலிஸ் அல்லது  குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் இதுவரை வெளியிடப்படவில்லை.

குறித்த தகவல்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் இந்த ஆய்வறிக்கையினை நாம் புதுப்பித்து வெளியிடுவோம்.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: சிறையில் இருந்த நபருடன் 53 தடவைகள் தொலைபேசியில் உரையாடினாரா முஜிபுர் ரஹ்மான்?

Fact Check By: S.G.Prabu

Result: Insight

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *