மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்துவிட்டதா? 

False இலங்கை | Sri Lanka
Subscribe to our WhatsApp Channel


INTRO :

மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த  “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்ததாக தெரிவித்து சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “ மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த யானை “ரந்தெனிய பண்டார” உயிரிழந்தது..

கேகாலை, ரந்தெனியாவைச் சேர்ந்த “ரந்தெனிய பண்டார” என்ற யானை, நேற்று (28) காலை மெல்சிரிபுர, ஓமரகொல்ல பகுதியில் மணல் ஏற்றிச் சென்ற லொரி ஒன்றுடன்  மோதியதில் படுகாயமடைந்து உயிரிழந்தது.

கோயில் ஊர்வலத்திற்காக இந்த யானை கேகாலையிலிருந்து பொலன்னருவ, அரலகன்விலவிற்கு ஒரு லோரி மூலம் கொண்டு செல்லப்பட்டு வந்தது. அங்கு, யானையை ஏற்றிச் சென்ற லோரி சக்கரம்  பஞ்சரானதால், அதைச் சரிசெய்வதற்காக யானை லொரியிலிருந்து  இறக்கப்பட்டு சாலையோரம் நிறுத்தப்பட்டது. யானை சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்தபோது, ​​தம்புள்ளையிலிருந்து மணல் ஏற்றிச் சென்ற ஒரு லொரி கவனக்குறைவாக ஓட்டி வந்து யானையின் மீது மோதியது. லொரியுடன் மோதியதில் யானையின் கால் முறிந்ததுடன், அதன் முதுகும் பலத்த சேதமடைந்தது.

அலட்சியமாக வாகனம் ஓட்டி விபத்தை ஏற்படுத்திய மணல் ஏற்றிச் செல்லும் லாரியின் ஓட்டுநர், சந்தேகத்தின் பேரில் மல்சிரிபுரா காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

2026.06.29 

#NewsTime #SrilankaTamilNews #DambullaNews  #EliphanrAccident ” என இம் மாதம் 29 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (29.07.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

மணம்பிட்டிய தேவாலயத்தின் வருடாந்த பெரஹெராவில் கலந்துகொள்ள, கேகாலை, ரந்தெனியவிலிருந்து பொலன்னறுவைக்கு ‘ரந்தெனிய பண்டார’ என்ற யானை கொண்டு செல்லப்பட்டுள்ளது.

குறித்த பயணத்தின் போது யானையை ஏற்றிச் சென்ற லொரியின் டயர் ஒன்றின் காற்று இறங்கியதால், டயரை சரிசெய்யும் வரை யானை லொறியிலிருந்து இறக்கப்பட்டு வீதியோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. 

அப்போது, ​​தம்புள்ளையிலிருந்து குருணாகலையை நோக்கிச் சென்று கொண்டிருந்த மணல் லொரி ஒன்று, பாதுகாப்பற்ற மற்றும் அஜாக்கிரதையான முறையில் வந்து யானையின் மீது மோதியதுள்ளது. குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த லொரியின் ஓட்டுநரை மேல்சிறிபுர பொலிசார் கைது செய்துள்ளனர்.

பின்னர் குறித்த யானை சிகிச்சைக்காக அருகிலுள்ள மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை சமூக வலைதளப் பயனர்கள் பகிர்ந்திருந்தனர்.

கால்நடை மருத்துவர் தரிந்து விஜேகோன் 

விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வரும் ‘ரந்தெனிய பண்டார’ யானைக்கு சிகிச்சையளிக்கும் கால்நடை மருத்துவர் தரிந்து விஜேகோனைத் தொடர்புகொண்டு வினவியபோது, யானை இறந்துவிட்டதாக வெளியாகும் செய்திகள் முற்றிலும் பொய்யானவை எனத் தெரிவித்தார். 

யானை தற்போது உயிருடன் இருப்பதாகவும், அதற்குத் தேவையான தீவிர மருத்துவச் சிகிச்சைகள் தொடர்ந்து அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் உறுதிப்படுத்தினார்.

மெல்சிர்புர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி:

மெல்சிர்புர பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியிடம் இது குறித்துக் கேட்டபோது, யானை உயிரிழந்ததாகப் பரவும் செய்திகள் உண்மைக்குப்புறம்பானவை எனத் தெரிவித்தார். 

கவனயீனமாக வாகனத்தை இயக்கி விபத்தை ஏற்படுத்திய டிப்பர் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த  “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்ததாக பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok | Youtube

Conclusion: முடிவு


எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94721414696) தொடர்புகொள்ளுங்கள்.


கிளெய்ம்: மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த யானை “ரந்தெனிய பண்டார” உயிரிழந்தது.

Result Stamp

Title: மெல்சிரிபுர சாலை விபத்தில் படுகாயமடைந்த “ரந்தெனிய பண்டார” யானை உயிரிழந்துவிட்டதா? 

Written By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *