மஹிந்தவிற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைக் காட்டும் புகைப்படமா இது? 

Missing Context இலங்கை | Sri Lanka

சர்ச்சைக்குரிய எயார்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பான விசாரணை இந்த நாட்களில் பரவலாகப் பேசப்படும் ஒரு தலைப்பாக மாறியுள்ளது. இதற்கு இணையாக, இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் வாக்குமூலம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அண்மையில் குறித்த ஆணைக்குழுவிற்கு வருகை தந்திருந்தார். முன்னாள் ஜனாதிபதியின் இந்த வருகையின் போது எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் பகிரப்படுவதனை காணமுடிந்தது.

எனவே அந்த புகைப்படம் தொடர்பான உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின் விவரம் (What is the claim):

Facebook | Archived Link

குறித்த பதிவில் அனுரவின் வீழ்ச்சியும் நாமலின் எழுச்சியும்.

கொழும்பின் வீதிகள் நேற்று கண்ட மக்கள் வெள்ளம் இலங்கையின் அரசியல் திசைமாற்றத்திற்கு ஒரு தெளிவான எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. மே 12, 2026 அன்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் புலனாய்வுத் திணைக்களத்திற்கு விசாரணைக்காகச் சென்றபோது, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களின் எழுச்சி, தற்போதைய அரசாங்கத்தின் மீதான மக்களின் அதிருப்தியை அப்பட்டமாக வெளிப்படுத்தியது. வெறும் ஒரு தனி மனிதருக்கான ஆதரவாக இதனைப் பார்க்க முடியாது; மாறாக, இது தற்போதைய ஆட்சியாளர்களின் தோல்விக்கு எதிரான மக்களின் ஆக்ரோஷமான குரலாகவே ஒலிக்கின்றது. முப்பது ஆண்டுகால கொடிய பயங்கரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, நாட்டை ஒரு குடையின் கீழ் இணைத்த ஒரு மகா தலைவரை, விசாரணை என்ற பெயரில் அலைக்கழிப்பதை நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளத் தயாரில்லை என்பதையே இந்த ஆர்ப்பாட்டம் பறைசாற்றுகிறது.

அரசாங்கத்தின் மீதான மக்களின் எரிச்சல் இன்று உச்சகட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் காலங்களில் வழங்கப்பட்ட கவர்ச்சிகரமான வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டு, இன்று நாடு பொருளாதார ரீதியாகத் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது. அத்தியாவசியப் பொருட்களின் விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, வரிச் சுமைகள் மற்றும் வாழ்வாதாரப் போராட்டங்கள் என சாதாரண மக்கள் அன்றாடம் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளாகி வருகின்றனர். இந்த வேதனையின் வெளிப்பாடாகவே, மஹிந்த ராஜபக்ஷ என்ற ஆளுமையின் பின்னால் மக்கள் மீண்டும் அணிதிரளத் தொடங்கியுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம், மக்களின் உண்மையான பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணத் தவறிவிட்டு, அரசியல் பழிவாங்கல்களில் நேரத்தைச் செலவிடுவதாக மக்கள் நம்புகின்றனர். இந்தச் சூழலானது ‘அனுரவின் வீழ்ச்சி’ தொடங்கிவிட்டதையே கோடிட்டுக் காட்டுகின்றது.

மறுபுறம், இந்த மக்கள் ஆதரவு அலையானது ராஜபக்ஷ குடும்பத்தின் அடுத்த தலைமுறைத் தலைவரான நாமல் ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலத்திற்குப் பெரும் உரமிடுவதாக அமைந்துள்ளது. மஹிந்த ராஜபக்ஷவைச் சிறையில் அடைத்து முடக்க நினைக்கும் அரசாங்கத்தின் ஒவ்வொரு முயற்சியும், உண்மையில் நாமல் ராஜபக்ஷவிற்கான மக்கள் அங்கீகாரத்தை அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, புலிகளை அழித்த மே மாதத்திலேயே, அந்த வெற்றியைத் தேடித்தந்த தலைவனைத் தண்டிக்கும் நோக்கம் கொண்ட இந்த விசாரணைக்குப் பின்னால் அந்நிய சக்திகளின் சதியும், புலம்பெயர்ந்த சில சக்திகளின் அழுத்தமும் இருப்பதாக மக்கள் கருதுகின்றனர்.

தேசப்பற்றுமிக்க சிங்கள மக்கள் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தேசியவாத உணர்வும், தற்போதைய பொருளாதார நெருக்கடியும் இணைந்து நாமல் ராஜபக்ஷவை ஒரு மாற்றுத் தலைமையாகவும், வருங்கால ஜனாதிபதி கனவின் நம்பிக்கையாகவும் மக்கள் மத்தியில் நிலைநிறுத்தி வருகின்றது.

இலங்கை அரசியலில் ராஜபக்ஷக்களின் சகாப்தம் முடிந்துவிட்டது என்று கணக்குப்போட்டவர்களுக்கு நேற்றைய மக்கள் கூட்டம் ஒரு பெரும் அதிர்ச்சியாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை. பசியும் பட்டினியும் மக்களை வாட்டும்போது, வெறும் ‘முறைமை மாற்றம்’ (System Change) என்ற கோஷம் மட்டும் வயிற்றை நிரப்பாது என்பதை மக்கள் உணர்ந்துவிட்டனர். பழைய நினைவுகளும், யுத்த வெற்றிக் காலத்தின் ஸ்திரத்தன்மையும் மக்கள் மனதில் மீண்டும் நிழலாடத் தொடங்கியுள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான நபர்களும், விலைவாசியால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களும் மஹிந்த ராஜபக்ஷவின் கரங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாமல் ராஜபக்ஷவின் எழுச்சிக்கு வழிசமைக்கின்றனர்.

அரசியல் பழிவாங்கல்கள் ஒருபோதும் மக்களின் ஆதரவைப் பெற்றுத் தராது என்பதையும், தேசத்தின் காவலர்களாகக் கருதப்படுபவர்களைச் சிறுமைப்படுத்துவதும் ஆட்சியாளர்களின் வீழ்ச்சிக்கே வழிவகுக்கும் என்பதைய

கொழும்பு வீதிகளில் கூடிய மக்கள் நேற்றைய தினம் அரசுக்கு உரக்கச் சொல்லியிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்ட குறித்த புகைப்படப்படம் கடந்த 2026.05.13 ஆம் திகதி பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.

மேலும் இந்த புகைப்படத்தினை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்திருந்தமையை காணமுடிந்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கடந்த மே மாதம் 12ஆம் திகதி இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார். ஸ்ரீலங்கன் விமானச் சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில், மஹிந்த ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக்கொள்வதற்காகவே அவர் அழைக்கப்பட்டிருந்ததாக முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த சந்தர்ப்பத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு வளாகத்தை சூழ கணிசமான அளவிலான மக்கள் திரண்டிருந்ததை பிரதான ஊடக அறிக்கைகளின் ஊடாகக் காண முடிந்தது.

முன்னாள் ஜனாதிபதி இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த சந்தர்ப்பத்தில் அங்கு திரண்டிருந்த மக்கள் கூட்டத்தை பின்வரும் புகைப்படங்கள் மூலமும் காணக்கூடியதா க உள்ளது.

Facebook 

இருப்பினும், பிரதான ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளின் காட்சிகள் அல்லது புகைப்படங்களில், மேலே உள்ள சமூக ஊடகப் பதிவில் காட்டப்பட்டுள்ளது போன்று இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வளாகத்தின் வலதுபுறத்தில் உள்ள வீதியில் அத்தகைய மக்கள் கூட்டம் கூடியிருந்ததாக எங்கும் தென்படவில்லை. மேலும், அந்த வளாகம் அமைந்துள்ள விதம் மற்றும் அந்த வீதி தோன்றும் விதம் என்பன, உண்மையான இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு மற்றும் அதன் வலதுபுறத்தில் உள்ள மலலசேகர வீதியின் தோற்றங்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதை Google map  ஊடாகக் காண முடிகிறது.

இந்த முரண்பாடுகள் மற்றும் மேலே உள்ள புகைப்படத்தில் காணப்படும் இயற்கைக்கு மாறான அமைப்புகளின் அடிப்படையில், இது செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டதா என்பதை அறிய நாம் AI image detection tool மூலம் ஆய்வினை மேற்கொண்டிருந்தோம். அதற்கமைய, இது செயற்கை நுண்ணறிவை (AI) பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டது.

அதற்கமைய இந்த புகைப்படம் உண்மையான புகைப்படம் அல்ல என்பது உறுதியானது.

எங்களது  சமூகவலைதள  பக்கங்களை  பின்தொடர….

Facebook PageI Twitter PageIInstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே எமது ஆய்வின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்த போது, அந்த வளாகத்தின் முன்னால் திரண்டிருந்த மக்கள் கூட்டம் என சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட மேலே உள்ள புகைப்படம், செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உருவாக்கப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அன்றைய தினம் மஹிந்த ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்து, கொழும்பில் உள்ள இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் முன்னால் கணிசமான அளவிலான மக்கள் திரண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: மஹிந்தவிற்காக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்த மக்கள் கூட்டத்தைக் காட்டும் புகைப்படமா இது?

Fact Check By: Suji Shabeedharan

Result: Missing Context

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *