PSG அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என பரவும் காணொளி உண்மையா ?

False சர்வதேசம் | International

Subscribe to our WhatsApp Channel


INTRO :

பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என தெரிவித்து சமூகவலைத்தளங்களில் ஒரு காணொளி பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “பிரான்ஸ் நாட்டின்

பல இடங்கள் பற்றி எரிகின்றன.

கால்பந்து வன்முறை மீண்டும்

கடந்த வருடம் PSG வெற்றிபெற்றபோதும் இதேபோல கலவரம், இன்றும் அவ்வாறே..

வெற்றி பெற்ற பிறகும்…

பாரிஸ் நகரில் உள்ள நண்பர்கள் கவனம்  பாதுகாப்பாயிருங்கள்..“என கடந்த மாதம் 31 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (31.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

இணையத்தில் பரவி வருகின்ற குறித்த காணொளியின் சில காட்சிகளை புகைப்படமாக மாற்றி நாம் கூகுள் ரிவஸ் இமேஜினை பயன்படுத்தி ஆய்வு செய்தபோது, இது கடந்த 2022 ஆம் ஆண்டு எக்ஸ் தளத்தில் முதலில் பதியப்பட்டிருந்தமை காணக்கிடைத்தது.

அதில் “பாரிஸ் நகரின் மையத்தில் குழப்பம், வாகனங்கள் கவிழ்க்கப்பட்டு தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. மோதல்கள் தொடர்கின்றன.” என பதிவிட்டிருந்தார்.

ஆகவே இது பல வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற சம்பவம் என கண்டறியப்பட்டது. 

குறித்த காணொளி தொடர்பாக நாம் மேலும் ஆய்வினை மேற்கொண்டபோது, கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் திகதி பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் குர்திஷ் இனத்தைச் சேர்ந்த மூவர் பரிதாபமாக உயிரிழந்தனர். Bbc

குர்திஷ் இன தாக்குதல்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் குர்திஷ் கலாச்சார மையம், ஒரு உணவகம் மற்றும் சிகையலங்கார நிலையம் ஆகிய இடங்களில் நடந்த துப்பாக்கி சூட்டில் மூவர் உயிரிழந்தனர்.

69 வயதான பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த வில்லியம் மாலெட் (William Malet) என்பவரால் மேற்கொள்ளப்பட்ட குறித்த தாக்குதலில், எமின் காரா (Emine Kara), மிர் பெர்வெர் (Mir Perwer) மற்றும் அப்துர்ரஹ்மான் கிசில் (Abdurrahman Kizil) ஆகியோர் கொல்லப்பட்டனர். மேலும் மூவர் காயமடைந்தனர்.

புலம்பெயர்ந்தவர்கள் மற்றும் வெளிநாட்டினர் மீது தனக்கு “நோயியல்” (pathological) வெறுப்பு உள்ளமையினால், குறித்த தாக்குதலினை அவர் திட்டமிட்டதாக பொலிஸாரிம் ஒப்புக்கொண்டாதாக சர்வதேச ஊடகங்களில் செய்தி வெளியிட்டிருந்தமை காணக்கிடைத்தது.aljazeera

அதன் எதிரொலியாக எழுந்த ஆர்ப்பாட்டத்தின் போது, வெடித்த கலவரத்தினால் குறித்த சேதங்கள் இடம்பெற்றிருந்தமை எமது ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது. cnn

எமது ஆய்வின் போது, குறித்த ஆர்ப்பாட்டத்தின் பின்னர் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கிடைக்கப்பெற்றன. அதில் தற்போது இணையத்தில் வைரலாகின்ற காணொளியில் உள்ள காட்சிகள் பொருந்தும் விதமான புகைப்படங்களும் காணக்கிடைத்தது. afpforum

மேலும் இணையத்தில் தற்போது வைரலாகின்ற காணொளியில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு இது பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (PSG) அணி வெற்றியின் போது ஏற்பட்ட மோதல் அல்ல என்பதும் உறுதியானது.

PSG அணி வெற்றியின் போது ஏற்பட்ட மோதல்

இவ்வருடம் நடைப்பெற்ற சாம்பியன்ஸ் லீக் வெற்றியை பிஎஸ்ஜி ரசிகர்கள் கொண்டாடிய போது ஏற்பட்ட வன்முறை மோதல்களைத் தொடர்ந்து, பிரெஞ்சு பொலிஸார் 780 பேரைக் கைது செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தமையும் காணக்கிடைத்தது.theguardian

எனவே நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் PSG அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என பரவும் காணொளி தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: PSG அணி வெற்றியினால் பிரான்ஸ் நாட்டில் கலவரம் என பரவும் காணொளி உண்மையா ?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *