தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரானாரா  கீர்த்தனா?

False சர்வதேசம் | International
Subscribe to our WhatsApp Channel


INTRO :

தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சராக  கீர்த்தனா பதிவி பிரமானம் செய்து கொண்டதாக சமூகவலைத்தளங்களில் ஒரு தகவல் பகிரப்பட்டு வருகின்றமையை காணக்கிடைத்தது.

எனவே குறித்த காணொளி தொடர்பில் உண்மையை அறிய ஃபேக்ட் கிரஸண்டோ நிறுவனம் ஆய்வொன்றை மேற்கொண்டது.

தகவலின்விவரம் (What is the claim):

facebook Link  |  Archived Link

சமூகவலைத்தளங்களில் “🫅🏻தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சர் 🎉🤩

#tvkupdate #youtubeshorts #cmvijay #tamilnadupolitics #vijayfans #trending #tvk #vijayspeech #TamilPolitics #BreakingNews “என இம் மாதம் 12 ஆம் திகதி 2026 ஆம் ஆண்டு  (12.05.2026) பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது. 

இது உண்மையென நினைத்து பலர் பகிர்ந்திருந்தமையும் காணக்கிடைத்தது.

Fact Check (உண்மை அறிவோம்)

நாம் முதலில் தமிழ் நாட்டின் முதல் பெண் அமைச்சர் யார் என கூகுள் தேடு தளத்தில் மேற்கொண்ட ஆய்வின் போது, வரலாற்று ரீதியாக, பிரித்தானிய ஆட்சிகாலத்தில் இந்தியாவின் சென்னை மாகாணத்தில் (Madras Presidency) 1946-ஆம் ஆண்டு சுகாதாரத்துறை அமைச்சராகப் பதவி வகித்த ருக்மிணி லட்சுமிபதி, மதராஸ் மாகாணத்தின் முதல் பெண் அமைச்சர் என தகவல் கிடைத்தது. Wikipedia

அதன் பின்னர் ஜோதி வெங்கடாசலம் (Jothi Venkatachalam)இவரைத் தொடர்ந்து, 1953 முதல் 1954 வரை ஜோதி வெங்கடாசலம் என்பவர் ராஜாஜி அமைச்சரவையில் மது விலக்கு மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சராக பதவி வகித்த விவரம் கிடைத்தது.

அதனை தொடர்ந்து 1957 ஆம் ஆண்டில் குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டு வென்ற லூர்தம்மாள், காமராஜ் அமைச்சரவையில் மீன்வளத்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார். அதாவது, 1957 முதல் 1962 ஆம் ஆண்டு வரை, அவர் அமைச்சராக இருந்து, மீன்வளத்துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தியிருக்கிறார்.

சமீபத்திய  வரலாற்றை எடுத்துக்கொண்டாலும் கூட ஜெயலலிதா தலைமையில் அதிமுக அரசு 2016 ஆம் ஆண்டு பதவியேற்கும் போது, ஜெயலலிதா உட்பட சரோஜா, ராஜலட்சுமி, வளர்மதி ஆகிய நான்கு பெண் அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். Article

2021ஆம் ஆண்டு திமுக அமைச்சரவையில் கூட கீதா ஜீவன், கயல்விழி செல்வராஜ் ஆகிய பெண் அமைச்சர்கள் இருந்தார்கள். 

இதற்கு முன்னர் தமிழகத்தின் முதல் பெண் அமைச்சர் லூர்தம்மாள் என பரவிய தகவல் தொடர்பாக எமது இந்திய தமிழ் பிரவினர் மேற்கொண்ட ஆய்வறிக்கை வாசிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்

நாம் மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் தேர்தல் முடிவுக்கு பின் கண்ணீர் மல்க சீமான் காணொளி வெளியிட்டதாதமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரானாரா  கீர்த்தனா என பரவும் தகவல் தவறானது என கண்டறியப்பட்டது.

எங்களது சமூகவலைதளபக்கங்களை பின்தொடர….

Facebook Page I Twitter Page I InstagramGoogle News Channel  |TikTok| Youtube

Conclusion: முடிவு

எனவே வாசகர்களே, இது போன்ற தவறான செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உறுதிசெய்யாமல் மற்றவர்களுக்குப் பகிரவேண்டாம்.

இவ்வாறான சந்தர்ப்பங்களில், இவற்றின் உண்மைத்தன்மையினை கண்டறிய எமது வாட்ஸ்அப் இலக்கத்திற்கு (+94771514696) தொடர்புகொள்ளுங்கள்.

Result Stamp

Title: தமிழ்நாட்டின் முதல் பெண் அமைச்சரானாரா கீர்த்தனா?

Fact Check By: S.G.Prabu

Result: False

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *